மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் என்ற பொன்னம்மை நாடாத்தி



           மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் என்ற 
                    பொன்னம்மை நாடாத்தி
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலானது பொன்னம்மை நாடாத்தியின் சமாதியில் எழுந்த ஒரு கோவிலாகும். இவ்விடம் முற்காலங்களில் பனங்காடாக இருந்தது. இது பருத்திவிளை பொன்னையா நாடார் குடும்பத்திற்குச் சொந்தமான இடமாகும் இங்கு அடர்ந்த பனங்காடுகள் காணப்பட்டதால், நாடார் மக்கள் பதநீர் இறக்கும் தொழிலை செய்தவர்களில் அனந்தன் நாடாரும் ஒருவராவார். மக்கள் பெருக்கம் அதிகமாக இல்லாத காலமாகையால் மக்கள் நடமாட்டம் இவ்விடத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். அனந்தன் இறக்கி வைக்கும் பதிநீரை மனைவி பொன்னம்மை குடிசைக்கு எடுத்துச் சென்று காய்ச்சி கருப்புக் கட்டியாக்குவது அவர்களின் அன்றாடப்பணியாகும். இது தினந்தோறும் நடந்து வந்த தொடர் நிகழ்ச்சியாகும்.
நாடார் மக்களின் குல தெய்வம் பத்திரகாளி என்பது அனைவரும் அறிந்ததே. இதை மலையாளிகள் “பகவதியென்று” அழைப்பது வழக்கம். பனையேறும் நாடார் தொழிலாளிகள் பருவ காலத்தில் (season) முதல் முதலாவதாக இறக்கும் பதிநீரை பத்திரகாளிகுப் படைத்த பிறகுதான் தங்களது வீட்டுற்கு எடுத்துச் செல்பதை ஒரு மரபாக இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள். கிறிஸ்தவரானாலும், இந்துவானாலும் இச்சடங்கை, பதிநீர் இறக்கும் அனைத்து நாடார் மக்களும் இன்றளவும் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். ஒரு பருவகாலத்தில், வழக்கம் போல் அனந்தன் நாடார் பதிநீரை இறக்கி வைத்துவிட்டு, படையல் ஒழுங்குகளையும் செய்துவிட்டு, குளித்து சுத்தம் ஆவதற்கென்று அருகாமை ஓடைக்குச் சென்றார். அவ்வேளையில் அன்னாரது மனைவி பொன்னம்மை பதிநீரை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக அங்கு வந்தார்கள். படையல் எல்லாம் முடித்து விட்டு கணவன் சென்று விட்டார் என்று எண்ணிய பொன்னம்மை பதிநீரை எடுத்து குடிசை வீட்டிற்கு வந்துவிட்டார். குளித்து விட்டு திரும்பிய அனந்தன் பதிநீரை காணாததால் திடுக்கிட்டார். படையல் செய்வதற்கு முன் பதிநீரை எடுத்துச் செல்வது நெறி தவறிய செயலாகும். எனவே அவர் மனம் வெதும்பியது. இந்நிலையில் குடிசைக்குச் சென்றார். அங்கு பதிநீரை மனைவி எடுத்து வந்து அடுப்பேற்றி இருந்ததைக் கண்டு சினம் கொண்டார். விவரம் அறியாத பொன்னம்மை அவரின் கோபத்திற்கு காரணம் என்ன என்று வினைவினாள். “காரணமாக கேட்கிறாய்” அம்மனுக்கு படையல் வைக்கும் முன் யார் உன்னை பதிநீரை எடுத்து வரச் சொன்னது’ என்று சத்தமிட்டு, ஆத்திரத்தால் பெண்பனைப்பூவை பதப்படுத்தும் கடிப்பு ஆயுதத்தால் ஓங்கி தலையில் அடித்துவிட்டார். மண்டையில் பலமாக இறங்கிய அடியால் பொன்னம்மை இரத்த வெள்ளத்தில் மிதந்தாள். சிறிது நேரத்தில் அவள் உயிர் பிரிந்தது. எதிர்பாராத இக்கொலையைக் கண்ட அனந்தன் நிலைகுலைந்து தடுமாறிப் போனார். ஊராருக்கும், அதிகாரிகளுக்கும் பயந்து எவரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு ஓடி தலைமறைவானார். காலங்கள் பல உருண்டோடின. ஆனாலும் தனது மனைவியை அநியாயமாகக் கொலை செய்த நிகழ்ச்சியை நினைத்து மனம் நொந்த வண்ணமிருந்தார். எப்படியாவது திரும்பும் பருத்திவிளை பனங்காட்டிற்கு வந்து மனைவியின் பூத உடல் என்னவாயிற்று என்று அறந்திட ஆர்வம் கொண்டு, ஒரு பண்டார (சன்னியசி) வேடமணந்து, பனங்காட்டிற்கு வந்தார்.
இதற்கிடையில் பொன்னம்மையின் பிணத்தை ஊரார் புதைத்து விட்டனர். இந்த புதைகுழியின் அருகாமையில் கடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அக்கிணறு இன்றும் உள்ளது. அக்கிணற்றில் ஊர் பெண்கள் தண்ணீர் எடுத்துவரச் செல்வது வழக்கம். பொன்னமையின் இந்த அகால மரணத்தால் அவரது ஆவியானது சில இளம் பெண்களை தொந்தரவு செய்து, சாமி ஆடினதாக பெரியார்கள் இன்றும் கூறுகின்றனர். இதனால் கலவரமுற்ற சுற்றத்தார், பொன்னம்மையின் ஆவியை சாந்தப்படுத்துவதற்காக அன்றைய பழக்க வழக்கங்களின் அடிப்படையில், ஒரு படையல் போட்டனர். இப்படையல் அவள் இறந்த நாளான மாசி மாதம் 20-ம் நாள் போடப்பட்டது. அவளது புதை குழிக்கரையில் படையல் வைக்கப்பட்டது.
எனவே “படுக்கை” என்பது அகால மரணமடையும் நபர்களின் சமாதியில் ஆண்டுதோறும் அன்னாரின் குடும்பத்தாரால் செய்யப்படும் ஒரு சடங்காகும். இச்சடங்கைத்தான் மண்டைக்காட்டிலும் வருடாவருடம் பொன்னம்மையின் குடும்பத்தார் இணைந்து அவளது சமாதி (புதை குழியில்) செய்தனர். இதற்கிடையில் ஊரை விட்டு ஓடிப்போன பொன்னம்மையின் கணவரான அனந்தன் கொல்லம் சென்று மறைந்து வாழ்ந்து, சில காலங்களுக்குப் பிறகு தனது மனைவியின் சமாதியைப் பார்க்க வந்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சமாதியியல் ஈசல்புற்று ஒன்று வளர்ந்திருந்ததையும், அதில் படுக்கை பூசைகள் செய்யப்பட்டதையும் கண்டு அங்கு ஏதோ தெய்வத்தன்மை நிலவுவதாக நம்பிய அவரும் சடங்குகளைச் செய்து, படுக்கை போட்டுவிட்டு திரும்பவும் கொல்லம் சென்றுவிட்டார். கொல்லம் திரும்பிச் சென்று நண்பர்களிடம் இந்நிகழ்ச்சியையும் தான் கண்ட புற்றையும் பற்றிக் கூறினார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இதில் ஏதோ தெய்வீக சக்தியிருப்பதாக அவர்கள் கருதினார்கள்.

இவள் கொலை செய்யப்பட்டு விட்ட இடமான அப்பனங்காட்டிற்கு ஊர்மக்கள் பொதுவாக செல்வதில்லை. அங்கு பொன்னம்மாள் பேயாக உலவுவதாக பல வதந்திகள் அவிழ்த்து விடப்பட்டன. பிறகு அவ்விடத்தை “பொன்னம்மை மாண்ட காடு” என்று கூறலாயினர். இந்த மாண்டக் காடு நாளடைவில் மருவி “மண்டைக்காடு” என்றாகிற்று,
பொன்னம்மையின் கணவன் அனந்தவனுடன் சேர்ந்து மண்டைக்காட்டுக்கு வந்து, பொன்னம்மையின் சிதற்புற்று சமாதியை தரிசித்து பூஜைகள் செய்து, படுக்கையிட்டு வழிபடத் தொடங்கினர். நாளாவட்டத்தில் இது பிரசித்திப் பெற்ற பெண்களின் புண்ணியதலமாக ஆகிவிட்டது. அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் சாரை சாரையாக வந்து பலவிதமான பூசைகளும், படையல்களும், படுக்கைகளும் காணிக்கைகளும் செலுமத்தி பொன்னம்மையை வழிபடத் தொடங்கினர். நாலு திசைகளுக்கும் இதன் கீர்த்திப் பரவிடவே பருத்திவிளை நாடார்கள் இவ்விடத்தை பராமரிக்கத் தொடங்கினர்.
இவ்வாறாக பருத்திவிளை பனை ஏறும் தொழிலாளி அனந்தனின் மனைவி பொன்னம்மாள் நாடாத்தி மாண்டகாட்டை இன்று ‘மண்டைக்காடு’ என்றும் அவள் மேல் வளர்ந்த சிதற்புற்றை ‘பகவதி அம்மன்’ என்றும் நாமகரணம் பெற்று அது மண்டைக்காடு பகவதி அம்மன் சேத்திரமாக இன்று ஆக்கப்பட்டிருப்பதைப் பார்த்து நாடார் சமுதாயம் பெருமைபட்டது , இது நாடார் இனத்தவரின் உயர்வைக் காட்டும் இன்னொரு சின்னமாக அமைந்திருப்பது சிறப்பேயாகும். ஆனால் ஆதிக்க இனத்தவர்கள் இத்தலத்திற்குப் பல்வேறு தலப்புராணங்களைப் புதைந்து இதனுடைய உண்மை வரலாற்றை முற்றிலுமாக மறைத்து விட்டனர். அவர்களின் பணியே உண்மைகளை மறைப்பதும், பொய்யைப் புனைவதும் தானே.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...