திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!


திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!

நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர்
புலவர் செ.ராசு கவுண்டர்.

கி.பி.1670-இல் எழுதப்பட்ட இரு செப்புப் பட்டயங்கள் கோவை மாவட்டம் அவிநாசி வட்டம் திருமுருகன் பூண்டி ஈஸ்வரன் கோவில் சான்றோர் குலகுருவான சிவாச்சாரியாரிடம் தற்போது உள்ளன.

நாடார்களில் அடக்கமுடையார் (சான்றோர்), போர்முடையார் என்ற இருபிரிவிலும் அமைந்தோர் இருந்துள்ளனர். அடக்கமுடையாராகிய நாடார்கள் நாடாதி நாடான் (சோழன்), நாட்டுவன் (நட்டாத்தி), மதுரையான் (பாண்டியன்), போர்முடையாராகிய நாடார்களில் கோநாடான் (கொங்குச்சோழன்), சங்கன் (சங்காழ்வார்), கொங்கன் (சேர மரபினர் கங்கன், கொங்கணி) என்றும் ஏனாதி என்ற தலைமைப் பொறுப்பும் பெற்றிருந்த பெருமைக்குரிய வீர அரச மரபினர் என விளக்கப் பட்டுள்ளனர். 

மேலும் இவர்கள் புலிக்கொடி, கருடக்கொடி, சிங்கக்கொடி, அன்னக்கொடி, அனுமக்கொடி, மீன்கொடி (மகரத்தோரணம்) மற்றும் வெள்ளைக்குடையும் பிறப்பால் பெற்ற உரிமை மரபினர். சந்திரனை வாளாகப் பெற்றவர்கள் என்று கூறுவது பாண்டிய குலத்தினை நினைவூட்டுகின்றது. மதுரைவள நாடர், சோழவளநாடர், கரிகால் சோழ நாடாதிபதி, சீர்கொண்ட மதுரை நாடர் என்றும் பெயர் பெற்றவர்கள் எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் இப்பட்டயங்களில் கையொப்பமிட்டவர்கள் நாடன், நாட்டுவன், நாடாதி, மதுரையான் என்று இட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத் தகுந்தது.

இப்பட்டயங்களில் கூறப்படும் நாடார்களைச் சோழவள நாடர், மதுரைவளநாடர் என்று கூறப்படுவதை நோக்கின் நாடர் என்பதுவே நாடார் என்று தெளிவாக்கப்படுவதுடன் வளநாடர் என்ற சொல் அரசரையும் குறித்து நாடர் மரபினரையும் குறித்து நிற்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

குறிப்புகள்:

1) நெல்லை நெடுமாறன். "கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள்." தமிழில் ஆவணங்கள், பதிப்பிதது ஆ. தசரதன், தி. மகாலட்சுமி, சூ. நிர்மலாதேவி, மற்றும் த. பூமிநாகநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு, 2001, பக். 95-105.
2) செ. ராசு. கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள். தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு அரசு,  1991.

No comments:

Post a Comment

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.! நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர் புலவர் செ.ராசு கவுண்...