டச்சுப்படையை வென்றத் தமிழன் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன் மாவீரன். அனந்த பத்மநாபன் நாடார் அவர்களின் வரலாற்றை மறைக்க முயலும் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் முனைவர். எஸ்.பத்மநாபன்! (ஆய்வுக்களஞ்சியத்தில் அவர் எழுதிய கருத்துகளுக்குப் பதில்)




By-HARIKUTTI.,B.A.,B.L.,

டச்சுப்படையை வென்றத் தமிழன்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரன் மாவீரன். அனந்த பத்மநாபன் நாடார் அவர்களின் வரலாற்றை மறைக்க முயலும்
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் முனைவர். எஸ்.பத்மநாபன்!
(ஆய்வுக்களஞ்சியத்தில் அவர் எழுதிய கருத்துகளுக்குப் பதில்)

திருவிதாங்கூர் வரலாறு தெரியாமல் திருவிதாங்கூரைப் பற்றிப் பேசுவது பெரியத் தவறாகும் என்பதை மருத்துவர்.இராமதாசு அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆய்வுக்களஞ்சியம் ஆசிரியர் முனைவர்.எஸ்.பத்மநாபன் கூறியுள்ளார். தமிழின் சிறப்பெழுத்தான ழ கரத்தைப் பாதுகாத்து வருவது மலையாளிகள் தான். இதனைத் தமிழ் அறிஞர் உலகம் ஒத்துக்கொள்கிறதா?
மலையாளிகளுக்கு எவ்வளவு வால் பிடிக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கேரளத்தில் சித்திரைத் திருநாள் அரசர் தன்னுடையப் பதவியைத் துறந்தார். அவருக்கு வாரிசு கிடையாது. திருவிதாங்கூர் அரசோ, இந்திய அரசோ சித்திரைத் திருநாள்
அரசருக்குப் பின்னால் யாரையும் மன்னராக நியமித்தது கிடையாது. ஆனால் முனைவர். எஸ்.பத்மநாபன் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டங்கள் போட்டு “மமான்னர்” என்று அவரை அழைக்கிறார். இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்று. ஆளுநர் பதவியையே கேலிக்கூத்தாக்கும் ஒன்று. யாரும் இதனைத் தட்டிக் கேட்கவில்லை!
இவர் கேரள அரசின் “ஏஜண்ட்” ஆக விளங்குகிறார்.
1. அண்மையில் அவருடைய மாத இதழான ஆய்வுக்களஞ்சியத்தில் நாஞ்சில் நாட்டார் (வெள்ளாளர்கள்) அரசர் காலத்தில் சொர்க்கத்தில் இருந்தது போல இருந்தார்கள். இப்போது அவ்வாறு இல்லை என்றுக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு எழுதுவதற்கு அவருக்கு எங்கிருந்து என்னப் பரிசு கிடைத்தது எனபது இதுவரை வெளிவரவில்லை.
நூற்றுக்கணக்கான வரிகளைப் போட்டு, ஏட்டை விரித்துப் பார்த்தவனின் கண்களைப் பிடுங்கி, மேலாடை அணிந்தப் பெண்களின் மேலாடையைக் கிழித்து. தாலியை அறுத்தெறிந்து, எத்தனையோத் துன்பங்களைத் தாங்கிய மக்கள் சுமார் 300 ஆண்டுகள் போராடி, சிறை சென்று, எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்து, குறிப்பாக வேலுத்தம்பி தளவாய் நாயர் காலத்தில் 3000 தமிழ் மக்களைக் கொன்று குவித்து, இரத்தவெறி பிடித்த, திருவிதாங்கூர் அரசிடமிருந்து, மா்சல் நேசமணி தலைமையில் போராடி வெற்றி பெற்றுத் தாய்த்தமிழகத்தோடு இணைந்தோம்.
அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் மன்னராட்சி சொர்க்கத்தில் இருந்தது போன்று இருந்தது என்றுக் கூறுகிற முனைவர்.எஸ்.பத்மநாபன் ஒரு மலையாளியா? தமிழனா? என்பதை தமிழ்க்கூறும் நல்லுலகின் ஆய்வுக்கே விட்டுவிடுகிறேன்.

2. அரசியலில் இவருக்கு எந்தவிதக் கொள்கையும் கிடையாது. கழிந்தத் தேர்தலில் முந்தைய மாதமுள்ள இதழில் கலைஞரைப் பற்றியும் கலைஞருடைய மகன் ஸ்டாலினைப் பற்றியும் வானுயுரப் பாராட்டி எழுதியிருந்தார். தேர்தல் முடிந்த மறு மாதத்தில் தன்னுடைய ஆய்வுக்களஞ்சியத்தில் தமிழக முதல்வர்.மாண்புமிகு புரட்சித்தலைவி அவர்களைப் பற்றி வானுயுரப் பாராட்டி எழுதியிருந்தார். இதன் பொருள் என்ன? இவருக்குக் கொள்கை கிடையாது. ஆளுங்கட்சி எதுவோ, அதுவே இவருடையக் கட்சியும் கொள்கையும் ஆகும்.
இவருக்கு மட்டும் தான் திருவிதாங்கூர் வரலாறு தெரியும் என்று அரசையும் வாசகர் வ்டத்ததையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

3. திருவிதாங்கூர் வரலாற்றைப் பற்றி இவருக்கு எதுவுமேத் தெரியாது என்பதற்கு ஒரு சான்றைத் தருகிறேன்! தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு மற்றும் சிற்றூர் ஆகிய 9 தாலுகாக்களையும் தமிழகத்தோடு சேர்க்க வேண்டுமென்பது தான் நேசமணி எழுதிய திருவிதாங்கூர் தமிழ்நாடுக் காங்கிரஸ் கட்சியின் விதிகளில் முதலாவது. இவர் இந்த அடிப்படைச் சட்டவிதிகள் கூடத் தெரியாமல் 7 தாலுகாக்கள் என்று பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசியுள்ளார். (பார்வை: ஆதிசாமி, சட்டமன்ற உறுப்பினரின் நூல்)

4. இவருடைய வரலாற்று ஞானத்தைப் பாருங்கள்!

5. திருவள்ளுவர் திருநயினார்க்குறிச்சியில் பிறந்தவர் என்றுக் கட்டுரை எழுதி விட்டு பிற்காலச்சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கோயிலைச் சான்றாகக் காட்டுகிறார். அந்த ஊருக்கு கடியப்பட்டினம் என்றுப் பெயர். கடியப்பட்டினம் என்றப் பெயரிலிருந்து மிகப் பெயரிலிருந்து மிகப் பிற்காலத்தில் திருநயினார்க்குறிச்சி என்றப் பெயர் தோன்றியது. இந்த திருநயினார்க்குறிச்சியில் இருக்கும் கோயில் சிவன் கோயில் இலிங்க வழிபாடு. சிவபெருமானுக்கு நயினார் என்றப் பெயரும் உண்டு. இந்தப் பெயரை, திருவள்ளுவரின் நாயனார் என்றப் பெயரோடு இணைத்து, திருவள்ளுவர் இங்கு தான் பிறந்தார் என்றுக் கூறுவது வரலாற்று முரண். அந்தப் பகுதியில் இருந்த மக்களிடம் விசாரித்ததில் யாருமே திருவள்ளுவர் இங்குப் பிறந்தார் என்றக் கதையோ வரலாறோ உள்ளதாகக் கூறவில்லை. பிற்காலச் சோழர்களின் கல்வெட்டு 2 அந்தக் கோயிலில் உள்ளது. அதையும் அழித்து விட்டார்கள். இலிங்க வழிபாடு அங்குக் காணப்படுகிறது. இலிங்கத்தை மட்டும் திருடிச்செல்ல அங்குள்ள மக்கள் விடவில்லை. இல்லையென்றால் அதையும் துாக்கிச் சென்றிருப்பார்கள்.

6. பொய்யானத் தகவலைத் தமிழகத்தில் கூறி தமிழகம் இன்றும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவில் தனது சமுதாயத்தைச் சார்ந்த அதிகாரிகளால் பொய்யான வரலாற்றை உண்மையாக்கி உள்ளார். திருவள்ளுவர் நாஞ்சில் நாட்டார் (வெள்ளாளர்) என்று மறைமுகமாகக் கூறுகிறார்.

7. திருவள்ளுவர் சாதிப்பிரிவினைக்கு முன்னாலேயேத் தோன்றியவர். அவர் ஒரு சமண முனிவர். அவரைச் சாதியில் சேர்க்க வேண்டும் என்றுச் சொன்னால் தலித் சமுதாயத்தின் உள்பிரிவான வள்ளுவனில் சேர்க்கலாம். திருக்குறள் ஆய்வு மையத்தில் இரவச்சம் என்ற அதிகாரத்தில் ஆய்வுரை வழங்கும் போது அறிஞர். கேசவ சுப்பையா தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் முனைவர்.சுரேஷ் காணி வள்ளுவன் பொற்றை என்ற ஒன்றைக் கட்டுரையில் படித்தார். அந்தக் கட்டுரையைப் படித்த அவரையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்தைப் பா்வையிட்ட முனைவர்.எஸ்.பத்மநாபன், சுரேஷ் காணியைப் புறந்தள்ளி விட்டு தானே கண்டுபிடித்ததாக தமிழகம் எங்கும் கூறினார். ஆனால் உண்மை குமரி மாவட்ட மக்களுக்கு மட்டும் தான் தெரியும்.

8. பொய் வரலாற்றை எழுதும் இவர் தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் அதன் வரலாற்றையும் தெரிந்து வைத்திருக்கும் மருத்துவர்.இராமதாசு ஐயா அவர்களை வரலாறுத் தெரியாதவர் என்பது பேந்தைத்தனமான ஒன்று!

9. இவர், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தாதார் இறைவனடிச் சேராதவர் எனற குறள்பாவைப் பொருள் கொண்டிருக்கும் விதத்தைப் பாருங்கள். இங்கு, பிறவியாகியப் பெருங்கடலைக் கடக்காதவர்கள் இறைவனடிச் சேராதவர்கள் என்றுப் பொருள். நீந்துவர் என்றச் சொல்லுக்கு பொருள் கூற வந்த பத்மநாபன் நீந்துதல் என்றச் சொல் நாஞ்சில் நாட்டாருக்கு (வெள்ளாளர்) மட்டுமேத் தெரியும் என்கிறார். ஆனால், அந்தச் சொல் கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரை, சேரநாட்டின் எஞ்சியப் பகுதிகள் மற்றும் இதரத் தமிழ்நாட்டுப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்குத் தெரியும். குறிப்பாக, கல்குளம், விளவங்கோடு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு கையடித்து நீந்துதல், நீரில் மூழ்கி நீந்துதல், முக்குளித்து நீந்துதல், மல்லாந்து நீந்துதல், எதிர் நீச்சல் போடல், கர்ணம் அடித்து நீந்துதல், ..போன்ற பலவகையான நீந்துதல்கள் தெரியும்.

10. இவருடைய ஆய்வைப் பாருங்கள்!

11. நாஞ்சில் நாட்டாருக்கு மட்டும் தான் நீச்சல் தெரியும் என்றுக் கூறுகிறார். இது, எதைக் காட்டுகிறது என்றால் வள்ளுவர் தங்கள் சமுதாயத்தவர் என்றுக் கூறுவதற்காக, இப்படிப்பட்ட பொய்யானத் தகவல்களைத் தருகிறார்.

12. உயர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்கள் வேதனைப்படுகிறார்கள். யாருக்கு வரலாறு தெரியும் யாருக்குத் தெரியாது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

13. தமிழ் மீது சிறிது கூட பற்றில்லாமல் மலையாளிகளின் அடிவருடியான இவரைத் தமிழ் உலகம் பாராட்டுவது தான் வேதனைக்குரிய ஒன்று. அதிலும் தமிழ்த்தேசியம் பேசும் மக்கள் இந்த மலையாளிகளின் தாசனை ஏற்றுக் கொள்வது தான் மிகவும் வேதனையான ஒன்று. தமிழனை அடிமைப்படுத்தி வேலை வாங்கும் மலையாளிகள் தமிழின் சிறப்பெழுத்தான ழ கரத்தைக் காப்பாற்றுகிறானா? எந்தவொரு தமிழனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மிகவும் வேதனையோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்!

வாழ்க நாடார் குலம்....வளர்க நாடார் குலம்

வீழ்த்த முடியாத வீரம்..மானமே உயிர் என்ற குணம்
அதுவே நாடார் இனம்...


இவண்
மன்னர் தவசி நாடார் காமராஜர் நற்பணி மன்றம்
மற்றும்
வீர தளபதி மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார் பேரவை
மற்றும்

நாடார்கள் நலன் விரும்பி..,
D.ஹரி நாடார் BA.,BL.,
விக்கிரமசிங்கபுரம்.

Like ·  · Share · 20 minutes ago

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...