சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில்


ஆடி அமாவாசை - சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில்

சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம்என ஈசன் இரண்டு சிவலிங்க மூர்த்தங்களாய் கோவில் கொண்டுள்ள இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசையும் பௌர்ணமியும் மிகவும் விசேஷமாகக் கருதப்பட்டாலும், ஆடி அமாவாசை மிகவும் போற்றப்படுகிறது. பொதுவாக ஆடி அமாவாசை அன்று மூலிகைகளின் சக்திஅபரிமிதமாக வெளிப்படுவதாகச்சொல்வார்கள். அன்றைய தினம் அதிகாலை மூன்று மணிக்குமேல் காலை எட்டு மணிக்குள் அங்குள்ள மூலிகைகள்மேல் படர்ந்து வரும் காற்றினை சுவாசிக்கும்போது உடலில் உள்ள அத்தனை நோய்களும் நீங்கும் வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபம் உள்ளதோ, அந்த அளவுக்கு சதுரகிரிக்கு இந்த ஆடி அமாவாசை ! உங்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டு இருக்கும் பிரச்னைகள் - சுமுகமாக தீர்ந்து , உங்கள் மூதாதையரின் பரிபூரண ஆசி கிடைக்க - ஆடி அமாவாசையில் சுந்தர மகா லிங்கத்தின் அருள் பெறுங்கள். !

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...