ஏனாதிநாத நாயனார் புராணம்


சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை


திருச்சிற்றம்பலம்

3 இலை மலிந்த சருக்கம்

ஏனாதிநாத நாயனார் புராணம்

 1. புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும்         0608-1
 தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில்     0608-2
 வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்து      0608-3
 எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர்       0608-4

 2. வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில்      0609-1
 தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்   0609-2
 வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில்       0609-3
 ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார்   0609-4

 3. தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின்     0610-1
 நன்மைக் கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் 0610-2
 மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும்    0610-3
 தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார்      0610-4

 4. வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் 0611-1
 நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில்        0611-2
 தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டு    0611-3
 ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார்        0611-4
   
 5. நள்ளர்களும் போற்றும் நன்மைத் துறையின் கண்     0612-1
 எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள்        0612-2
 தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின்   0612-3
 உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான்     0612-4
. மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள்   0613-1
 கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும்       0613-2
 பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து      0613-3
 உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான் 0613-4

 7. தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின்     0614-1
 ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம்       0614-2
 மேனாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்        0614-3
 ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான்      0614-4

 8. கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலை     0615-1
 மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்றப் 0615-2
 பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்று      0615-3
 எதிர் போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான்        0615-4

 9. தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம்   0616-1
 கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று    0616-2
 வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என         0616-3
 மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான்      0616-4

 10. வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்   0617-1
 பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு        0617-2
 பொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே       0617-3
 அங்கட் கடை நின்று அழைத்தான் ஒலி கேளா    0617-4

 11  ஆர் கொல் பொர அழைத்தார்? என்றரி ஏற்றின் கிளர்ந்து      0618-1
 சேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி        0618-2
 வார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு       0618-3
 போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்      0618-4

 12. புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும்   0619-1
 விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார்         0619-2
 மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து 0619-3
 செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள் 0619-4

 13. வந்தழைத்த மாற்றான் வயப் புலி போத்து அன்னார் முன்     0620-1
 நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால்       0620-2
 இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும்        0620-3
 சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென்     0620-4

 14. என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது      0621-1
 நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து    0621-2
 சென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக்        0621-3
 கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார்       0621-4

 15. மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடு         0622-1
 மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன    0622-2
 வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர்      0622-3
 காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர்      0622-4

 16. கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய   0623-1
 வாளளி வட்ட முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர்       0623-2
 வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர்        0623-3
 ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன      0623-4

 17. வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர்     0624-1
 தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ        0624-2
 பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர் 0624-3
 செங்கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன       0624-4

 18. வாளடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன     0625-1
 தோளடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன        0625-2
 தாளடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன    0625-3
 நாளடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில்   0625-4

 19. குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன     0626-1
 பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின        0626-2
 வெருவர எருவை நெருங்கின வீசியறு துடிகள் புரண்டன 0626-3
 இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை        0626-4

 20. நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர்      0627-1
 தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்         0627-2
 வாளடு விழுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட       0627-3
 ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும்    0627-4

 21. கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன்    0628-1
 நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர்    0628-2
 ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை   0628-3
 போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்     0628-4

 22. பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட   0629-1
 விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர்        0629-2
 முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட 0629-3
 உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் 0629-4

 23. அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு      0630-1
 படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில்      0630-2
 விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம்
                                      உலையின் முகம் பொதி         0630-3
 புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன      0630-4

 24. திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர்      0631-1
 புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு         0631-2
 கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர்
                                              தலை நின்றனர் 0631-3
 விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்       0631-4

 25. இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர்      0632-1
 வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த       0632-2
 தம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்பு        0632-3
 தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார்       0632-4

 26. வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்ப 0633-1
 நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண்         0633-2
 எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர் 0633-3
 தஞ்சிரமும் தோளுரமும் தாளுரமும் தாந்துணித்தார்      0633-4

 27. தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்        0634-1
 கொலைப் பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு    0634-2
 நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில்   0634-3
 அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார்       0634-4

 28. இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால்   0635-1
 தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு    0635-2
 மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு     0635-3
 அன்னவர் தம் முன் சென்று அதி சூரன் நேர் அடர்ந்தான் 0635-4

 29. மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச்       0636-1
 சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து 0636-2
 பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப்    0636-3
 பொற்றடந் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான்         0636-4

 30. போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்த     0637-1
 மான மிக மீதூர மண் படுவான் கண் படான்     0637-2
 ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே    0637-3
 ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான்    0637-4

 31. கேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும்         0638-1
 நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து   0638-2
 வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக எனத் 0638-3
 தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான்       0638-4

 32. இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்      0639-1
 அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து        0639-2
 கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தில் 0639-3
 வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார்       0639-4

 3.3 சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள்        0640-1
 பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து 0640-2
 மற்றவன் முன் சொல்லி வரக்குறித்தே அக் களத்தே      0640-3
 பற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார்   0640-4

 34. தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு   0641-1
 தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும்        0641-2
 ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப் 0641-3
 பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான்    0641-4

 35. வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி       0642-1
 உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு 0642-2
 வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு     0642-3
 புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்     0642-4

 36. வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து        0643-1
 நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி 0643-2
 சென்று கிடப்பளவுந் திண் பலகையான் மறைத்தே        0643-3
 முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான்    0643-4

 37. அடல் விடையேறு என்ன அடத்தவனைக் கொல்லும் 0644-1
 இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர்   0644-2
 புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்கக்         0644-3
 கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார்     0644-4

 38. கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத      0645-1
 வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என்     0645-2
 அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம்      0645-3
 கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று        0645-4

 39. கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது      0646-1
 செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை   0646-2
 எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை     0646-3
 நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார்        0646-4

 40. அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்      0647-1
 முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்    0647-2
 இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள    0647-3
 மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார்         0647-4

 41. மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப்   0648-1
 பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி        0648-2
 உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப்        0648-3
 பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்   0648-4

 42. தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடைய      0649-1
 எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி    0649-2
 உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும்         0649-3
 நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம்       0649-4


No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...