வேளாளர்களின்(பிள்ளைமார்) தலைமை மடமாக கருதப்படுவது தஞ்சை - திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். சைவ பிள்ளைமார் பிரிவினர் மட்டுமே இதன் ஆதீனமாக வர இயலும் என்பதே இம்மடத்தின் மரபு வழி விதியாகும்.
இந்த மடத்தில் கி பி. 1769ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட
சிவகாசி நாடார் செப்பேடு ஒன்று உள்ளது. அக்கால ஆட்சியாளரான நாயக்கர்களையோஅல்லது விஜயநகர ஆட்சியாளர்களையோ, பிற பாளையக்கார்கள் குறித்தோ, தஞ்சை மராட்டியர், நவாப்களையோ குறித்து எந்தத் துதிபாடலும் இல்லாமல் நேரடியாக "சேர சோழ பாண்டியர் பூமியில் பாண்டிய மண்டலத்தில்" எனத் தொடங்குகிறது.. "நாங்கள் மூவேந்தர் மரபினர்" என தெற்றென உரைப்பது சான்றாகும்.
".... யெழுந்தருளியிருக்கும் சன்னதி தானத்தில்த் திருக்கோபுரத் திருப்ணிச் சிவ புண்ணியத்துக்குச் சிவகாசியிலிருக்கும் நாடாக்கள்
அரிய புத்திர நாடான், தம்பி நாடான்
கட்டக் குமாரன் சிவ முருக நாடான்
கூத்த நாடான் முத்தயன் பெரியணன் நாடான் தாளமுத்து நாடான் அடியேன்கள்
நாடாக்களனைவோரும் பல பட்டடை ய்ள்படச் சிவ புண்ணிய சாதனம் யெளுதிக் குடுத்த பரிசாவது........." என்று நீள்கிறது...! 18 ஆம் நூற்றாண்டிலும் நாடாக்கள் என்று நாடார்கள் அறியப்பட்டுனர் என்பதும்சிவகாசியில் பிற குழுக்களை" பல பட்டடை" (பதின்மென் தொழில் ஜாதி குழுக்கள்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment