புறநானூறு
பொன்னும் துகிலும்
முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு
மணியும்
இடைப்படச் சேய
ஆயினும் தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம்
அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றி
யாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர்
ஆப
சாலார் சாலார்பாலார்
ஆகுபவே
[பாடலாசிரியர்-கண்ணகனார்]
பொருள்=பொண்ணும்
பவளமும் முத்தும் மாணிக்கமும் வெவ்வேறு இடங்களில் தோன்றினாலும் மாலைகளாகக் கோத்து,அருமையான
அணிகலன் அமைக்கும்போது,தம்முள் ஒருங்கே சேர்வதுபோல என்றும் சான்றோர் குலத்தினர் சான்றோர்
பக்கமே இருப்பர்.பிறர் அவர் சார்ந்த இனம் சார்ந்தே இருப்பர்
No comments:
Post a Comment