கோபுரம் கட்டிய தேசிகமூர்த்தி சுவாமிகள்
கோயில்களையும் திருப்பணிகளையும் கோபுரங்களையும் நாடாண்ட அரசர்களும் அரசிகளும் அதிகாரிகளும் செய்த வரலாற்றைக் கண்டுள்ளோம்.திருச்செந்தூரில் இத்தகைய வரலாற்றை புரட்டிப் போட்டுள்ளார் ஒருதுறவி. திருச்செந்தூர் கோயிலின் இராஜ கோபுரத்தைக் கட்டியவர் ஒரு ஆண்டியே.அதிகாரபலம்,பொருளாதார பலமிக்கவர்கள் நிறைந்த,அக்காலத்தில் தமது கோபுரத்தைக் கட்டத் தகுந்தவர் அத்துறவியே என்பதை அடையாளம் காட்டினார் முருகப்பெருமான்.அந்நாளில் தம் அடியவரான தேசிகமூர்த்தி என்பாரின் கனவில் தோன்றிய செந்திலாண்டவர் தம்முடைய கோபுரத் திருப்பணியை மேற்கொள்ளப் பணித்தார்.தேசிகமூர்த்தி திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஒடுக்கத் தம்பிரானாக இருந்தார்.அருள்மிகு தூண்டிகை விநாயகர் கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருப்பணி மடத்தில் தங்கி கோபுரப் பணியைத் தொடங்கினார்.
வேண்டுபவர்க்கு வேண்டுவன யாவற்றையும் அருளும்செந்திலாண்டவனின் அருளால் சந்தனாமலை பாறை மீது அஸ்திவாரம் போட்டுக் கல் தச்சு வேலைகளைத் தொடங்கினார்சிவகாசி மற்றும் தூத்துக்குடி நாடார்கள் மகமை பணம் வசூலித்துக் கோபுரத்திருப்பணிக்கு உதவினர்.இதன் செப்பேடு திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ளது.உள்ளூர் மக்கள் வெளியூர் மக்கள் என சாரை சாரையாக வேலைக்கு வந்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளியூரிலிருக்கும் வசதி படைத்தவர்கள் ,ஊர்களின் பொதுவான தலைமையிடமும்,பல்வேறு இன மக்களின் பங்களிப்பு வேண்டுமென, அவர்களிடமும் நன்கொடை வேண்டிப்பெற்றார்.அவ்வப்போது நன்கொடை வந்ததால் செலவுகளும் வேலைகளும் நடந்துகொண்டேயிருந்தன இந்நிலையில் வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலாத நிலையை முருகன் ஏற்படுத்தினார்.பக்தர்களைச் சோதிப்பது இறைவனின் பொழுது போக்கு அல்லவா.தம்முடைய இக்கட்டான நிலையைக் கண்டு..என்ன செய்வது என்று மனம் வேதனையடைந்த தேசிகமூர்த்தி செந்திலாண்டவனை நோக்கிக் கும்பிட்டார்.முருகா...உன் பெயர் கூறி நான் வழங்கும் திருநீறு அவரவர் வேலைக்கேற்ற ஊதியமாக மாற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.மாலை வந்தது வேலையை முடித்து சம்பளம் பெறவேண்டி பணியாளர்கள் சாமியை நோக்கி வந்தனர்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருஇலை விபூதிப் பொட்டலத்தைக் கொடுத்தார்.அப்பொட்டலத்தை தூண்டிவிநாயகர் கோயில் முன்பு நின்று விநாயகரைக் கும்பிட்டு திறந்து பாருங்கள் என்று கூறினார். வேலையாளர்கள் அப்பொட்டலத்தை தூண்டிவிநாயகர் கோயில் முன்பு நின்று விநாயகரைக் கும்பிட்டு திறந்து பார்த்தனர்.என்னே ஆச்சரியம்...அவரவர்கள் செய்தவேலைக்கேற்ற ஊதியம் அதனுள் இருந்தது.இவ்வாறு பணிகள் தொடர்ந்தது.தேசிகமூர்த்திசாமிகளின் தன்னலமற்றத் தொண்டு,அருட்சுடர் விடும் கண்கள்,என்னேரமும் முருகனின் மீதான பக்தி,திருப்பணி மீதான கவலை இவற்றைக் கண்ட முருக பக்தர்கள் தங்களுடைய ஊரில் பல்வேறு சமுதாய மக்களுக்கும் வரி போட்டுப் பணம் பிரித்து கோபுரத் திருப்பணிக்காக வழங்கியுள்ளனர்.இது குறித்த செப்பேடுகள் இன்றளவும் தலை நிமிர்ந்து உள்ளது.சாத்தூர் செப்பேடு,ஏழாயிரம் பண்ணைச்செப்பேடு,சாத்தூர் நென்மேனி,வடமலைபுரம் செப்பேடு,சிவகாசி செப்பேடு,தட்டப்பாறை வணிதம் பட்டயம்ஆகியன கோபுரத்திருப்பணிக்காக சாதி பேதமின்றி பொன்னும் பொருளும் வழங்கிய தகவலைத் தருகிறது.ஒன்பது நிலைக் கோபுரத்தில் ஆறு நிலைகள் எழுந்து நின்றன.சுற்று வட்டார மக்களில் வசதி படைத்தோர்,எளியோர் என முருகனடியார் பலரிடமும் ந்ன்கொடைப் பெற்றாகிவிட்டது.மீண்டும் மீண்டும் அவர்களையேச் சென்றுப் பார்ப்பது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.மனம் வருந்திய தேசிகமூர்த்தி கண்ணீர் சிந்தினார்.அன்றிரவு கனவில் தோன்றிய முருகன்,’அருகிலுள்ள காயல்பட்டிணத்தில் வசிக்கும் வள்ளல் சீதக்காதியைச் சென்று பார்.உன் மனக்குறை தீரும் என்று கூறி மறைந்தார்.அதே போன்று பெறு வணிகரான சீதக்காதியின் கனவிலும் தோன்றிய முருகன் நாளை எனது பக்தன் வருவார்,அவரிடம் உன்னிடமுள்ள ஒரு மூடை உப்பைக் கொடு என்று கூறி மறைந்தார்.மறு நாள் இசுலாம் சமயத்தைச் சேர்ந்த சீதக்காதியைச் சென்றுப் பார்த்தார்.முருகன் தன் மீது கொண்ட பாசத்தால் மனம் நெகிழ்ந்த சீதக்காதி ஒரு மூடை உப்பைக் கொடுத்தனுப்பினார்.உப்பு மூடையுடன் திருப்பணி மடத்திற்கு வந்த தேசிகமூர்த்திக்கு முருகனின் உத்தரவின் பொருள்,உப்பு மூடையைத் திறந்துப் பார்த்தபின்பு விளங்கியது.என்னே அற்புதம்...உப்பு மூடை அனைத்தும் தங்க காசுகளாக இருந்தன.கோபுரத்தின் ஒன்பது நிலைகளும் கும்பகலசத்துடன் உயர்ந்தன.உவகையுடன் குடமுழுக்கு நாளைத் திட்டமிட்டு பணிகள் நடந்து வந்தன.அன்றிரவு செந்திலாண்டவன் தேசிகமூர்த்தியின் கனவில் தோன்றி,தேசிகமூர்த்தி உன்னுடையப் பணிகள் நிறைவுற்றன,உடனே காந்தீஸ்வரம் செல்.அங்குதான் நீ இருக்க வேண்டுமென கட்டளையிட்டார்.முருகனின் கட்டளையேற்ற தேசிகமூர்த்தி உடனே காந்தீஸ்வரம் சென்றார்.கோபுர குடமுழுக்கு நடைபெற்றபோது அங்கிருந்தே அனைத்து நிகழ்ச்சிகளையும் முருகனருளால் கண்டு கழித்தார்.தற்போதுள்ள ஆழ்வார்திருநகரிக்கு கிழக்கே உள்ள ஆழ்வார்தோப்பு என்னும் நாடாழ்வார்களின் ஊரில் காந்தீஸ்வரம் உள்ளது.அருள்மிகு ஏகாந்தலிங்கேஸ்வரர் கோயிலின் வடபுறம் உள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கி தவமியற்றினார். இவருடைய ஜீவசமாதி இங்குள்ளது.இன்றும் மக்கள் வழிபட்டு தங்களுடைய நோய்களையும் கவலைகளையும் போக்கிக் கொள்கின்றனர்.கோபுரத்திருப்பணி முருகனின் தொண்டனான ஆண்டி ஒருவரின் விடாமுயற்சியையும்,பிற சமயமான இசுலாம் சமயத்தை சேர்ந்த சீதக்காதி மீது முருகப்பெருமான் கொண்ட நம்பிக்கையையும் பாசத்தையும் காட்டுகிறது.

வென்றிமாலைக் கவிராயர்
திருச்செந்தூரில் முருகனுக்குத் தொண்டு செய்யும் திரிசுதந்திரர் குடும்பத்தில் வென்றிமாலை பிறந்தார்.தொடக்கக் காலக்கல்வி கசந்தது.செந்திலாண்டவன் கோயிலைச் சுற்றுவது,முருகனின் நாமத்தை எந்நேரமும் கூறுவது,மனம் போலப் பாடுவது எனத் தொடர்ந்து வந்தார்.தந்தையின் கண்களுக்கு பொறுப்பற்றப் பிள்ளையாக வென்றிமாலைக் காட்சி அளித்தார்.வாழ்க்கையை நடத்துவதற்கு உதவியாக அமையுமென திருக்கோயில் மடப்பள்ளியில் கையாளாகச் சேர்த்து விட்டார்.முருகனின் பூஜைக்காக பிரசாதங்கலைச் சமைத்து வழங்கவேண்டியது இவரது பொறுப்பு.இவ்வாறிருக்கும்போது ஒருநாள் செந்திலாண்டவனைச் சிந்தித்து தியானத்தில் இருந்து விட்டார் வென்றிமாலை.பூஜைக்கு வேண்டிய பிரசாதம் தயாரிக்கப்படவில்லை. சண்முகருக்கு பூஜைக்கு வேண்டிய பிரசாதத்தை வாங்க வந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.எதற்கும் உதவாதவன் என்று கூறி நையப்புடைத்து விரட்டி விட்டனர்.மனம் வருந்திய வென்றிமாலை கடற்கரையில் அமர்ந்து சிந்தித்தார்.இனி உயிரோடிருப்பதில் அர்த்தமில்லை என்று கடலில் விழுந்து உயிரை விடத் துணிந்தார்.அந்நேரம் நில் என்ற குரல் கேட்டது முதியவர் வடிவில் வந்த முருகன் வென்றிமாலையைத் தடுத்து,செவலூர் என்ற ஊரில் வாழும் கிருஷ்ண சாஸ்திரியைப் பார்,என்று கூறி மறைந்தார். வென்றிமாலை செவலூர் சென்று முருகனின் கட்டளையை சாஸ்திரிகளிடம் கூறினார்.மனம் மகிழ்ந்த சாஸ்திரி,தாம் வட மொழியில் பாடிவைத்திருந்த திருச்செந்தூர்மகாத்மியத்தை [திருச்செந்தூர் தலபுராணம்]தமிழில் பாடக் கூறினார்.எப்படிப் பாடுவேன்...ஏதோ நாவில் வந்ததைப் பாடி வந்தேன்.தமிழே சரியாக அறியாத நான் எப்படிப் பாடுவது...என்றார்.செந்திலாண்டவனை நினைத்துப் பாடு என்றார் சாஸ்திரி.முருகனை நினைத்துப் பாடலைத் தொடங்கினார்.வென்றிமாலையின் அறிவிலும் நாவிலும் முருகன் குடி கொண்டான்.சிவபெருமானை முதலாவதாக வைத்து 899 பாடல்களை இனிய,எளிய தமிழில் பாடினார்.வென்றிமாலையின் கவித்திறன் கண்ட கிருஷ்ண சாஸ்திரி ‘வென்றிமாலைக் கவிராயர்‘என்ற பட்டத்தை வழங்கினார்.தாம் பாடிய திருச்செந்தூர் தல புராணச் சுவடிகளுடன் திருச்செந்தூர் வந்தார் தாமியற்றியப் பாடல்களை அரங்கேற்றப் போகிறேன் என்று கூறினார்.அவருடைய உறவினர்கள் வென்றிமாலைக்குப் பித்துப் பிடித்து விட்டது என்று கேலி பேசினர்.கோயில் நிர்வாகிகளிடம் அரங்கேற்றம் செய்வது குறித்து அனுமதி வேண்டினார்.சமையல் கூடத்தில் வேலை செய்தவனாவது கவிதை பாடுவதாவது என்று புறம் தள்ளினர் கோயில் நிர்வாகிகள்.தனக்கும் தனது திருச்செந்தூர் தல புராணநூலுக்கும் நேர்ந்த அவமானத்தால் மனமுருகி அழுதார்.தலபுராணச் சுவடிகளை கடலினுள் எறிந்து விட்டு தவமிருந்தார்.நீண்டநாள் தவத்தால் முருகனடி சேர்ந்தார்.கடலில் இட்ட ஏடு நீரோட்டத்தை எதிர்த்துச்சென்று ஈழநாட்டில் பனைமுனை என்ற இடத்தில் கறை ஏறியது.அவ் ஏடுகள் முருகனடியார் ஒருவரது கையில் கிடைத்தது.அந்நூலையும் அதன் பொருளையும் அறிந்த அடியார் மெய்சிலிர்த்தார் முருகன் தனக்குக் கொடுத்த பிறவிப் பயன் என்று கொண்டாடினார்.தினமும் ஏடுகளுக்குப் பூ இட்டு தூப தீபம் காட்டி பூஜை வைத்து வழிபட்டார்.அந்நாளில் கொடிய நோய் ஒன்று அவ்வூரில் பரவியது.பலர் மாண்டனர்.ஆனால் திருச்செந்தூர் தல புராணம் இருந்த அடியார் வீட்டிலும், அத்தெருவிலும் நோய் புகவில்லை ; பரவவில்லை.இவ்வற்புதம் ஈழ நாடு முழுவதும் பரவியது.வென்றிமாலைக் கவிராயர் திருச்செந்தூரில் அரங்கேற்ற நினைத்த தலபுராணம் அயல் நாடுகளில் மக்களின் உள்ளங்களில் அரங்கேறியது.திருச்செந்தூரில் வேதமோதும் திரிசுதந்திரர் குடும்பத்தில் தோன்றிய வென்றிமாலை முருகனின் அருள் தொண்டராவார்.
No comments:
Post a Comment