தென்காசி மாமன்னர்
பராக்கிரம மாற பாண்டியன் சிவந்தி ஆதித்தனாரைப் பணிந்து நிற்கும் கல்வெட்டு
கி.பி.1446 இல்
தென்காசி அருள்மிகு உலகம்மன் காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலைக் கட்டிய அரிகேசரி பராக்கிரம
மாற பாண்டியனின் ஆட்சியாண்டு கிபி1422-1463 ஆகும்.இம்மன்னன் தென்காசி ஊரையும் அமைத்து
கோயில்,தேர்,தெப்பம்,ஆகியவற்றை நிறுவினான்.கி.பி 1456 இல் ஒன்பது நிலைகளுடன் 178 அடி
உயரமுள்ள அற்புதமான கோபுரத்தையும் கட்டத் தொடங்கினார்
அவரது ஆட்சியாண்டிற்குள் நிறைவு செய்ய இயலவில்லை. அரிகேசரி பராக்கிரமமாறன்,கோயிலின்
குடமுழுக்கு விழாவின்போது இக்கோயிலுக்கும்,கோபுரத்திற்கும் எக்காலத்திலாவது குறைபாடு
வந்தால்,அதனை சீர் செய்யும் அடியாருடைய பாதத்தில் என்னுடைய தலைபணிகின்றது என்று பக்திப்பெருக்குடன்
பாடல்களைப்பாடி அதனைக் கல்வெட்டாகவும் தென்காசி கோயிலின் கோபுரத்திற்கு உள் வாசலில்
பொறித்துள்ளார்.
[1] கோபுரத்தின்
நின்று போன திருப்பணியை அவருடைய தம்பி குலசேகரன் என்ற ஸ்ரீவல்லபமாறன் கி.பி.1505 நிறைவுபெறச்
செய்தார்
[2] கி.பி
1990 இல் காயாமொழி ஆதித்தர் வழித்தோன்றல் சீர்மிகு பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பழுதுபட்டு
மொட்டையாய் நின்ற கோபுரத்தை மீண்டும் கட்டி திருப்பணியை நிறைவு பெறச்செய்தார்.
தென்காசி கோயிலையும் கோபுரத்தையும் சீர் செய்யத்தக்கவராக
தனது தம்பி குலசேகரன் என்ற ஸ்ரீவல்லபனும்,தன்னுடைய சான்றோர் அரசகுல வம்சத்தில் வரவுள்ள சிவந்தி ஆதித்தனாரும்
என்பதை 534 ஆண்டுகளுக்கு முன்பாக சிவனருளால் உணர்ந்து,அவர்களுடைய பாதத்தில் பணிகின்றேன்
என்று கல்வெட்டும் பொறித்துள்ள பேறு எவருக்கும் கிடைக்காத சிறப்பு ஆகும்.
சுவையான தெளிவான
புலமைக்குச்சான்றான பாடல்கள் எப்படியுள்ளன
என்பதைப் பாருங்கள்.
பாடல்-1
மனத்தால் வகுக்கவும்
எட்டாத கோயில் வகுக்க முன்னின்று
எனைத்தான் பணிகொண்ட
நாதன் தென்காசியை என்றும் மண்மேல்
நினைத்து ஆதரம்
செய்து தங்காவல் பூண்ட நிருபர் பதம்
தனைத்தாழ்ந்து
இறைஞ்சி தலை மீது யானுந் தரித்தனனே
பாடல்-2
ஆரா யினும் இந்தத்
தென்காசி மேவும்பொன் னாலயத்து
வாராத தோர்குற்றம்
வந்தாலப் போதுஅங்கு வந்துஅதனை
நேராக வேயொழித்
துப்புரப் பார்களை நீதியுடன்
பாரோர் அறியப்
பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே
பாடல்-3
சேலே றியவயல் தென்காசி
யாலயம் தெய்வச்செய
லாலே சமைந்தது
இங்கு என் செயல் அல்ல அதனையின்ன
மேலே விரிவுசெய்
தேபுரப் பார்அடி வீழ்ந்து அவர்தம்
பாலேவல் செய்து
பணிவன் பராக்ரம பாண்டியனே
பாடல்-4
சாத்திரம் பார்த்து
இங்கு யான்கண்ட பூசைகள் தாம்நடத்திட
யேத்தியன் பால்விசுவ
நாதன்பொற் கோவிலென் றும்புரக்க
பார்த்திபன் கொள்கைப்
பராக்ரம மாறன் பரிவுடன் நம்
கோத்திரந் தன்னில்உள்
ளார்க்கும் அடைக்கலங் கூறினனே
This comment has been removed by a blog administrator.
ReplyDelete