செம்பிநாடன்🌞🐅 ( Thanks- Shera Nadan)


செம்பிநாடன்🌞🐅

செம்பியன் என்பது சோழ மன்னர்களுக்கான பட்டங்களில் ஒன்றாகும்,

செம்பிநாடன் சோழ குலத்தைச் சேர்ந்தவன் பாண்டிய குலத்தின் மருமகன்.

தாமிரபரணி ஆற்றுக்கு வடக்கே கொற்கைக்கு தெற்கே உள்ள உமரிக்காடு என்ற ஊரின் முன்னோர்களை செம்பிவளநாடன், ரவிகுல சான்றான், சூர்யகுல சான்றான் என்று உமரிக்காடு ஆத்தங்கரைசாமி தன்னுடைய நாட்டுப்புறபாடல் மூலம் போற்றுகிறார்.

நாட்டுப்புற பாடல்களில் நாடார்கள் செம்பிநாடன், செம்பிவளநாடன், சூரியகுல சான்றான், ரவிகுல சான்றான் என பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.

சிதம்பரநாதமுதலியார் எழுதி, அடையாறு உ.வே.சா நூலகத்தால் வெளியிடப்பட்ட சீவலமாறன்கதை என்ற இலக்கியப் படைப்பில் தென்காசிபாண்டியர்களுக்கும் சோழகுலத்துக்கும் இடையே இருந்த திருமணஉறவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேசத் தமிழாய்வு நிறுவனம் தரமணி வெளியிட்ட சிவனனைந்தான் கதை எனும் நாட்டுப்புறப் பாடல் வில்லு பாடல் இத்திருமணக் கூட்டத்தை விவரிக்கிறது. உமரிக்காடு வின் மூதாதையரான செம்பி நாடன் என்பவர் பாண்டிய குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியை மணந்தார் என்பதை இந்தச் சான்றுகள் நிரூபிக்கின்றன.

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு