அனந்த பத்மநாபன் நாடான் (நன்றி Eswaran nadar )


சுதந்திரத்தை கொண்டாடும் நாம் சுந்தந்திரத்திர்க்கு போராடிய நம் தலைவர்களையும் சிறிது எண்ணிப் பார்ப்போம்..🇮🇳

1741-இல் குளச்சலில் நடைபெற்ற குளச்சல் சண்டையில் மார்த்தாண்டவர்மா அரசுக்கும் - டச்சுப் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுக்காரர்களைத் தோற்கடித்து அவர்களின் படைத்தலைவன் டிலனாயைக் கைது செய்தார். இப்போரில் அனந்த பத்மநாப நாடார் தலைமையில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த 108 நாடார் ஆசான்களின் துணைக் கொண்டு டச்சுப் படையினரை தோற்கடித்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிய அனந்த பத்மநாபன் நாடாருக்கு, மார்த்தாண்டவர்மா ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கியதற்கான செப்புப்பட்டயங்கள் பல உள்ளன.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இந்திய எல்லைக்குள் நுழைய முனைந்த டச்சுப்படையை அடிபணிய வைத்த வென்ற முதல் தமிழன் வீரத்தளபதி அனந்தபத்மநாப நாடார் அவர்களே..

நம் தலைவர்கள் இரத்தம் சிந்தி வாங்கிய சுந்திரத்தை 
அர்த்தமுள்ளதாக பயன்படுத்துவோம்..

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...