காந்தளூர் சாலை எனப்படும் தமிழர்களுக்கு எதிரான நம்பூதிரி மடம்
'''குறிப்பிட்ட''' தமிழரசர்களை '''இள'''வரசர்களை அழிக்கவே நம்பூதிரிகள் கட்டிய மடம் தான் விழிஞத்தில் இருந்த காந்தளூர் சாலை. தமிழர்களிடம் இருந்தே வர்மமும் களரியும் நோக்கு வர்மமும் கற்றுக்கொண்டு இந்த நம்பூதிரிகள் தமிழர்களுக்கு செய்த அழிச்சாட்டியங்களுக்கு அளவே இல்லை. இவர்களின் ஆதிக்கம் நிறைந்த '''வணிக'''நகரமாக விளங்கிய விழிஞம் துறைமுகத்தில் தான் எட்டாம் நூற்றாண்டளவில் ஒரு இரகசியமான வன்மக்கலை மடம் உருவாக்கப்பட்டது.
(வர்மக்கலை குருவாக விளங்கிய சான்றார் என்று அழைக்கப்பட்ட நாடார் )
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சான்றார்களிடமிருந்து களரியும் தொடுவர்மமும் தட்டுவர்மமும் தமிழ் மறையர்களிடம் (பறையர்) இருந்து நோக்கு வர்மம் பில்லி சூனியம் ஏவலையும் கற்றுக்கொண்டனர் நம்பூதிரிகள். (சான்றார் எனும் போது ஈழவரிடமிருந்து வடக்கன் களரியும் நாடாரிடம் இருந்து தெக்கன் களரியும் என்று கொள்ளனும். ஈழச்சான்றார் பலர் இராசராசனின் காந்தளூர் சாலை படையெடுப்பில் சோழரோடு இருந்தார்கள்.)
இந்த காந்தளூர் சாலை நம்பூதிரிகள் அனைத்து தமிழரசர்களையும் அழிக்க நினைக்காமல் ஒரு '''குறிப்பிட்ட''' செயலை செய்ய நினைத்த '''வயது குறைந்த''' அரசர்களையோ '''இள'''வரசர்களையோ தான் அழிக்க நினைத்தார்கள். ஆனால் நம்பூதிரிகள் செய்த அனைத்து முன்னெடுப்புகளும் கீழே குறிப்பிடப்பட்ட அரசர்களாலும் ''''இள''''வரசர்களாலும் முறியடிக்கப்பட்டன.
அதனால் காந்தளூர்ச்சாலையை ஏதோ இராசராசன் தான் முதலில் படையெடுத்து அழித்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் '''பொன்னியன் செல்வன் பீலியா'''க்கள் வெட்டிப்பெருமை பேசுவதை விட்டுவிட்டு '''வணிக''' துறைமுக நகரமான விழிஞத்தின் காந்தளூர் சாலை ஏன் இராசராசனுக்கு முன்னரும் பின்னரும் பல மூவேந்தர்களால் படையெடுத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது என தேடுங்கள். அதிலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய சோழ அரசர்கள் '''இள'''வரசர்களிடம் இருக்கும் ஒற்றுமையை தேட முயலுங்கள்.
_____________
பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையன் (768-815) - சீவரமங்கலச் செப்பேட்டுப் பகுதி
மணியிலங்கும் நெடுமாட '''மதில்விழிஞ''' மதுஅழியக் கொற்றவேலை உறைநீக்கி வெற்றத்தானை வேண்மன்னனை வென்றழித்தவன்.
______________
பாண்டியன் பராந்தகன் வீரநாராயணன் (859-907) தளவாய்புரச் செப்பேட்டுப் பகுதி
ஆறுபல தலைகண்டும் அமராலயம் பலசெய்தும் சேறுபடு வியன்கழனித் '''தென்விழிஞ''' நகர்கொண்டான்.
______________
பாண்டியன் முதலாம் இராசசிம்மன் (907-931) சின்னமனூர் பெரிய செப்பேட்டுப் பகுதி
விழிஞத்தும் வாடாத வாகைசூடினான்.
______________
சோழன் முதலாம் இராசராசன் (கி. பி 985 - 1014)
காந்தளூர்ச் சாலை கலமருத் தருளினான்
______________
சோழன் முதலாம் இராசாதிராசன் (கி. பி 1018 - 1054)
இவன் காந்தளூர்ச்சாலை மீது போர் தொடுத்ததை மூன்று மெய்கீர்த்திகள் கூறுகின்றன.
வேலைகொள் காந்தளூர்ச் சாலைகல மறுத்தான்
வேலைகெழு காந்தளூர்ச் சாலைகலம் அறுப்பித்தான்
வேலைகெழு காந்தளூர்ச் சாலைகல மறுத்தான்.
______________
பாண்டியன் சடையவர்மன் பராந்தகன் (1130 - .... )
குலவிழிஞம் கைக்கொண்டு '''கன்னி'''ப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தான்.
______________
முக்கியக்குறிப்பு: கடைசியாக குறிப்பிடப்பட்ட பாண்டியன் சடையவர்மன் பராந்தகன் (1130 - .... ) விழிஞத்தின் காந்தளூர்சாலையை தாக்கிய போது அது அவனுக்கு கன்னிப்போர். அன்று இருந்த பல பாண்டிய '''இள'''வரசர்களில் இவன் ஒருத்தன் தான் காந்தளூர் சாலையை அழித்தவன். இவனுக்கு முன்னர் இவனது சககாலத்தில் காந்தளூர் சாலையை படையெடுத்த பாண்டிய '''இள'''வரசர்கள் கொல்லப்பட்டார்கள். இவன் காந்தளூர்சாலையை அழித்ததாலேயே அன்று இருந்த பல உள்நாட்டுக்குழப்பங்களை தாண்டியும் இவன் '''இள'''வரசனிலிருந்து அரசனானான். பாண்டிய சோழநாடுகளில் பல '''இள'''வரசர்கள் அரசராவதற்கு தயார் நிலையில் இருப்பார்கள். அதில் எந்த '''இள'''வரசன் காந்தளூர் சாலையை அந்த '''குறிப்பிட்ட''' காலங்களில் தாக்கி வெல்கிறானோ அவனே அரசனாவான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த '''வணிக''' துறைமுகமான விழிஞத்தின் காந்தளூர் சாலை வர்மக்கலை மடத்தில் என்ன தான் இருந்ததோ!?. அது காந்தளூர்சாலையை வென்ற அந்த குறிப்பிட்ட '''இள'''வரசர்களுக்கும் அரசர்களுக்குமே வெளிச்சம்.
No comments:
Post a Comment