கல்விக்கண் திறந்தகாமராஜருக்கு முழுஉருவ வெங்கலசிலை அமைத்திட வேண்டும்



நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட பெருந்தலைவர்  காமராஜர் சிலை உள்ளது. சிமென்டால் அமைக்கப்பட்ட இச்சிலையை மர்ம நபர்கள்[நேருக்கு நேர் நாடார்களைச்சந்திக்க நெஞ்சில் உரமும் தைரியமும் இல்லாத பேடிகள்]சிலர், சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் சிலையின் வலது கை பாகம் உடைந்து துண்டித்து காணப்பட்டது. கீழக்கலங்கலில் நடந்த நிகழ்சியை கேள்விப்பட்டதும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் அச்சுதன் நாடாரை உடனே கீழக்கலங்கலசென்று பார்வையிட்டு வர சொன்னார்கள்.அதனபடி அச்சுதன் நாடார் கீழக்கலங்கல் சென்று காமராஜர் சிலையை பார்த்துவிட்டு ஊர் மக்களையும் சந்தித்து விவரம் அறிந்து கொண்டு தலைவருக்கு தகவல் சொன்னார்.
தீய சக்தி மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க அச்சுதன் அவர்களை உரிய மனுவினை வழங்கிட தலைவர் கேட்டு கொண்டார்.மனு கொடுத்து 20 நாளாகியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை அறிந்த தலைவர் என்.ஆர்.தனபாலன் கீழக்கலங்கலுக்கு நேரில் வந்து காமராஜர் சிலையைப் பார்வையிட்டார்.
அதன் பிறகு ஊர் மக்களை சந்தித்து விவரம் கேட்டு காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து,சமூகவிரோதிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். தமிழக அரசு முன்னாள் முதல்வரும்,கல்விக்கண் திறந்தகாமராஜருக்கு முழுஉருவ வெங்கலசிலை அமைத்திட வேண்டும்.இல்லை என்றால் அக்டோபர் 3 தேதி ஆலங்குளத்தில் மிகப் பெரிய அளவிலான உண்ணாவிரதம் இருப்போம் என்று தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...