செப்பேடு நாடார் குலத்தவரே
பாண்டியகுலத்தவர் என்று உரைக்கிறது!
(1).தென்இந்தியா வின் சைவமத தலைவராகிய 'லோக குரு' என்னப் பட்ட சிரிங்கேரி மடத்து ஸ்ரீசங்கராசாரியசுவாமிகள், நாடார் குலத்தவரையும் தமது ஆதீனத்துக்குள்ளாக்க வேண்டி, தம்முடைய சிஷ்யர்களிலொருவரான மைசூர் சமஸ்தானம், தாராபுரம்தாலுகா, குளைஞ்சிவாடி, கேற்கேசுரஅக்கிரகாரம், ஸ்ரீமடத்திலிருந்த, சிவசுவாமி சாஸ்திரிகளின பௌத்திரர், சிவராமசுவாமி சாஸ்திரியாரை நியமித்து, அவருக்கு சவுமியu (கி. பி. 1789) கொடுத்த அதிகாரப் பத்திரமாகிய தாமிரசாஸனத்தில்,
“....பாண்டியகுல மாயும் சிவகொத்திர சமபனனாளாயும் பாண்டியதெசத்தில பிறந்தவாளாயும் க்ஷத்திரியவமிஸாளாயு மிருக்கிற நாடாக்கள் குலம் சமஸதத்துக்கும் குலகுருவாய நெமுகமசெய்து............”
என்று கண்டிருக்கிறது. ஆனால் அந்த சமயஅதிகாரி வந்த காலத்தில், நாடார்கள், ஸ்ரீ சிரிங்கேரிமடத்துக்கு உட்பட்ட நாலு மடங்களில் ஒன்றாகிய ஸத்யோஜாத மடத்துக் குருசுவாமிகளுக்கு ஏற்கனவே சிஷ்யர்களாயிருந்து வருவது
தெரிந்து, இந்த ஸ்ரீமடத்து அதிகாரி இவ்விடத்தை விட்டுப் பின்வாங்கிக்
கொண்டதாகத் தெரிகிறது. பிராமணத் திருமேனிக ளான மேற்கண்ட ஸத்யோஜாதமடக் குருசுவாமிகளும், நாடார்குல விஷயமாய் மேற்கண்ட ஸ்ரீ மடம்குருக்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற அதிகாரப்பட்டயம் ஸ்டி சங்கராசாரிய சுவாமிகளாலும், மைசூர் சமஸ்தானத்தாராலும் வெகுகாலத்துக்கு முன்னதாகவே பெற்று, மதிப்படைந்தவர்களாயிருந்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment