கழுகுமலை கல்வெட்டு - ஏனாதி-


கழுகுமலை நடுகல் கல்வெட்டு
----------------------------------- 
கழுகுமலை பகுதியை அன்று எட்டி என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்ததையும், அவனது அரண்மனையின் படைவீரர்களையும் இந்நடுகல் கூறுகிறது. 

எட்டி என்ற ஒரு குறுநில மன்னர் ஒருவன் பாண்டியருக்கு கீழடங்கி  இருந்தானென்ற தகவலை, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கிடைத்த இந்த நடுகல்லில் அறிய முடிகிறது. 

கி.பி.889 ல் பாண்டியருக்கும், சங்ககால வேளிர் வழித்தோன்றலான ஆய் மன்னர் குலதோன்றலான கருநந்தடக்கனுக்கும் கன்னியா குமரி அருகேயுள்ள அருவியூரில் போர் நடக்கிறது. இப்போரில் பாண்டியர் சார்பாய் எட்டி மன்னனின் படையும் பங்குகொள்கிறது. இப்போரில் பாண்டியர்படை வெற்றிபெறுகிறது. இப்போரினை "அருவிக்கோட்டை போர்" என அழைப்பர். 

எட்டி மன்னனின் சார்பாய் இன்றைய சென்னை அருகேயுள்ள பூவிருந்தவல்லியை சேர்ந்த "வினையன் தொழுசூரன்" என்ற வீரன் ஒருவனும், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பேரெயிற்குடி என்ற ஊரைச்சேர்ந்த "சாத்தன்நக்கன்" என்ற வீரனும் கலந்துகொண்டு இறந்து படுகின்றனர். இவர்களின் மரணத்திற்கு ஈடாக எட்டி மன்னன் இருபதுகழஞ்சு பொன்னிற்கு நிகரான நிலத்தினை இரத்த மானியமாக வழங்கியதை இக்கல்வெட்டு கூறுகிறது.
கல்வெட்டு:

“ஸ்ரீ கோமாறஞ் சடையர்
க்கு யாண்டு இருபத்து
மூன்று அவ்வாண்டு ம
லைநாட்டு சடையங் 
கருநந்தனார் மேற்படை
போய் அருவி ஊர்க்கோ
ட்டை அளித்து நன்று 
செய்து பட்டார்
பெருநேச்சுறத்து 
எட்டி மண்ணனாயின ம 
ங்கல ஏனாதிகள் வீட்டு 
கோயிற் சேவகரிருவர் 
அவனிலோருவன் 
றொண்டை நாட்டு பூந்த
ண்மலி  
வினையந் தொழு சூரன் 
ஒருவன் பேரரேயிற் குடிச்
சாத்தனக்கன் 
இவ்விருவரெயு சார்த்தி 
இருபதின் கழஞ்சு
பொன் பெறும் பூமி   
அட்டிக்கு குடுத்தான்   
கும்மணமங்கலத்து   சபையார்க்கு 
கலப்பட்டம் ஏனாதி “ 

இன்றும் குமணன் சாவடி என்ற சிற்றூர் பூந்தமல்லி ஊராட்சியின் கீழ் உள்ளது.

அருப்புக்கோட்டை என்பது அரும்புகோட்டை என்னும் சொல்லின் மருவுச் சொல் எனவும் கூறப்படுகிறது. 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது, பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக் கோட்டை என அழைக்கப்படுகிறது. அருவிக்கோட்டை தான் அருப்புக்கோட்டை என திரிந்து இருக்கலாம் அல்லது மதுரை அருப்புக்கோட்டை இனடயில் ஆவியூர் என்ற ஊர் உள்ளது.அதுகூட அருவியூராக இருந்திக்கலாம்.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...