குமரகுருபரருக்கு அருளிய முருகப்பெருமான்


குமரகுருபரருக்கு அருளிய முருகப்பெருமான்
ஸ்ரீவைகுண்டத்தில் சைவவேளாளர் மரபைச் சேர்ந்த சண்முகசிகாமணி
கவிராயருக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் பிறந்த குமரகுருபரர் தமது
மூன்று வயதளவிலும் வாய் பேசாமல் ஊமை போலிருந்தார்.அது கண்ட
பெற்றோர் பெருந்துயரடைந்தனர்.இதற்கிடையில் பிறந்த இரண்டாவது
குழந்தை வாய் பேசியது.இதனால் மேலும் மனம் வருந்தினர்.அய்ந்து
வயதானது குமரகுருபரனுக்கு, ஊமைக் குழந்தையை தூக்கிக்கொண்டு
திருச்செந்தூர் முருகனின் கோயிலுக்கு வந்தனர்.முருகனின் சன்னிதி முன்பு
குழந்தைக் கிடத்தினர் 40 நாட்கள் விரதமிருந்தனர்,தினமும் மனமுருக
வேண்டிக்கொண்டனர்.யாதொரு பலனும் தெரியவில்லை.மனமுடைந்த
தம்பதியர் நாளை ஒரு நாள் பார்ப்போம் முருகன் அருளீயாவிடில்
நாமிருவரும் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்ற மனமுறுதியைக்
கொண்டனர்.காலையில் கடலில் நீராடி கொடிமரத்தடியில் மகனைக் கிடத்தி
விட்டு முருகனைத் தரிசிக்கச் சென்றனர்.அந்நேரம் முருகன் கோயில்
அர்ச்சகர் வடிவில் வந்து குமரகுருபரன் முன்பு ஒரு வெண்டாமரைப்
பூவொன்றினைக் காட்டி இது என்ன என்று கேட்டார்.அது நாள் வரையிலும்
பேசாமலிருந்த ஊமைக் குழந்தை ’பூ’ என்றது.’சைவம் தழைக்கப் பாடு’என்று
முருகன் கட்டளையிட்டு மறைந்தார்.’பூ மேவு செங்கமலப் புத்தேளும் 'என்ற பாடல் அடியை முதலாகக் கொண்டு கந்தர் கலி வெண்பா நூலைப் பாடி முருகனின் பெருமைக்குப் பெருமைச் சேர்த்தார்.ஊமையாய் இருந்தவனை கவி பாடச் செய்து குமரி முதல் காசி வரை பாடலால் உலகம் போற்றச் செய்த அற்புதம் செய்தார் நமது செந்திலாண்டவர்.

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...