குஞ்சன் நாடார்


குஞ்சன் நாடார் சிலை நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் அவரது உறவினர்களால் நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலைக்கு ஆண்டு தோறும் நவம்பர் 1-ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைய நடத்திய தெற்கு எல்லைப் போராட்டத்தின் மிக முக்கியமான தலைவர் குஞ்சன் நாடார். போராட்டத்தின்போது இவரது ஆண்குறி வழியாக ரத்தம் போகும் அளவுக்கு அடித்துள்ளனர் திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாற்றிலேயே அதிக அடி ,உதைகளை வாங்கிய இருவரில் ஒருவர், இந்தக் குஞ்சன் நாடார். மற்றொருவர் காந்திராமன். குஞ்சன் நாடாரின் பேச்சில் மலையாளம் கலந்திருந்தாலும், 'ஞான் தமிழனானு 'என்று தமிழ் உணர்வோடுப் போராடியவர் . இவர், ம.பொ.சி-யின். நண்பர். தமிழர் போராட்டத்தின் முதுகெலும்பு வழக்கறிஞரும்கூட. நெய்யாற்றின்கரை வட்டம், திரிபுரம் என்ற ஊரில் 1911-ம் ஆண்டு பிறந்தவர். தென்குரல் என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்திவந்தார், 1952 -ம் ஆண்டு பாறசாலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுயேட்சையாக வெற்றிபெற்றார். 1954-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், தி.தா.நா.கா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அக்கட்சியின் செயலாளராகவும் குஞ்சன் நாடார் இருந்துள்ளார் .1954-ம் ஆண்டில், நேசமணி மூணார் சிறையில் இருந்தபோது மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடையில் திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக ஊர்வலம் நடத்தியவர் குஞ்சன் நாடார். அப்போது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் இறந்தனர். ஊர்வலத்தைத் தலைமை தாங்கியதற்காக குஞ்சன்நாடாருக்கு 8 மாதம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. 1962 -ம் ஆண்டு சென்னை சட்டசபைக்குப் பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து சுயேட்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கும் தற்போதைய அரசியல் சூழல் போல சீட் கொடுக்க முக்கியத் தலைவர்கள் மறுக்கவே சுயேச்சையாக போட்டியிட்டவர் . அடி,உதை வாங்கிய குஞ்சன் நாடாருக்கு அரசு மரியாதை கிடையாது, மணிமண்டபம் கிடையாது. இவர் இல்லாமல் திருவிதாங்கூர் போராட்ட வரலாறும் கிடையாது. குஞ்சன் நாடார் சிலை நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் அவரது உறவினர்களால் நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலைக்கு ஆண்டு தோறும் நவம்பர் 1-ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...