திருச்செந்தூர் சண்முகர்சிலையின் அற்புதம்


சண்முகர்சிலையின் அற்புதம்
திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்]அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.திருமலைக்கு கப்பல் படை இல்லாததும் தலைநகரமான மதுரையிலிருந்து தென்கோடியை அவரது இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைக்கஇயலாமல் 
போனதும் அந்நியரின் கையும் மதமும் வேறூன்ற வித்திட்டது.கப்பல் வலிமையுடனிருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களூம் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக்கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர்.கொற்கைக் குடாவான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்களும்,சங்குகளும், கடற்கரையோரமிருந்த கோயில்களின் பொற்சிலைகளும், கருவூலங்களும் அக்கொள்ளையர்களின் கொள்கைகளாகயிருந்தன.
      கி.பி.1635 இல் தூத்துக்குடி போர்ச்சுக்கீசியர்களின் அடக்குமுறைக்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர்கள் திருமலையுடன் நட்புடனிருந்ததால் 
தன்னுடைய நாட்டில் அடித்த கொள்ளையை திருமலைமன்னர் கண்டு கொள்ளவில்லை.ஏனென்றால்திருமலைக்கும் இராமனாதபுரம் சேதுபதிகளுக்கும் நடைபெற்றப் போரில் போர்ச்சுக்கீசியர்களின் ஆயுத 
உதவியாலும்,படை உதவியாலும் திருமலை வெற்றி பெற்றார்.இந்த உதவி எதிரொலியே கொள்ளையைக் கண்டு கொள்ளாமலிருக்கச் செய்தது.எனவே தென்கடற்கரைப் பகுதி பரதவர்கள் மற்றும் பிற மக்களும் பல இன்னல்களைஅனுபவித்தனர்.காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவுமிருந்தது. அயல்நாட்டுடன் வணிகம் செழித்திருந்தது.டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் வரி வசூலித்து வந்தனர்.கி.பி.1648 இல் போர்ச்சுக்கீசியர்களூக்கு ஆதரவான திருமலை,டச்சுக்காரர்களை காயல்பட்டினத்திலிருந்து வெளியேறச் 
செய்தார்.இதனால் மிகுந்த அவமானமும் நஷ்டமும் அடைந்து கொண்டதாக நினைத்த டச்சுக்காரர்கள்திருச்செந்தூருக்குத் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றியதுடன்,அங்கிருந்த அப்பாவி இந்துக்களைக் 
கொள்ளையிட்டனர்.வீடுகளுக்குத் தீயிட்டனர்.தங்களுடைய இழப்பிற்காக கட்டாய வரி வசூல் செய்தனர்.கடற்கரைக் கோயிலின் பாறைக் குடைவரை எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து றிந்தனர்.கற்சிற்பங்களை 
உடைத்தனர்.அங்கிருந்த எழில்மிகு அய்ம்பொன் சிலைகளையும் சண்முகரின் சிற்பத்தையும் நடராஜ மூர்த்தியின் சிற்பத்தையும், மேலக்கோயில்,வெயிலுகந்தம்மன் கோயில் சிலைகளையும் கணக்கிலடங்காத பொன்நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறப் புறப்பட்டனர்.தங்களுடைய தெய்வத்தை களவாடிச் 
செல்லுவது கண்டு பொறுக்காத உள்ளூர் மக்களாகிய தலத்தார் [அனைத்து ஜாதி மக்கள்] தங்கள் கையில் கிடைத்தஆயுதங்களைக் கொண்டு எதிர்த்தனர்.வேதங்களோதும் அந்தணர்களாகிய திரிசுதந்திரர்களும் கையில் ஆயுதமேந்திப் போராடினர்.திரிசுதந்திரர்கள் உட்பட பலர் உள்ளூர் மக்கள் மாண்டனர்.டச்சுக் கொள்ளையர்கள் படகுகள் மூலம் 
களவாடியப் பொருட்களுடன் இலங்கை நோக்கிப் பயணமானர். திருச்செந்தூரைத் தாண்டுமுன்னே திடீரெனபுயல்,மழை தாக்கியது. தெய்வமென்று பாராமல் சிலைகளைத் தூக்கி வந்ததுதான் காரணம் என்பதை உணர்ந்தனர். டச்சுக்காரர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து விடக் கூடாது என்பதற்காக சண்முகரின் சிலை,நடராஜப்பெருமானின் 
சிலை ஆகியவற்றை கடலினுள் எறிந்தனர்.முருகனின் அற்புதத்தால் புயலும்,மழையும் நின்றது. டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகனின் கோயிலைக் கையெடுத்துக் கும்பிட்டு எஞ்சிய கோடிக்கணக்கான நகைகளுடன் இலங்கை சென்றனர்.தென்பகுதிக்கு திருமலையின் வரிவசூல் செய்யும் அலுவலராகப் பணியாற்றிய வடமலையப்பப்பிள்ளை 
தூங்கும் போது முருகப்பெருமான் கனவில் காட்சி தந்து கடலினுள் தாமிருக்கும் இடத்தின் மீது ஒரு எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கும் வானத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்று கூறி மறைந்தார்.தம்முடைய பணியாளர்கள்,நண்பர்கள்,கடலில் முத்துக் குளிக்கும் மீனவர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு கடலுக்குள் படகில் சென்றார்.சிறிது தூரம் சென்றவுடன் முருகன் கனவில் கூறியது போல வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.மெய் சிலிர்த்த அவர்கள் முருகா முருகா என்று மெய்மறந்து முழக்கமிட்டு தலை மீது கைகூப்பினர்.அங்கே எலுமிச்சம்பழம் ஒன்று தந்தது. அந்த இடத்தில் குதித்தனர்,என்னே அற்புதம் சண்முகர்சிலையும்,நடராஜர் சிலையும் கிடைத்தது.நடராஜர் சிலையின் பீடத்தில் திருநள்ளாறு என்று 
எழுதப்பட்டிருந்தது.மக்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர்.உடைந்த மூலவர் சிலை புதிதாகச் செய்யப்பெற்று பிரதிஷ்டை செய்யப் பெற்றது. குடமுழுக்கு நடைபெற்றது.டச்சுக்காரர்களின் கொள்ளையால் மனம் வருந்திய திருமலைகொள்ளையடித்துச் செல்லப்பட்ட எஞ்சியப் பொருட்களை மீட்டால்தான் மக்கள் மதிப்பார்கள் எனக் கருதி 
டச்சுக்காரர்கள் கோரிய பொன்னை தமது காயல்பட்டினம் கணக்கப் பிள்ளை மூலமாக இலங்கைக்குக்கொடுத்தனுப்பி மீட்டார்.கடலினுள் டச்சுக்காரர்களைச் சிலையைப் போடவைத்ததும்,சிலை இருந்த இடத்தைக் காட்டியதும் செந்திலாண்டவனின் அற்புதங்களுள் சிறப்பாகும்.   

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...