தமிழகத்தை ஆண்ட பாண்டிய குலம்-சத்திரியர் (நன்றி -தலப்பாகட்டி நாடாள்வார் வகையரா)
By
Dr Thavasimuthu maran
TEMPLES
நாடார்கள் போட்ட வழக்கு – தோல்வியும், வெற்றியும்: ஆங்கிலேயர் Act XX of 1863ன்படி, கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனி நபர் மற்றும் கமிட்டிகளிடம் விட்டு விட்டது. இதனால், வைதீக-ஆகம-சாத்திரங்களின் படி, நிர்வாகிக்கப் படும் நிலையில் சில சட்ட-திட்டங்களை ஏற்ப்டுத்தினர். அதனால் தான், குறிப்பிட்ட சமூகத்தினர், குறிப்பிட்ட சடங்குகளை, கிரியைகளை செய்யலாம் கூட்டாது போன்ற விதிமுறைகள் ஏற்படுத்தப் பட்டன. அந்நிலையில், கோவில்களில் நுழையவும் விதிமுறைகள் ஏற்பட்டன, ஆனால், சிலவற்றில் அவை முறையாக இருக்கவில்லை. இந்துக்களின் ஒரு பிரிவினர் கால்டுவெல்லின் பொய் பிரச்சாரத்தை உண்மை என நம்பி, சாணார்களை இழிந்த சாதியினர் எனவும், அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று, தடுத்ததால், ஒரு வழக்கு நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது (OS நம்பர் 88 of 1872 / Case no.88 of 1872 of Tinnevelly District Magistrate). ஈரோடு மாவட்டம் பாசூர் மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்த்து,அவர்கள் ஸ்ரீலங்காவிலிருந்து குடியேறியவர் அல்ல என்று எடுத்துக் காட்டினார். மேலும், அவர்கள் தமிழகத்தை ஆண்ட பாண்டிய குலத்தை சார்ந்தவர், சத்திரியர் என ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அதனால், ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல, கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆலய பிரவேச வழக்கில் (OS 33/1898) தில்லைவாழ் (தீட்சிதர்) அந்தணர், பாசூர் அந்தணர், மதுரை சார்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.. நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், கால்டுவெல் அவர்களின் பிரசுரங்கள் முன் ஆதாரங்கள்க வைக்கப்பட்டன. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, நாடார்களுக்காக சாட்சியம் கூறிய தீட்சிதர்களையும், பாசூர் அந்தணர்களையும் கடுமையான அவமதிப்பிற்கு உள்ளாக்கினர். அதனால், நாடார்கள் தண்டிக்கப்பட்டனர்.
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
நாடார் சமுதாயத்தின் தோற்றமும் குலதெய்வ வழிபாடும் ‘Ritual protected’ families In ‘Ritual protected’ families, on the other hand, ...
-
நாடார் தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர். நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாத...
எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)
எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment