மூவேந்தர குல நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு-11-07-2013 தீர்மானங்கள்


Babugee Nadar-Perunthalaivar Kamarajar Professional Fourm
மூவேந்தர குல நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு
============================================
11-7-13 துவக்கம் அன்று \நிறைவேற்றப்பட்ட தீர்மாணம்\
1)நம் முன்னோர்கள் நம் சமூக மக்களின் கல்வி,பாதுகாப்பு,பொருளாதார மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் முழு அளவில் நமது பிள்ளைகளுக்கு பயன் பெறும் வகையில் பாடுப்படும்.

2)சமுதாயத்தில் பல உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள் அங்கம் வகிக்கும் காமராஜர் சமூக நீதி பேரவையின் ஆலோசனைபடி சமுதாய மக்கள் பயன் பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

3)இந்த கூட்டமைப்பை பொறுத்த வரையில் எந்த சொத்தும் வாங்கப்படமாட்டாது.எந்த ஓரு பணியை செய்தாலும்,அது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கூட்டமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள் அவர்கள் சொந்த விருப்பபடி செயல்படாவண்ணம் சட்ட திட்டங்கள் அமைக்கப்படும்.

4)இந்த கூட்டமைப்பை பொறுத்த வரை சமூதாயத்தை சார்ந்த யாரும் கேட்கலாம்,நாங்கள் ஓளிவு மறைவின்றி தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.

5) ஆரம்ப கட்டத்தில் எங்களுடைய சொந்த பணத்தில் நாங்கள் அலுவலகம் அமைப்பது,பல்வேறு பணிகளில் மக்களை சந்தித்து அமைப்பை வலுபடுத்துவது போன்ற பணிகளை யார் உதவியின்றியும் நிர்வாகிகளே செய்துக் கொள்வார்கள்.

6)தேவைப் படும் ஏழை சமூதாய ஜனங்களுக்கு உதவி செய்ய நம் முன்னோர்களால் துவங்கப்பட்ட நிறுவனங்கள் செய்து வருவதால்,நாம் நம் சமூதாய குழந்தைகளில் யார் சாதிக்கிறார்களோ அவர்களை மட்டுமே ஊக்கப்படுத்துவது என்பது நம் குறிகோள்.10 மற்றும் 12 தேர்வில் அதிக மதிப்பென் பெற்று சாதிப்பவர்களுக்கு மிக பெரிய தொகை பரிசளித்து ஊக்கப்படுத்தப்படும்.உதவிக்கு வரையறை செயல்படுத்தப்படும்.முதல் இடத்தை ஓன்றுக்கு மேற்பட்டோர் பெற்றிருந்தால் அனைவருக்கும் முழு தொகை வழங்கப்படும்.

7)கூட்டமைப்பின் கருத்தை ஏற்று நம் மக்கள் தரும் அன்பளிப்பாக தரும் தொகையும்,ஆயுள் உறுப்பினர்களாக விரும்புவர்களிடம் சாந்தாவாக வசூலிக்கப்படும் இந்த தொகை அரசு வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்படும்.இதிலிருந்து ஓரு ரூபாய் கூட செலவு செய்யபடமாட்டாது.வைப்பு தொகையிலிருந்தே தான் எல்லா செலவையும் செய்யப்படும்.அது வரை நம் சொந்த பணத்தில் நடத்த வேண்டும்.அதற்கு சம்மதிக்கும் சங்கங்கங்ளே உறுப்பினராக முடியும்.

 அமைப்பு பதிவு செய்யப்பட்டு வரி விலக்கு 80 ஜி யை பெறப்படும்.

9)நம்முடைய மக்களின் அர்பணிப்புகள்,சாதனைகள் திட்டமிட்டு புறக்கனிக்கப்படும் காரணத்தால்,அதை உலகிற்கு தெரிவிக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்படும்.எடுத்துக்காட்டு இருட்டிப்பு செய்யப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி தூக்கு மேடை இராஜகோபால் நாடார் உள்ளிடோரின் வரலாறு வெளிக் கொண்டு வரப்படும்.

10)தமிழக தென் எல்லை இணைப்பு போராட்டத்தில் கேரள அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 தியாகிகளுக்கும் நினைவு சின்னம் எழுப்படும்.அந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய நேசமணி நாடாரின் மாபெரும் தியாகத்தை மறைத்து குமரி மாவட்டம் தமிழகத்தில இணைய நடந்த போராட்டத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத இரண்டு பிராமணர்கள் காரணம் என்று அரசாணையில் பதிவாகியுள்ள மாபெரும் வரலாற்று பிழையை மாற்றி உண்மை வரலாறு இடம் பெற செய்யப்படும்.

11)திருத்தணி முதல் சென்னை வரை தமிழகத்தில் சேர்க்க போராடிய மாவீரர் தியாகி ம.பெ.சிவஞானம் அவர்களுக்கு வட எல்லையில் மிகப பெரிய சிலை நிறுவுவது நமது கடமை அதை முன்னின்று போராடும்.

12)நமது இளஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வும்,வரலாற்று தெளிவுபட செய்ய உழைக்கும்.அவர்களை நல்ல தலைமைக்கு தயார் செய்ய பாடுப்படும்.

மேற்படி தீர்மாணம் நிறைவேற்றப்பட்டத,சிறப்பு விருந்தினராக நீதியரசர் கனகராஜ்,முன்னாள் காவல்துறை தலைவர் சரவண பெருமாள் கலந்துக் கொண்டு நல்ல ஆலோசனை வழங்கினர்.

தலைவர் முத்துக்குமார்,செயலர் ராமபாண்டிய நாடார்,பொருளர் ஆவடி முரளி
துணை தலைவர் காஞ்சி ராஜன்.
------------------------------------------

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...