டேவிட் நாடார் 1920 மயிலாடுதுறை சேர்மன், ஜில்லா போர்டு தலைவர், தாலுக்கா போர்டு தலைவர், தஞ்சை கல்வி, நூலக கழக தலைவர்....(நன்றி -பாபுஜி நாடார்)


1790 வாக்கில் இராமநாதபுரம் சமஸ்தான சருகணி என்ற கிராமத்தில்  அன்றைய சாதீய கொடுமையால் தலை துண்டாடப் பட்ட ஒரு குடும்ப தலைவன் அருளாந்து. கணவரை இழந்த தாய் அன்னகனி தன் ஓரே பனிரெண்டு வயது மகனை காப்பாற்ற கையில் இருந்த பணம் நகைகளுடன் நம்பிக்கையான பணியாளர்கள் சிலருடன் கடற்கரை வழியாக புலம் பெயர்ந்து வந்து சேர்ந்த இடம் காரைக்கால் - மாயவரம் இடையில் இருந்த மேமாத்தூர் எனும் தென்னை மரங்கள் சூழ்ந்த ஒரு காடான கிராமம். அவரே எங்கள் குடும்ப தலைவர் சவுரி நாடார்.

தன் குடும்பம் பாதிக்கப் பட்டதின் கோபம்...உழைக்கும் வெறி....வெள்ளையனால் மேல் குடி மக்கள் தவிர்த்து பிற்படுத்தபட்டவர்களுக்கு மறுக்கப்பட்டு இருந்த சொத்து உரிமையும் 1798 ல் வழங்கப்பட்டிருந்தது, அதை வைத்து சொத்து சொத்தாக வாங்கி குவித்தார். வசதி பெருகியது, 1850 ல் ஜாகையை மாயூரம் நகருக்கு மாறிக் கொண்டார். அவரது மகன் பொன்னுசாமி நாடார் சென்னை மாகானத்தில் முதன் முதல் 1862 ல் அமைக்கப்பட்ட 11 நகராட்சியில் ஒன்று மாயூரம் நகராட்சி, அதன் துணை தலைவர் ஆனார்.

பிராமணர்கள், சைவ பிள்ளைமார்கள் அடுத்து வேறு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்டவர் வாழ்ந்த நகரில் ஒரு தெக்கத்திய நாடார், தன் இனமே இல்லாத ஒரு ஊரில் தேர்வு.

 
1889 ல் மயிலாடுதுறை நகரத்தின் முதல் மெத்தை வீடு என கூறப்பட்ட நாடார் ஹவுஸ் சுமார் 10,000 ச.அடியில் காரைக்குடி செட்டியாருக்கு மாளிகைக்கு இணையாக கட்டினார். பயணப்பட குதிரை பூட்டிய கோச் வண்டி...பிறகு என் தாத்தா வின் தந்தை தமிழக முதல் இலவச கல்வியை தந்த டேவிட் நாடார் 1920  மயிலாடுதுறை சேர்மன், ஜில்லா போர்டு தலைவர், தாலுக்கா போர்டு தலைவர், தஞ்சை கல்வி, நூலக கழக தலைவர்....(திமுக பொது செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தன் வரலாறில் கூறுகிறார், இலவச கல்வி மயிலாதுறையில் இருந்ததால் நான் அங்கு போய் சேர்ந்தேன் என)...பிறகு அவர் மூத்த மகன் நகராட்சி துணை தலைவர்....காமராஜர் எம்எல்ஏ பதவி தர விரும்பி அழைத்தும் ஏற்காத என் தாத்தா...இப்படியாக போகிறது.....

இதை நான் ஏன் கூறுகிறேன்... என் பெருமைக்காக கூறவில்லை இந்த நாடார் சமுதாயம் பட்ட கொடுமைகள் ஒடுக்கப் பட்டதும்-எழுந்ததும்....வெள்ளையன் வருகையால் தான் சென்னை மாகான பிற்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட நாடார் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட  தமிழினங்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிமை சங்கலிகள் உடைக்கப் பட்டது. கல்வி முதல் சொத்துரிமை வரை நமக்கு கிடைக்க காரணம்... 

அன்று, சுதந்திரத்திற்கு முன் இதற்கு யார் காரணம் என்பதையும், ஆதிக்க சக்திகள் அதிகார வர்க்கத்தை கையில் வைத்து பாரத பூர்வீக மக்கள் தம் மண்ணின் மக்கள் சொத்து உரிமையை, சமூக நீதியை கூட அடைய எத்தனை ஆண்டுகள் வாய் மூடி காத்திருந்தன....அதன் பிறகே அடைய முடிந்ததை, மேலும் தமிழினம் இனம் கடந்தவன் என்பதையும்.... சாதியம் பார்க்கா மனிதர்கள் வாழ்ந்த இந்த பூமி அதை இளம் இந்த தலைமுறை அறிய வேண்டும் என்றே பதிவிடுகிறேன்....கடின உழைப்பு, உயிர் பலி என போராடி பெற்றதை மீண்டும் நாம் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பதிவிடுகிறேன்.....

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...