சிவனிணைந்த பெருமாள் வழிபாடு ஓர் அறிமுகம் : திருகணேசன்


சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்களிலும் காணப்படும் ஓன்று. தற்காலங்களில் சிவனாக நினைத்து வழிபடப்படும் அவர் ஓர் சோழ அரசர் குலத்தவர் என நம்மில் பலர் அறிவதில்லை. முனைவர் இரா.நிர்மலா தேவி என்ற மாற்று சமூதாய பெண்மணி தம் பதிப்பு நூலில் சிவனிணைந்த பெருமாள் ஓர் சான்றோர் குலத்தில் உதித்த மாவீரன் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். சிவனிணைந்த பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் 21 பீடங்கள் கொண்டதாக இருக்கும்.அவருடைய வரலாற்றை தினமும் தொடர்ச்சியாக நம் குழுவில் காண்போம்.. பாகம் :1 --------------------------------------- சிவனைந்த பெருமாள், சோழ குலத்தைச் சேர்ந்த செண்பகராமன் என்பவரின் மகன். தாயார் தென்காசி பாண்டிய மன்னன் சீவல மாறனின் உடன்பிறந்த சகோதரி பொன்னுருவி ஆவார். சோழப் பேரரசன் ராசராசன் ஆட்சிகால முதல் பாண்டிய நாடு சோழர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில், பாண்டிய நாட்டை நிர்வகிப்பதற்காக, தனது வாரிசுகளில் ஒருவரை "சோழ-பாண்டியன்" என்ற பட்டத்துடன் ஆட்சி புரிந்து வரும்படி நியமித்து அந்த வழக்கம் சோழராட்சி இறுதிக் கட்டம் வரை நிலைத்திருந்தது. C.E (கி.பி) 13 ம் நூற்றாண்டில் பாண்டியர் எழுச்சி பெற்று சோழர்களை தோற்கடித்து, முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பேரரசனானான். இதற்கு பின்னரும் சோழர்கள் ஒவ்வொருவராக போரிட்டு தோல்விகண்டு வந்தனர். கி.பி 13 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும் வீரனாக ஆட்சிக் கட்டிலில் இருந்த முதலாம் சடையவார்மன் சுந்தர பாண்டியன்,மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று சோழராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தான். இன்னும் வரும். பாகம் 2: சிவனைந்த பெருமாள் வரலாறு தொடர்ச்சி------ கி.பி 11 ம் நூற்றாண்டின் இறுதியில், அரசகுல மரபுகளை மீறி பெண் வழியில் , கீழ சாளுக்கியனான குலோத்துங்கன் சோழ அரசனாக பட்டம் சூட்டிக் கொண்டான். கங்கைகொண்டசோழபுரத்தில் தனது தாய்வழி பாட்டனார் முதலாம் ராஜேந்திரன் அரண்மனையில் வளர்ந்வன் இந்த குலோத்துங்கன் . இவன் வளர்ந்து கொண்டிருக்கும்போதே இவனுக்கு சோழ அரச பதவி மீது ஒரு குறி வைத்துக்கொண்டிருந்தான். குலோத்துங்கன் எப்படியெல்லாம் சூழ்ச்சிசெய்து ஆட்சியை பிடித்தான் என்ற வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்கலாம். முதலாம் ராசேந்திரன் கி.பி1012 முதல் 1044 வரை ஆட்சியிலிருந்தான்.அவன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த 7 ம் ஆண்டிலேயே அவனது மூத்த மகன் ராசாதிராசனுக்கு இளவரசு பட்டம் சூட்டி ஆட்சி நிர்வாகத்தில் பங்கேற்க செய்கிறான். முதல் ராசேந்திரன் ஆட்சியில் அமர்ந்திருந்தது 32 ஆண்டுகள் அவன் மூத்த மகன் ராசாதிராசன் ஆட்சி செய்தது 36 ஆண்டுகள் . இந்த 36 ஆண்டு ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள்தான் அவனது தந்தை முதலாம் ராசேந்திரன் உயிருடன் இல்லை. முதல் ராசேந்திரன் மறைந்த பின்னர்தான் குலோத்துங்கனின் சூழ்ச்சி அரசியல் தொடங்குகிறது. இன்னும் தொடர்ந்துவரும். பாகம் 3: சிவனைந்த பெருமாள் வரலாறு தொடர்ச்சி ----- முதல் ராசேந்திரனின் மூத்த மகன் ராசாதிராசன் கி.பி 1054 ல் மரணமடைந்த பின்னர் அவனது தம்பிமார்களான இரண்டாம் ராசேந்திரன், வீரராசேந்திரன், அதிராசேந்திரன், இராசமகேந்திரன், சோழ அயோத்திராசன்,இவர்களது குடும்பத்தை சேர்ந்தவனான பரகேசரிவர்மன் மற்றும் இவர்களது வாரிசுகளையும் சேர்த்து சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 15 க்கும் மேற்பட்டவர்கள் 10,12 ஆண்டுகளுக்குள் மர்மமானமுறையில் இறந்திருக்கின்றனர். இந்த சம்பவத்தைப் பற்றி பல வரலாற்று ஆசிரியர்கள் குலோத்துங்கன் மீது சந்தேகம் எழுவதாக குறிப்பிடுகின்றனர்; ஆனால் இவைகளை விரிவாக ஆய்வு செய்து இந்தச் சதி திட்டம் பற்றி எழுதவில்லை. "தமிழகத்தை ஆண்ட அரசகுலம் "என்ற வரலாற்று நூலில் அதன் ஆசிரியர் ஜெகநாதன் விரிவாக எழுதியுள்ளார் .சதாசிவ பண்டாரத்தார் தனது "பிற்காலச் சோழர் வரலாறு" என்ற நூலில் இதைப்பற்றி சந்தேகத்தையும் கிளப்பி அதற்கு சமாதானமும் செய்து எழுதியுள்ளார். இது ஏற்கத்தக்கதாக இல்லை. இது போன்ற நிகழ்வுகளால் சோழநாட்டிலும்,சோழ அரச குடும்பத்திலும் பதற்றத்துடன்கூடிய உள்நாட்டுக் குழப்பமான ஒர் சூழ்நிலை நிலவி அதனால் சிறிது நாட்கள் அரசனே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டத்தில், தமிழகத்தில் அண்ணாதுரை இறந்தபோது,அடுத்த முதல்வர் நெடுஞ்செழியன் வந்திருக்க வேண்டிய இடத்தில் கருணாநிதி குறுக்கு வழியில் முதல்வரானது போல் குலோத்துங்கன் சோழஅரசனாக கி.பி 1070 ல் முடி சூட்டிக்கொண்டான். சங்ககாலம் முதல் ஆண்வழிச் சமூகமாக இருந்து வரும் மூவேந்தர் குடியில், மரபுகளை மீறி, கீழைச்சாளுக்கிய பெண் வழியில் வந்த குலோத்துங்கன் ஆட்சியில் அமர்ந்ததை அரச குலச் சான்றோர்கள் ஆதரிக்கவுமில்லை,ஏற்றுக் கொள்ளவுமில்லை. இதன் காரணமாக குலோத்துங்கன் ,சோழகுல உறவினர்களாகிய வலங்கை சான்றோர்கள் மீது வெறுப்பும் ,கோபமும் அடைகிறான். தொடரும்----- பாகம் 4 : மகள் வழியில் வந்த குலோத்துங்கசோழனுடன் முரண்பாடு கொண்டிருந்த சான்றோர் போர்ப்படை பிரிவைச் சேர்ந்த ஒருபகுதியினர் இவர்கள் முதலாம் ராசரானின் உடன் கூட்டத்தினர் என வரலாற்றறிஞர்கள், திருவாளர்கள் S.ராமச்சந்திரன் மற்றும் நெல்லை நெடுமாறன் போன்றோர் உறுதி செய்துள்ளனர். இப்பிரிவினர் தங்களை "வலங்கை உய்யக்கொண்டார்கள்" என அழைத்துக் கொண்டுள்ளனர். ராசராசனுக்கு பத்துக்கு மேற்பட்ட சிறப்புப் பட்டங்கள் இருந்துள்ளன. இதில் "உய்யக் கொண்டான்" என்ற பட்டம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது . எனவேதான் இப்பெயரில் "காசு" வெளியிட்டுள்ளான். குலோத்துங்கனுடன் முரண்பட்டிருந்த இந்த போர்க் குழுவினர்,அரசனுக்கு கட்டுப்படாத ஒரு கூட்டமாக செயல்பட்டு, மக்களுக்கு தீங்கு இழைப்பவர்களை அரசன் தண்டனை வழங்குவது போன்ற செயல்களை செய்துள்ளனர்.இதற்கு ஆதாரமாக கி.பி 1080-1100 ம் ஆண்டில், பெரம்பலூர் மாவட்டம்,சிங்களாந்தபுரம் கல்வெட்டைக் கூறலாம். இக் கல்வெட்டைப்பற்றி குறிப்பிட வேண்டிய காரணம்; இக்கல்வெட்டில் அன்றைய ஆட்சியாளனாக இருந்த அரசன் குலோத்துங்கனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆட்சியாளன் பெயரை குறிப்பிடாமல் கல்வெட்டு வெளியிடுவது அக்காலத்தில் தவறு மட்டுமல்ல தண்டனைக்குரியதும் ஆகும். எஞ்சியிருந்த சான்றோர் குல போர்ப்படை பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து வீரர்களும், குலோத்துங்கன் மீது வெறுப்பு கொண்டிருந்த அரச குலத்தவர்களும், பாண்டியநாடு சென்றடைந்தனர்.மதுரையில் சோழ பாண்டியன் என்ற பட்டத்துடன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ராசராச சோழன் வாரிசுகளிடம் சேர்ந்து கொண்டனர். தொடரும்------ பாகம் 5 : கி,பி 1080 ம் ஆண்டுடன் சோழ--பாண்டியன் என்ற பட்டத்துடன் மதுரையில் புரிந்து வந்த முதலாம் ராசேந்திரனின் புதல்வர்கள் அதன் பின்னர் பேரன்மார் ஆட்சி முடிவுற்றவுடன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்ய சோழர் குடும்பத்தில் வாரிசு இல்லாமல் போய்விட்டது. அதன் காரணமாக பாண்டியர்களையே தங்களுக்கு கீழ் சிற்றரசராக இருந்து திறை செலுத்தி வரும்படி பணிக்கின்றனர். இப்படி இருந்த நிலையில் கி.பி 13 ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை பாண்டியர்கள் சோழர்களிடமிருந்து விடுபட்டு தன்னாட்சி பெறுவதற்காக பலமுறை முயன்று,போரிட்டு தோல்வியை சந்தித்துள்ளனர். இறுதியாக கி.பி 1251ல் சோழப் பேரரசன் மூன்றாம் ராசேந்திரனை தோற்கடித்து சோழர் ஆட்சியை அகற்றி, பேரரசனாக முடி சூட்டிக் கொண்டான் சடைய வர்மன் சுந்தர பாண்டியன். கடலுக்கு ஒப்பான மாபெரும் சேனையை தன்னிடம் வைத்திருந்த சோழனை வெற்றி கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. பாண்டியன் பெற்ற பெரு வெற்றிக்கு பெரிதும் காரணம் வலங்கை சான்றோர் படைப்பிரிவினர் பாண்டியன் அணியிலிருந்து போரிட்டதுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.பாண்டிய நாட்டையும்,சேர நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோழர்கள்,இந்த பரந்து விரிந்த நிலப்பரப்பை நிர்வகிக்க ஒன்றுக்கு மேற்பட்ட தனது குடும்பத்தினரை நியமித்திருந்னர்.அதில் குறிப்பிடத்தக்க ஒரு அரசகுமாரனின் பெயர் "ஆளவந்தான்" இவன் முதலாம் ராசராசனின் மற்றொரு மனைவியின் வயிற்றில் பிறந்தவனும் முதலாம் ராசேந்திரனின் சகோதரனும் ஆவான். சோழர்களின் வட இந்திய படையெடுப்பில் முக்கிய பங்கு வகித்து கங்கைக்கரை வரை சென்று வெற்றிவாகை சூடி வந்தவன். இவனையும் "கங்கைகொண்டான்"என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் என்ற ஊர் இவனது பெயரிலேயே வழங்கி வருகிறது. தென்காசி வட்டாரத்தில் ஆளவந்தான் குளம் என்று பகுதி இருப்பதை கேள்வியுற்றுள்ளேன். இவனது வம்ஸத்தவர்கள் தென்காசி பகுதியிலுள்ள "மானூர்" என்ற ஊரில் இருந்துள்ளதாக கி.பி.13 ம் நூற்றாண்டின் மேற்படிஊர் கல்வெட்டில் இவர்களை "கங்கைகொண்ட சோழ பெருமாக்கள்"என குறிப்பிடுகிறது. பெருமாள் என்பது அரசனை குறித்து சொல்லப்படும் சொல் என்பது நாம் அறிந்ததே. இந்த அரச வம்ஸத்தில் வந்தவன்தான் "செண்பகராமன்" இவரது மனைவி "பொன்னுருவி"க்கு பிறந்தவர்தான் "சிவனனைந்த பெருமாள்". தொடரும்------- பாகம் 6 : சிவனினந்தபெருமாளின் தாய் மாமன் சீவலமாற பாண்டியன் தென்காசியிலிருந்து ஆட்சி புரிந்து வந்தான். இதன் காலம் கி.பி 17ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இக்கால கட்டத்தில் மதுரையில் திருமலை நாயக்கனது ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவனது அமைச்சன் வடமலையப்ப பிள்ளை, அன்றைய ஒன்றிணைந்த திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்தான். இவனது நிர்வாகத்தில் நாடார்களுக்கு பரம்பரை பாத்தியமாக இருந்த ஏராளமான சொத்துக்களை பறிமுதல் செய்யும் நோக்கத்தில் ,அச்சொத்துகளுக்கு ,அவர்களால் கட்ட இயலாத அளவுக்கு கடுமையான வரிகளை விதித்து நாடார்களின் நிலபுலன்களை அபகரித்து வந்தான். இதற்கு சான்றாக இருக்கும் இரண்டு செய்திகளை இங்கே குறிப்பிடுகிறேன். 1 இன்றைய தூத்துக்குடி மாவட்டம் வெள்ளை கோவில் வலங்கை உய்யக்கொண்டார்கள் தமக்கிருந்த சொத்துகளுக்கு வரி கட்ட முடியாமல் கி.பி 1642 ல் வெள்ளாளர்களுக்கு, தங்களுக்கு பரம்பரையாக கூலி வேலை செய்து வந்தவர்களையும்,சொத்துக்களுடன் சேர்த்து விற்றுவிட்டிருக்கின் றனர். 2 கி,பி 1662 ல் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் "வலங்கை உய்யக்கொண்டார் பெரும்பற்று செவந்திநாடானுக்கு" கடுமையான வரிவிதித்த செய்தியாகும். வலங்கை உய்யக்கொண்டார் என்ற இந்த நாடார்கள், அரசர்களுக்கு படை உதவி புரிவதற்கு,படை வீரர்களை வைத்து பராமரிப்பதற்காக அரசர்களால் கொடுக்கப்பட்ட நிலங்களாகும். இந்நிலங்களுக்கு வரி கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. பெரும் பற்று என்றாலே பெரிய படைப்பற்று இருக்கும் இடம் என்பதாகும். பாகம் 7 : வலங்கை உய்யக்கொண்டார்களின் பெரும்பற்று நிலங்கள் மட்டுமல்ல சான்றோர் சமூகத்தின்,ஏழகப்படை, கொங்கவாளர்,எழு நூற்றுவர் மற்றும் முன்னூற்றுவர் போன்ற படைப்பிரிவினருக்கு ,போர்ப்பயிற்சி, உணவு, உடைகள் கொடுத்து பராமரிக்கவும், தமிழ் அரசர்களால் வழங்கப்பட்டிருந்த அத்தனை சொத்துகளும்,நிலபுலன்களும் முன் பதிவில் குறிப்பிட்டபடி மதுரை நாயக்கன்களால் வஞ்சகமாக பறிக்கப்பட்டிருந்தன. இந்த நிலைமை கி.பி1559ல் பாண்டியருக்கு பாண்டிய நாட்டை ,விஜயநகர பிரதிநிதியாக இருந்த,தெலுங்கு சோழனிடமிருந்து மீட்டு பாண்டியனுக்கு கொடுத்து முடி சூட்டி வரும்படி கிருஷ்ணதேவராயர் அவனது தளபதி நாகம நாயக்கனை அனுப்பினான். அவன் வீரசேகர சோழனை பாண்டியநாட்டிலிருந்து விரட்டிவிட்டு பாண்டியனிடம் நாட்டை கொடுக்காமல் தானே அரசனாக அமர்ந்து கொண்டான்.நாகம நாயக்கனுக்கு பின் அவன் மகன் விஸ்வநாத நாயக்கன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டான். இவர்கள், அடிப்படையில் போர்க்குடிகள் அல்ல.வைட்டை நாய்களை வைத்து காடுகளில் வேட்டையாடி பிழைத்து வந்த சாதியினர். துளுவ குலத்தில் உதித்தவரும்,கன்னடநாட்டில் முற்காலத்தில் ஆட்சி புரிந்த துளு பாண்டிய மரபில் வந்த விஜயநகரப் பேரரசனாக விளங்கிய கிருஷ்ண தேவராயரிடம் அடப்பக்காரர்களாக பணி புரிந்தவர்களாவர். இவர்களை கம்பளத்தார் என்றும் அழைப்பதுண்டு. எனவே,இவர்களுக்கு நாட்டின் அரசாட்சி முறைகள், நிர்வாக அறிவுத்திறன் எதுவும் கிடையாது.அதனால்,காஞ்சிபுரம் அருகி மப்பேடு என்ற ஊரைச்சேர்ந்த தொண்டைமண்டல வெள்ளாள சாதியைச் சேர்ந்த அரியநாத முதலியை தங்களது பிரதான மந்திரியாக வைத்துக் கொண்டனர். நான் வரலாற்றை நீட்டிக் கொண்டு போவதாக எண்ண வேண்டாம் .இந்தப் பின்னணிகளை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன். தொடரும்------ பாகம் 8 : பாண்டியர்களை இப்படியே விட்டு விட்டால் ,அவர்கள் மறுபடியும் மதுரையை மீட்டெடுப்பதற்கு போரிட்டுக் கொண்டிருப்பார்கள்; எனவே அவர்களது முதுகெலும்பை முறித்து மீண்டும் எழாமல் இருக்க அரியநாத முதலி சரியான யோசனை ஒன்றை, விஸ்வநாத நாயக்கனுக்கு கூறுகிறான். மதுரைக்கு வெளியே இருக்கும் பாண்டியர்களை,தென்கோடிக்கு துரத்தும் பொருட்டு அவர்கள் மீது இறுதி கட்ட போர் தொடங்க வேண்டும் என்ற திட்டத்தை முதலியார் வகுத்துக் கொடுக்கிறான். அத்திட்டத்தின்படி கயத்தாற்றில் போர் தொடங்குகிறது. இப்போரில் நாயக்கன் தரப்பில், ஆந்திரதேசத்திலிருந்து அவனுடன் வந்த படை வீரர்களும் ,பெருவாரியான மறவர்களும்,கவுண்டர், ரெட்டி போன்ற சமூகத்து வீரர்களும் பங்கு பெற்று6 மாதம் நடந்த கடுமையான யுத்தத்தில் இருவராலும் வெற்றி பெற முடியவில்லை.இந்த இடத்தில் நாயக்கர் தரப்பில் மேற்கொண்ட ஒரு வஞ்சகமான,சூழ்ச்சி நிறைந்த தந்திரத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்த கம்பளத்து நாயக்கர்கள் காடுகளில் வேட்டையாடும் காலங்களில் ,அங்குள்ள தாவரங்களின் தன்மைகள் பற்றியும் அறிந்து வைத்திருந்தனர். அதில் சில வகை செடிகளின் சாரு மிகவும் விஷத்தன்மை கொண்ட பாஷானமாகும்.இதை சில வகை ஆயுதங்களில் தடவி அதனால் காயங்கள் ஏற்பட்டால்,காயம் பட்டவர்களுக்கு தலை சுற்றல் ஏற்படுவதும், காயங்கள் எளிதில் ஆறுவதுமில்லை என்றும் கூறுவதுண்டு. கயத்தாற்றுப் போரில் பாண்டியரில் ஒருவரும் நாயக்கனும் ஒற்றைக்கு ஒற்றை போரிட்டு இரு தரப்பிலும் உயிர்பலியை தவிர்க்கலாம் என அரியநாத முதலி முன் வைத்த யோசனையை பாண்டியனும் போரிட ஒப்புக் கொண்டு இருவரும் வாட்போரில் ஈடுபட்டனர். போரிடும்போது இரு தரப்பிலும் சிறு-சிறு காயங்கள் ஏற்படுவதுண்டு .நாயக்கன் கையில் வைத்திருந்த வாளில் விஷச்சாறு தடவப்பட்டிருந்ததால், அந்த வாளினால் ஏற்பட்ட சிறிய காயங்களால் பாண்டியனால் தொடர்ந்து போரிட முடியாமல் போனதால் பாண்டியனை வெட்டி வீழ்த்தி விடுகிறான் விஸ்வநாத நாயக்கன். இச் செய்திகளை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்யவில்லை. ஆனால் நமது சமூக பெரியவர்கள் பலர் சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன். முதலியார் தீட்டிக் கொடுத்த திட்டத்தின்படி, மறவர்கள்,கவுண்டர், ரெட்டிகள்மற்றும் ஆந்திர தேச வடுகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாண்டியர்களை தோற்கடித்து தென் கோடிக்கு துரத்தி விட்டுவிட்டனர். இதற்கு பிரதிபலனாக தெலுங்கர்களுக்கு கிட்டத்தட்ட 40 பாளையங்களும்,மறவர்களுக்கு 20 பாளையங்களும் மற்றும் ரெட்டி,கவுண்டர் போன்ற பிற சாதியினருக்கு12பாளையங்களும்,ஆக மொத்தம் 72 பாளையங்கள் கொடுத்து, முதலியார் ஆலோசனைப்படி, நாயக்கன் பாளையக்காரர்களை நியமித்தான். தொடரும்------ பாகம் 9 : பாண்டியர்கள் மீண்டும் எழுச்சியுற்று பேரரசர்களாக எக்காலத்திலும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே, இது போன்று ,பாண்டிய நாட்டை 72 பாளையங்களாக கூறுபோட்டு,ஒவ்வொன்றுக்கும் ,பரம்பரை போர்க்குடிகளான சான்றோர்களை தவிர்த்து பிற சாதியினரை பாளையக்காரர்களாக நியமித்தனர். நாயக்க பெண்ணரசி மீனாட்சியின் மகன் விஜய குமார நாயக்கன் கி.பி 1753 வரை மதுரையை ஆட்சி செய்தான். இவனது ஆட்சியுடன் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து,அதன் பின்னர் ஆற்காடு நவாப் ஆட்சியை கைப்பற்றினான். நாயக்கர் ஆட்சி காலம் முழுவதிலும், பாண்டியர் குடும்பத்திலிருந்து பலர், தென் பாண்டிநாட்டின் பல பகுதிகளில் பெயரளவில் அரசர் என்ற நிலையில் ஆட்சி புரிந்தனர்;ஆனால் சிற்றரசர் என்ற நிலையில் ஒன்றிரண்டு பேர்களும்,மற்றவர்கள் சில கிராமங்களை வைத்துக் கொண்டு நிலச்சுவான் என்ற நிலையில் இருந்தனர். கி.பி 17 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ,தென்காசியைத் தலைநகராகக் கொண்டு,சிற்றரசர் நிலையில் ஆண்டுவந்தான் சீவலமாற பாண்டியன். இவனது சகோதரி பொன்னுரிவி என்பவளை,முன்பு குறிப்பிட்ட கங்கை கொண்ட பெருமாக்கள் என்ற சோழ அரச குடும்பத்தில் வந்த செண்பகராமனுக்கு மணமுடித்துக் கொடுத்து, இத் தம்பதியருக்கு பிறந்தவன் சிவனனைந்த பெருமாள். தொடரும்------- பாகம் 10 : கி.பி 13 ம் நூற்றாண்டு,மானூர் பகுதி கல்வெட்டு குறிப்பிட்ட "கங்கைகொண்ட பெருமாக்கள்"என்ற சோழ அரச குலத்தை சேர்ந்தவனான செண்பகராமன் தென்காசி பாண்டியன் சீவலமாறனின் மைத்துனன் என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கும். மானூர் பகுதி இவனது ஆட்சியின் கீழ் இருந்தது. இவனது மகன் சிவனனைந்தான், இளமை பிராயத்தை அடைந்திருந்தான். பேரழகனுக்கொப்ப நல்ல உடற்கட்டுடன்,அரச குலத்தவர் கற்க வேண்டிய போர்க்கலை,நீதி,நிர்வாகம்,சட்டதிட்டங்கள் அனைத்திலும் கற்று தேர்ந்தவனாக இருந்தான். தென்காசி பாண்டியன் சீவலமாறனுக்கு ஆண் குழந்தை இல்லாததால் தன் சகோதரி மகன் சிவனனைந்தானை தளபதியாக வைத்துக் கொண்டிருந்தான். தனக்கு ஆண் குழந்தை இல்லாததால், பாண்டியன் தனது மகளை அவனுக்கு மணமுடித்து வைத்து, தென்காசியின் ஆட்சிப் பொறுப்பை சிவனனைந்தானுக்கு வழங்கும் தீர்மானத்துடன் இருந்தான். யார் கண் பட்டதோ! என்ன கேடுகாலமோ! விதியின் விளையாட்டோ! வண்ணார்களில் ; வடுக வண்ணார், ஈரங்கொல்லி, புரத வண்ணார், பாண்டிய வண்ணார் மற்றும் துவர வண்ணார் வேறு சில பிரிவுகளும் உண்டு.இப்பிரிவுகளில் பாண்டிய வண்ணார் என்பவர்கள் நாடார்களுக்கு மட்டுமே பணி செய்பவர்கள். இவர்களுக்கு பாண்டிய வண்ணார் மடம் ஒன்று திருச்செந்தூரில் உள்ளது. மேலே குறிப்பிட்ட வண்ணார்களில் துவரவண்ணார் பிரிவைச்சேர்ந்த சின்னனைஞ்சி என்ற பெண் மீது சிவனனைந்தான் மோகம் கொண்டு விட்டான். நம்மைப் போன்ற அரசகுலத்துக்கு இது தகுந்ததல்ல. இது நம் குடும்பத்திற்கே கேடு. இந்தச் செயல் நமக்கு பெரிய இழிவைத் தேடித்தருமென்று குடும்பத்து பெரியவார்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் சிவனனைந்தான் அவர்களது அறிவுரைகளை ஏற்பதாக இல்லை. தொடரும்------ அ.கணேசன் .

3 comments:

  1. ஏழகப்படை நாடார் படையா😂😂😂 டேய் ஏன்டா இந்த பொழப்பு .

    ReplyDelete
  2. அருமையான கதை,நாங்கள் தமிழர்கள் வலங்கை சமூகத்தில் புலிகொடி ஏந்தி வந்தவன்,வண்ணத்தார் சமூகத்தை நெசவாளன் குடியை உனக்கு துணிவெளுப்பவனாக காட்டுகிறாயே உனக்கு வெக்கமாக இல்லையா

    ReplyDelete
  3. https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D#:~:text=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20(Vannar)%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9,%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.

    நீ சொல்ற கதை என்கையாது இருக்கா, உனக்கு முதல்ல வரலாறு உண்டா?
    நீ சொல்ற சமுதாய வரலாறுல கால்வாசி வரலாறு இருக்குமா உனக்கு இதுல பாண்டிய வண்ணார் உனக்கு துணிதுவைக்கங்களாம் 😂😂😂
    நீ தமிழ் குடியே இல்ல இதுல எங்களை சொல்ற எல்லாம் நேரம் தான் கதை விடு காசா பணமா.

    ReplyDelete

நம்மாழ்வார் பாண்டிர் குல நாடார் மரபினர்

நம்மாழ்வார் பாண்டியர் குல நாடார் மரபினர்🎏 ஆழ்வார்களில் நம்மாழ்வாரே முதன்மைப்படுத்திக் கூறப்படுகின்றார். ‘எந்தப் பகவான் வியாசாவதாரம் எடு...