"தளபதி அனந்த பத்மநாபன் நாடாருக்கு" தச்சன்விளையில் மணி மண்டபம் மற்றும் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் "மருத்துவர் இராமதாசு அய்யா" வலியுறுத்தியுள்ளார்:

"தளபதி அனந்த பத்மநாபன்  நாடாருக்கு" 
தச்சன்விளையில் மணி மண்டபம் மற்றும் முழு  உருவ சிலை
அமைக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் "மருத்துவர் இராமதாசு அய்யா" வலியுறுத்தியுள்ளார்:

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு மலையாளிகளால் தொடர்ந்து திரிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடிமக்கள் நாடார்கள் தான் என்ற நிலையில், நாயர்கள் தான் குமரி மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் என்றும், நாடார்கள் வந்தேரிகள் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தயாரித்த 9&ஆம் வகுப்பு பாடநூலில் திரித்து எழுதப்பட்டிருந்தது. ஜானகி நாயர் என்ற மலையாள பேராசிரியர் தான் இதை திரித்து எழுதினார் என்பதை கடந்த ஆண்டு நான் அம்பலப்படுத்தினேன். அதன்பின்னர் ஒட்டு மொத்த தமிழகமே கிளர்ந்து எழுந்ததை அடுத்து, இந்தத் தவறை திருத்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புக்கொண்டது.

அதற்குப் பிறகும் நாடார் சமுதாயத்தை சிறுமைப்படுத்தி, நாயர் சமுதாயத்தை உயர்த்திப்பிடிக்கும் செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப் பட்டு வருகின்றன. 1741-ஆம் ஆண்டில் இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற டச்சுக்காரர்கள், அடுத்தக் கட்டமாக இந்தியாவை கைப்பற்றும் நோக்குடன் குளச்சல் துறைமுகம் மீது படையெடுத்தனர். அவர்களை திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனின் தளபதியாக இருந்த தமிழரான அனந்த பத்மநாபன் நாடார் தமது படைகளுடன் சென்று போரிட்டு வீழ்த்தினார். இதற்காக அவரை பாராட்டி பல நினைவிடங்களை அமைத்த மன்னன் மார்த்தாண்ட வர்மன், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரைச் சூட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயரே இவரது நினைவாக சூட்டப்பட்டது தான். அதன்பின்னர் கன்னியா குமரி மாவட்டத்தில் நடந்த தோல்சீலை போராட்டத்தின் போதும், வேறு சில நிகழ்வுகளின் போதும் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக அனந்த பத்மநாப நாடாரின் நினைவை சுமந்து கொண்டிருந்த கட்டிடங்கள் அனைத்தையும் கேரள நாயர்கள் அழித்தனர்.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேலுத்தம்பி தளவாய் நாயர் என்ற மலையாளி. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளபதியாக பொறுப்பு வகித்த இவர் தான் 1809&ஆம் ஆண்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வெட்டிப் படுகொலை செய்து கடலில் வீசியவர். தமிழர்களுக்கான வரியை இரட்டிப்பாக்கி கொடுமைப் படுத்தியவர். வீரபாண்டிய கட்டபொம்மனை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தவரும் இவர் தான். தமிழினத்தை ஒழிப்பதையே நோக்கமாக கொண்டிருந்த இவரை ஆங்கிலேயர்களை வீழ்த்திய வீரன் என்று ஒரு புறம் போற்றிக் கொண்டு, மறுபுறம் அனந்த பத்மநாப நாடாரின் சாதனை வரலாற்றை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் நாயர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசும் தெரிந்தோ, தெரியாமலோ துணை போயிருக்கிறது என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனந்த பத்மநாப நாடாரின் 
நினவாக அமைக்கப்பட்டு, பின்னர் நாயர்களால் சிதைக்கப்பட்ட கட்டிடங்களை சீரமைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக முந்தைய தி.மு.க. ஆட்சியில் வேலுத்தம்பி தளவாய் நாயருக்கு குமரி மாவட்டம் தலக்குளத்தில் ரூ.1.5 கோடியில் நினைவு இல்லமும், ரூ.35 லட்சத்தில் 7 இடங்களில் நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டன.

இவ்வாறாக, குமரி மாவட்டத்தில் நாயர்களை பெருமைப்படுத்தி, நாடார்களை அவமதிக்கும் வகையில் வரலாற்றைத் திரிக்கும் நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்கக்கூடாது. குமரி மாவட்டத்தில் வேலுத்தம்பி தளவாய் நாயர் உள்ளிட்ட மலையாளிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டும்; புதிதாக எதையும் அமைக்கக் கூடாது. அதேநேரத்தில் டச்சுப் படையை வென்ற அனந்த பத்மநாப நாடாருக்கு தச்சன்விளையில் நினைவு இல்லமும், நுழைவு வாயிலும் அமைக்கப்பட வேண்டும். 

களியக்காவிளையில் உருவச் சிலை அமைப்பதுடன், அஞ்சல் தலையும் வெளியிடச் செய்ய வேண்டும். மேலும், குமரி மாவட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சுய மரியாதைக்காகவும் போராடிய அய்யா வைகுந்தர், மார்ஷல் நேசமணி, வெள்ளையன் நாடார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

=====பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை======

வாழ்க மாவீரன்  தளபதி அனந்த பத்மநாபன்  நாடார் புகழ்
வளர்க மாவீரன்  தளபதி அனந்த பத்மநாபன்  நாடார் புகழ்

வாழ்க நாடார் குலம் 
வளர்க நாடார் குலம் 

வீழ்த்த முடியாத வீரம்
மானமே உயிர் என்ற குணம்
அதுவே நாடார் இனம்...

இவன்
மன்னர் தவசி நாடார் காமராஜர் நற்பணி மன்றம்

மற்றும்

நாடார்கள் நலன் விரும்பி..,
D.ஹரி நாடார் BA.,BL.
விக்கிரமசிங்கபுரம்.

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...