ஏனாதி ராஜேந்திர சோழக் கேரளன்



ஏனாதி கல்வெட்டு
இடம்- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஏனாதி சிவன் கோயில் வளாகத்தில் கிடக்கும் கல்
காலம்- வீரராஜேந்திரன், யா.7, பொ ஆ.1069
செய்தி- வீரராஜேந்திர சோழனின் 7வது ஆட்சியாண்டில் ஏனாதி ராஜேந்திர சோழக் கேரளனின் மேற்பார்வையில் வாரணவாசி பெருந்தெரு வியாபாரியால் சந்தியா தீபம் விளக்கு எரிக்க நாச்சிவயல் ஆளுடையாள் வயலில் நிலம் கொடையளிக்க்ப்பட்டது. கல்வெட்டின் பின் பகுதி கிடைக்கப் பெறவில்லை.

1 வீரராஜெந்திர சோழ தேவற்கு யாண்டு ஏழாவதுபுறமலை நாட்டு ஏனாதி இராஜேந்திரசோழகேரளனான நிஷதராஜனேன்அ-
2  .....த்து நாச்சி வயக்கலும் ஆளுடையாள் வயக்கலும் தண்டேசுவர பெருவிலை-
3  .....டூர் பார்கர பட்டர்[கும்பிரேயம்] புரத்து கருணாக . .  .
4  [சந்தி] யா தீபம் என்றும் நித்தத்துவம் செல்வதாக இன்நாட்டு வாரணவாசிப் பெருந்தெரு . . . 
5  [நா] ராயண பட்ட ஸர்வக் கிருதுகளுக்கு சாரத்தங் குடுத்த நிலம் குடிகா . . . 
6  வாரகனுக்கு இப்படி ச்ந்திர ஆதித்த [வல்] செல்வதாக கல்வெட்டிக் குடுத்த
7  [ந]ல்லூரில் வார [மரக்கலுமும் இனவாஜீயும்] மற்றுமேற்பட்டி-
 -நன்றி  ஆவணம்  இதழ் 24 - 2013   ப.45

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...