தட்சிண மாற நாடார் சங்கத்திற்கு 190 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டைக்காக பல கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கினார்கள் ஆறுமுகனேரி நாடார் வியாபாரிகள்



தட்சிண மாற நாடார் சங்கத்திற்கு 190 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டைக்காக பல கோடி மதிப்புள்ள நிலத்தை  வழங்கினார்கள் ஆறுமுகனேரி நாடார் வியாபாரிகள்
                   கி.பி.1821 இல் மதுரை வரைச் சென்று, ஆறுமுகநேரியைச் சேர்ந்த வியாபாரிகள் பொதியில்உப்பு, நெல் ,கருப்புக்கட்டி வியாபாரத்தைச் செய்து வந்தனர்.அக்காலத்தில் கள்வர் பயம் அதிகமிருந்ததால் வியாபாரிகள் தங்களுடைய வியாபாரப் பொருட்களுடன் வேல் கம்பு,வாள்,குத்தீட்டி,துப்பாக்கி ஆகியவற்றுடன்சென்றனர்.சிலம்பம்,வாள் வீச்சு,மல்யுத்தம் ஆகிய வீரவிளையாட்டுக்கலையைப் பயின்று வைத்திருந்தனர்..வியாபாரிகள் ஒற்றுமையாகக் கூடுவதற்கு பேட்டைகளை உருவாக்கி தங்களுடைய பாதுகாப்பைப் பெருக்கிய பெருமைக்குரியவர்கள் ஆறுமுகனேரி மக்களே ஆவார்கள்.
                 ஒற்றுமையை உருவாக்கியதோடு மதுரைப் பேட்டைக்கான நிலத்தையும் வழங்கிப்பெருமை பெற்றவர்கள் செங்கக்குமாரு நாடான் மகன் குமாரசாமி நாடான்,பாண்டி நாடான் மகன் நாராயணப் பெருமாள் நாடான் ஆகிய இருவருமாவர்.
                 இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நிலம் ஆறுமுகனேரி நாடார்களால் கொடுக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது.

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...