அய்யா வைகுண்டர் செய்த தவத்தின் பெருமை



[அய்யா வைகுண்டர் செய்த தவத்தின் பெருமை]
அய்யா நாராயணர் வைகுண்டமாகி இந்த கலி எண்ணும் மாயைக்குள் சிக்கி தவிக்கும் தான் பெற்றடுத்த சான்றோர் குல மக்களை காத்து உலகை ஒர் குடைக்குள் ஆள வேண்டி தானே தவசு பண்ணி நமக்கு தர்மயுக ராஜ்ஜியத்தை அருள தெச்சாணாபூமியான சுவாமிதோப்பில் தவமிருக்கிறார்.அதுவும் 6 ஆண்டு தவமிருக்கிறார் இரண்டு,இரண்டு வருடமாக பிரித்து வெவ்வெறு நிலைகளில் மூன்று நிலைகளில் தவமிருக்கிறார்,முதல் இரண்டாண்டு இந்த கலியுகத்தை முடித்து தர்ம யுகம் படைக்க.இந்த தவம் அய்யா செய்த முறை மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம் கழுத்தழவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று அடியெடுத்து வைக்காத அருந்தவமாகும்.
அடுத்த இரண்டாண்டு தவம் என்பது சாதிக்காக அதாவது தான் பெற்றடுத்த சான்றோர் குலமக்களுக்கு உயர்வு கொடுக்க.

இந்த இரண்டாண்டு தவம் அய்யா செய்த விதம் பூமியில் வடக்கு முகமாக பத்மாசனம் இட்டு இருக்கும் தவம்.
கடைசியாக இருந்த இரண்டாண்டு தவம் முண்ணுரைத்த பெண்ணார்க்கு அதாவது முன் சப்த கன்னிமாரான நம் தாயாரை இகனை திருமணம் செய்து உலக சக்திகளை தனக்குள் ஐக்கிய படுத்த.இந்த தவ நிலை என்பது.காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு முகமாக பார்த்து இருப்பதாகும்.தனக்குள் இருக்குள் விஞ்சை சக்தியை யாருக்கும் கூறாமல் தனக்குள் நிலைநிறுத்தி சிவஞானத்தை தியானித்து கடும் தவமிருந்தார் நம் தந்தை வைகுண்டம்.இவருடைய தவத்தின் பெருமையை யாராலும் எடுத்துக்கூறி விளக்க முடியாது.முன்னொரு காலத்தில் ஈசர் தம் உமையாளான பார்வதியை குழந்தை உருவாக்க வேண்டும் என்று தவம் புரிந்தார் அந்த தவமும் கூட இவ்வைகுண்டர் தவத்திற்க்கு ஒப்புமை கூற முடியாது.மற்றும் முன்னொரு காலத்தில் சூரபத்மன்,சிங்கமுகாசூரன் என்ற அசுரர்கள் தேவர்களை அடிமைபடுத்தி கொடுமை செய்வதை பார்த்து அக்கொடுமையிலிருந்து தேவர்களை விடுவித்து சூரர்களை கொன்று வதம் செய்ய உமையாளான பார்வதி சிவனை நோக்கி 'சிவமே ஆறுமுகத்துடன் (கந்தனாக)பல பேறுகளோடு தனக்கு ஆண்பிள்ளையாகப் பிறக்க சரவணப்பொய்கையில் சிவனை நினைத்து" அரகரா" என்றுக்கூறி நின்ற தவமும், அப்போது சீதை இருந்த உயர்வான தவங்கள் கூட வைகுண்டர் தவத்திற்க்கு ஒப்புமை கூற முடியாது.அர்சுனன் சிவனை நோக்கி இருந்த தவத்திலும் எத்தனையோ கோடி மடங்கு அதிகமான தவம் அய்யா வைகுண்டர் இருந்த அரும்பெரும் தவமாகும்.இன்னும் எத்தனையோ பெருமை வாய்ந்தது இந்த தவம் இதன் பெருமையை கணக்கெடுத்து சொல்ல யாராலும் இயலாது.இந்த தவத்தின் பெருமையைப் பற்றி உலகமக்கள் கூறினாலோ,ஒரு மனதுடன் கேட்டாலோ,வாசித்தாலோ,பொல்லாதவர்களும்,பாவிகளும் கூட தன்னுடைய பாவம் தொலைந்து வாழ்வர் என்பது திண்ணம்.நாம் வாழ்ந்து கொண்டிருப்பது மனம்,சித்தம்,புத்தி,அகங்காரம் என்னும் திரைகளுக்குள்ளேயாகும்.இத்திரையை கிழித்தெறிந்து அதற்கு அப்பால் காணும் இறைவனை அறிந்தால் அதுவே உண்மையான வீரமாகும்.அய்யா அகிலத்திட்டில் சத்திய வார்தைகளை மேலோட்டமாக வாசித்து பார்த்தால் நாராயணத்தை அறிய இயலாது.எனவே அகிலத்திரட்டு என்ற ஞான திறவுகோலை படிக்கும் போது ஆழமான மனத்துடன்,தத்துவரீதியாக ஆராந்து அய்யயாவின் நினைவை உள் நிலைநிருத்தி வாதித்தால்தான் இந்த அகிலத்திரட்டு ஏட்டின் உண்மை புரியும்.இதை என் கருத்தாக சொல்லவில்லை அய்யாவே அகிலத்திரட்டில் அருளியிருக்கிறார் அதாவது "வச்சூகந்து பார்ப்பீரால் வழி தெரியும் இவ்வேட்டில் என்னவோ(சந்தேகபுத்தியால்) என்று எண்ணம் கேட்பீரால் அன்னமுதல் அற்று ஆக்கினைக்குளடைவீர் நல்லவர் நல்லாவார் நானுரைக்க கேளம்மானை செல்ல திரு கேட்கச் செப்புகிறார் நாரணரும்" என்று அய்யா நாராயணர் தன் திருவாகிய மகாலெட்சுமிக்கு உரைக்கிறார்.இந்த கலியகத்தில் அய்யா தவமிருந்தது பெரும் சிறப்பாகும்.அதுபோல் அய்யா தவமிருந்த இடமான சாமிதோப்புபதியின் வடக்கு வாசலும் பெருமை வாய்ந்ததாகும்.
அய்யா உண்டு

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...