கற்குவேல் அய்யனாரின் முதல் வாரிசு என்று அழைக்கப்படும் வீரப்ப நாடார் குடியிருப்பு கிராமத்தின் வரலாறு




கற்குவேல் அய்யனாரின் முதல் வாரிசு என்று அழைக்கப்படும்  வீரப்ப நாடார் குடியிருப்பு கிராமத்தின் வரலாறு
(நன்றி-நாடார் மகாஜன மலர்)

மானவீரவளநாட்டின் ஏழுகரைகாரருக்குத் தயாதிகளான வீரப்ப நாடன்,தீத்தியப்ப நாடன்,வடமலை நாடன் என்ற முவரும்,தமக்கு எழுவரும் சரியானபடி தாய்பாகம் தராமையினாற் பகை மேலிட்டு,காயாமொழியில் வாழ்ந்த ஆதித்த நாடன்,திக்கெல்லாம் கட்டி நாடன் ஆகியவர்கள்பால் உதவி வேண்டினர்.ஆதித்தர் முவருக்கும் படைபலமும் பண உதவியும் அளித்தனர்.போர் நிகழ்ந்தது.அப்போரில் எழுவர் தோற்றனர். முவர்,ஏழுகரைக்காரர் ஆண்ட காணியாட்சிகளைக் கைப்ற்றியாளத் தொடங்கினார்கள். குதிரைமொழித் தேரியிலிருக்கும் சுந்தராட்சியம்மன் கோயிலுக்கும்,கலியுகவரதர் ஆலயத்திற்கும், கறுக்குவேலையன் கோயிலுக்கும்,வெளிநின்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்கும் சர்வ மானியங்கள் இம் முவரது ஆட்சியில் அளிக்கப் பெற்றன.இம் முவரது காலம்-ஆதித்தர் சரித்திரக்குறிப்பின்படி கி.பி.1630 ஆகும்.இம் முவரில்,வடமலை நாடனது சந்ததியர் பள்ளிபத்திலும், வீரப்பநாடனின் சந்ததியினர் சீருடையாபத்திலும், தீத்தியப்பனின் சந்ததியினர் பரமன்குறிச்சியிலும் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்."

குறிப்பு-சீறுடையாபத்து என்ற ஊர் முஸ்லிம் மக்கள் நிறைந்தது ஆகும்.இந்த ஊரில் நாடார் தெரு என்பது வீரப்பநாடார்குடியிருப்பு கிராமமாக இருந்து வந்தது.பின்னர்,1956ல்துவக்கப்
ள்ளிஆரம்பித்த போது.அரசாங்க ஆவணங்களில்  பெயர் வீரப்ப நாடார் குடியிருப்பு என்று இருந்தது .முற்காலத்தில் கற்குவேல் அய்யனார் கோவில் வரை வீரப்பநாடார்குடியிருப்பு ஊர் விரிந்து இருந்துள்ளது.
தொகுப்பு-Rahavan Kanthapalam

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...