அயினுட்டு தம்புரான் என்ற இரவி வர்ம குலசேகர பெருமாளை குமரி திருவனந்தபுரம் மாவட்ட சில திருப்பாப்பு குடும்பத்தினர் குல முன்னோராக வழிபடுகின்றனர் இவர் வேணாட்டு சேரர் ஆவார, இவர் பாண்டிய மரபைச் சார்ந்த மாறவரமன் குலசேகர பாண்டியனின் மருமகனும் ஆவார். இரவிவர்மன் தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளை குறுகிய காலத்திற்குள் (1312 – 1316) படையெடுத்துச் சென்றுள்ளார். கல்ஜி வம்சத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளை தகர்த்தார் ,
இவர் வெளியிட்ட நாணயங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாண்டிய ஆட்சியை மீட்டதை நினைவைப் போற்றும் விதமாக, சேரர்களின் சின்னமான யானையை ஒருபுறத்திலும் பாண்டியரின் சின்னமான இரட்டை மீன்களை மறுபுறத்திலும் பொறிக்கப்பெற்ற நாணயங்களை வெளியிட்டார். காக்கத்திய ஆட்சியாளரான பிரதாபருத்ரா II காலத்திய ஒரு தெலுங்கு பதிப்பில் (கிபி 1317), அவர் "மலை யாள திருவடி குலசேகரன்" என்று அழைக்கப்படுகிறார் , இவரது கல்வெட்டுகள் குமரி , திருவனந்தபுரம், காஞ்சிபுரம் ஆற்காடு போன்ற இடங்களில் கிடைக்கிறது
No comments:
Post a Comment