சிந்துவெளி -- அரப்பா அரசனது முடிசூட்டு விழா . (நன்றி -Poorna Chandra Jeeva)


சிந்துவெளி --  அரப்பா 
அரசனது முடிசூட்டு விழா . 

சோழப்பேரரசன் 
       இராஜேந்திர சோழன் 
முடிசூட்டு  விழா நினைவு 
        முத்திரைப்  பதிவு . 

      சிந்துவெளி நாகரிக முத்திரைகள் தரும் குறிப்பின்படி  மிகப்பெரிய சிந்து நாகரிக நிலப்பரப்பு பல்வேறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் என்று கருதலாம் . அரப்பா முத்திரை கள் வழி அப்பகுதி  மலாள நாடு என்று அழைக்கப்பட்டதாக தெரிந்து கொள்ள முடிகிறது . மலைகள் சூழ்ந்த அப்பகுதி மலையாள நாடு என்று பெயர் பெற்றிருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை  .  

        நிலவளமும்  நீர்வளமும் பெற்று  ,  மலைவளம் நிறைந்த அப்பகுதி ஐந்து ஆறுகள் பாய்ந்து வளமூட்டியதால் பின்னர் வந்த ஆரியர்கள்  அதனைப் பஞ்சாப் என்று அழைத்தனர் . சிந்து நாகரிக காலத்தில் இப்பகுதி ஐயாறு என்றும்  ,  அதனால் இறைவன் ஐயாறய்வ்வ  என்று அழைக்கப்படு கிறார் என்று முத்திரைகளால் அறிந்து கொள்கிறோம் .  பஞ்சாப் சிந்து நாகரிக  காலத்தில்  அய்யாறு என்று பெயர் பெற்று இருந்ததை  அரப்பா  முத்திரை 4319 குறிப்பிடுகிறது . 
 
    #   வ்வ  ய்  யார்  அய்   அய்   '  ட்   ட 
    =   தட '   அய்ய  அய்யாறய்வ்வ 

அய்யாறு  +  அய்வ  =  அய்யாறு என்னும் இடத்து  அய்வ்வன் . அய்வ்வன் =  ஐந்தானவன் .   

        தமிழகத்திலும் அத்தகைய ஐந்து ஆறுகள் ஓடுமிடம் ஐயாறு எனப்படு கிறது .  நான் சிறு வயதில்  வளர்ந்த 
 திருவையாறுதான் அது . தஞ்சாவூர் அருகில் அவ்வூர் உள்ளது . நாம் தமிழ் நாட்டில் அவ்வூர் இறைவனை வடமொழிப்படுத்தி பஞ்ச நதீஸ்வரர்  என்று அழைப்பதையே  சிந்து நாகரிக அரப்பா மக்கள்  ஐயாறைவ்வ --  அய்யாறு  அய்வ்வ என்று அழகுத் தமிழில் அழைத்தனர் .  அத்தகைய வளமான நிலப்பகுதியை  ஆண்ட அரசன் மலாள நாடன் எனப்பட்டான் . 
     அரப்பா  :  4371 

   #   ணா   ஆ   ட   ணா   ள   லா   ம 
   =   மலாள  நாட   ஆண்ணா  

மலாள  ணாட   =  மலையாள  நாடன் 
ஆணா  =  ஆண்ணா  =  ஆ  அண்ணா 
ஆண்ணா  =   பசுபதி . 

       மலாள நாடு  என்பது அப்படியே பேச்சு வழக்கில் எழுதப்படுகிறது . தமிழர் மரபில்  மலைநாடு மலாடு என வரும் . அதுபோல மலையாள நாடு மலாள நாடு ஆயிற்று . அத்தகைய நாட்டின் அரசனைச் சில முத்திரைகள் அரசன் என்றும் சில முத்திரைகள்  அரசர்க்கு அரசன் ( பேரரசன் ) என்றும் குறிப்பிடுகின்றன  . 

       மலையாள நாட்டரசன் முடிசூடு வதை முத்திரைகள் குறிப்பிடுகின் றன . அழகுத் தமிழில் மிலைதல் என்று கூறுகின்றன .  அரசன் பெயர் குறிப்பிடாமல் மிலை அரசன் என்று தூய தமிழில் பேசுகின்றன . மிலை = சூடுதல் , அணிதல் . மிலைதல்  என்ற சொல்லுக்கு  முடி  சூடுதல் என்பதே பொருளாகும்  .   முத்திரை :  

         அரப்பா  :   5058 . ஜ . ம . 
 
    #    ஆ   ர   அரசண   மூ   ய்   ல    "  மி 

   =     மி  "   மலய்   மூ    அரசனர    ஆ 

    *    மேன்மை பொருந்திய  "  முடி சூடும் அரசனாருடைய   காணிக்கை தரப்பட்ட  பசு  . 

மி    =  மேலான  , உயர்ந்த .
மிலய்   =   சூடும்  --   முடி   சூடும் .   
அரசன் + அர்  + அ  =  அரசனரது  .     முடிசூடும்  மன்னர் ஆதலால்  அரசர்  மரியாதை  தோன்ற அரசனர்  எனப்பட்டார் . 
ஆ   =  பசு  . மன்னர் முடிசூடியதன் காரணமாக  அவர்  கோயிலுக்குப் பசுக் கொடை வழங்கியதை முத்திரை குறிப்பிடுகிறது . 

    மிலய்  அரசனர  = முடிசூடும் அரசர் 
அவர்களை   முத்திரைக்   குறிப்பிடு கிறது . மன்னர் ஆடம்பர ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக முடி சூட்டிக் கொண்டதன்   நினைவாகக் கோயிலுக்கு அவர் பசுக்கள் வழங்கி முத்திரை பெறுகிறார் . 

        தமிழ் அரசர்கள்  பேரரசர்களாகப் பல நாடுகளை வென்றதும் எளிய மனிதர்களாகவே வாழ்ந்தனர் போலும் . தான் வாழும் காலத்தில் தஞ்சை பெரிய கோயில் கட்டிய இராசராசனும்  ,  தென்கிழக்கு ஆசியாவையே வெற்றி கொண்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைப் போன்ற  கோயிலைக் கட்டிய இராஜேந்திர சோழனும் தங்களது ஆட்சியின் நினைவாக ஒரு மண்டபம்கூட  கட்டவில்லை என்பது அவர்களது எளிய வாழ்வை நினை வூட்டி நிற்கிறது . மிகப் பிருமாண்ட    பிரமிடுகளைக் கட்டிய எகிப்திய  பாரோக்களும்  மன்னர்கள்தான் .  உலகையே கட்டியாண்ட மன்னர் களின்  நினைவாக நெடிது நிற்கும் கோயில்களும் , பிரமிடுகளும் அந்தந்த மன்னர்களையும் ,       அவர்களது மக்கள் திரளின் இயல்பையும் உலகிற்குத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன .

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...