தென்னெல்லைப்போராட்டத் தியாகி .குமாரன் நாடார் அவர்களின் கல்லறையை தமிழக அரசு செப்பனிட்டு அதில் வரலாற்றுக் குறிப்பைப் பதிக்க வேண்டும்.



குமரி மாவட்டமும் செங்கோட்டை தாலுகாவும் ஐக்கிய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்திலிருந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1-ஆம் நாளை அரசுவிழாவாகவும் அதன் ஒரு பகுதியாக தென்னெல்லைக் காவலன் (குமரித்தந்தை) மார்சல் நேசமணி அவர்களின் சிலைக்கு அரசு மரியாதை அளிக்க உத்தரவிட்டதற்காகவும் முதல்வருக்கு நன்றி.
தென்னெல்லைப் போராட்டத்தின் உச்சகட்டமாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினரால் ஆகஸ்ட் 11, 1954 ஆம் நாள் அனுசரிக்கப்பட்ட விடுதலை தினத்தில் மலையாள பட்டம் தாணுபிள்ளை சர்க்கார் தொடுவட்டி, புதுக்கடைச் சந்தை பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாயினர். அதில் புதுக்கடைச் சந்தை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் உயிர்த்தியாகி. குமாரன் நாடார். அப்போது அவருக்கு வயது 58.
நவம்பர் 1 தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர், தோட்டவாரத்தில் அமைந்துள்ள சமாதிக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், உயிர்த்தியாகி குமாரன் நாடார் அவர்களின் மருமகளார் திருமதி.கோமதி அம்மையாருக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டார்.

பல்வேறு அமைப்புக்கள் சார்பில்  பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1. வறுமையிலும் வயோதிகத்திலும் வறுமையிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை இழந்து வாடும் உயிர்த்தியாகி.குமாரன் நாடார் அவர்களின் மருமகளார் திருமதி.கோமதி அம்மையார் அவர்களுக்கு தியாகியர் பென்சன் தமிழக அரசு வழங்க வேண்டும்.
2. உயிர்த்தியாகி.குமாரன் நாடார் அவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு தமிழக அரசு வேலையளித்து கௌரவிக்க வேண்டும்.
3. உயிர்த்தியாகி.குமாரன் நாடார் அவர்களின் கல்லறையை தமிழக அரசு செப்பனிட்டு அதில் வரலாற்றுக் குறிப்பைப் பதிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...