சவுபாக்ய விரத சாஸ்திரம்



சவுபாக்ய விரத சாஸ்திரம்
வெற்றிலையின் காம்பில் – பிரம்ம தேவனும், நுனியில் மூதேவியும், மத்திய பாகத்தில் மகாலட்சுமியும் இருப்பதாக ஐதீகம் உண்டு. வெற்றிலையை முதன்மையாக வைத்து செய்யப்படும் பூஜைகளில் மிகவும் உன்னதமானது தாம்பூல தாரணி வழிபாடு. 

சுமங்கலிப் பெண்கள் மூன்று பேரை மஞ்சள் கொடுத்து குளிக்க வைத்து, புதுப்புடவை சட்டை கொடுத்து அலங்கரிக்க வைத்து மனைப்பலகையில் அமர வைக்க வேண்டும். ஒவ்வொரு சுமங்கலிப் பெண்ணின் முன்பும் 108 வெற்றிலைகள், வாசனை சுண்ணாம்பு, பாக்குகள் வைத்து, புவனேஸ்வரி அல்லது லலிதா பரமேஸ்வரி படத்தை எதிரில் வைத்து அருகில் முகம்பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும். 

அடுத்ததாக தேவி மகாத்மியம். சவுந்தர்ய லகரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை ஒவ்வொரு சிறு பகுதியாகப் படித்து வர வேண்டும். ஒரு சிறு பாகம் படித்து முடிந்ததும் வெற்றிலை பாக்கை சுமங்கலிகள் போடச் செய்து அம்பிகை படத்திற்குக் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். 

இவ்வாறு சுமங்கலிகள் தாம்பூலம் போடுவதற்கு அம்பிகையே நேரில் வந்து எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைவதாகக் கூறுவர். இப்படியாக, பாராயணம் செய்யும் முறை முடிந்ததும் மூன்று பெண்களையும் அம்பிகையாக பாவித்து மந்திரம் கூறி தூபதீபம், நிவேதனமாக சர்க்கரை அன்னம் படைத்து விழுந்து வணங்கி அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் வழக்கம். 
எட்டுவகை பூஜா திரவியங்கள் பட்டியலில் வெற்றிலையும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ரவிக்கைத்துணி, மஞ்சள், சந்தனம், தாம்பூலம், வாழைப்பழம், மரச்சீப்பு, வில்வப்பழம் தாமரைமலர் ஆகிய எட்டுப் பொருட்களுடன் அரசுக்குச்சி, ஜாதிப்பத்திரி சேர்த்து நெய்யுடன் கலந்து, வெற்றிலையைத் தனியாக யாகமுறைசெய்து திலகம் இடுவதால் எந்த இடத்தில் ஆகுதி செய்கிறோமோ அங்கே செய்பவருக்கும் காண்பவருக்கும் மகாலட்சுமி தேவி செல்வப் பேற்றைத் தருகிறாள் என்கிறது சவுபாக்ய விரத சாஸ்திரம்.
கட்டுரை ஆக்கம்-ஜோதிட மாமணி  SivaNarayanan

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...