1962 சீனா போரில் பிணக் குவியலுடன் சீனா கொண்டு செல்லப்பட்ட நாலுமாவடி டாக்டர்.R.அமிர்தலிங்கம் நாடார் M.B.B.S.,வீர் சக்ரா பெறும் அற்புதக்காட்சி




1962 சீனா போரில் பிணக் குவியலுடன் சீனா கொண்டு செல்லப்பட்ட நாலுமாவடி
டாக்டர்.R.அமிர்தலிங்கம் நாடார்  M.B.B.S.,வீர் சக்ரா பெறும் அற்புதக்காட்சி
பிரதமர் ஜவஹர்லால் நேரு உடன் 'வீர சக்கரம்' விருது பெறுபவர்டாக்டர்.R.அமிர்தலிங்கம் அவர்கள்.
எனது தாய் மாமா.என் தாயாரின் தம்பி.
இந்திய இராணுவத்தில் மருத்துவராக பணி புரிந்தார்.1962 சீனா போரில் தொடையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பிணக்குவியலுடன் சைனா கொண்டு போகப்பட்டார்.
பிணக்குவியலோடு சென்றதால் இந்திய அரசு மரணம் அடைந்ததாக கருதி, அறிவித்து அவருடைய உடைமைகளை சொந்த ஊரான திருநெல்வேலி நாலுமாவடிக்கு அனுப்பி வைத்தது.
எனது அத்தை ராதா அம்மாள் தன் கணவன் இறந்து விட்டதாக கருதி உடை மாற்றம் செய்ய நேரிட்டது.
சீனா கொண்டு செல்லப்பட்ட டாக்டர்.அமிர்தலிங்கத்தின் உயிர் போகவில்லை .
பிழைத்துக் கொண்டார்.
ஆனால்.....
முட்டி போட வைத்து கைகள் பின்புறமாக கட்டப்பட்டு "இந்தியா... டவுண்..டவுண் என்று சொல்ல சீன ராணுவத்தினர் கட்டளை இட்டனர்..
தன் வாயால் சொல்லவில்லை டாக்டர்.அமிர்தலிங்கம் .
ஓங்கி துப்பாக்கியை வைத்து பின் புறம் முதுகில் டம் என்று அடி விழுமாம் .
திரும்ப சொல்லச் சொல்வார்கள்....மறுக்க
அடி...அடி...அடி
இந்திய-சீன ஒப்பந்தம் ஏற்பட, அப்போதுதான் இந்திய ராணுவத்துக்கும்,நாலுமாவடியில் இருந்த ஆடை மாற்றிய தன் மனைவிக்கும் தெரிந்தது டாக்டர்.அமிர்தலிங்கம் மரணம் அடையவில்லை என்பது...
வீரச் சக்கரம் விருதை பிரதமர் நேரு வழங்கினார்.
சீன குண்டு பட்ட தொடையில் உள்ள குண்டுகள் இது வரை எடுக்காமல் இருந்து சமீபத்திலேயே 80 வயதுக்கு பிறகுதான் அகற்றப்பட்டது.
கல்கி பத்திரிக்கை "செத்துப் பிழைக்க நீ என்ன டாக்டர்.அமிர்தலிங்கமாடா ....என்று ஜோக்கு போட்ட காலமும் உண்டு .
நாலுமாவடி காமராசர் மேல் நிலைப்பள்ளி தாளாளராக சேவை செய்தார் .
பின்னாளில் ஏழைகளுக்காக ஏறத்தாழ இலவசம் என்று சொல்லும் அளவுக்கு மிகக் குறைந்த கட்டணமே வாங்கி மருத்துவம் செய்தார் டாக்டர்.அமிர்தலிங்கம் .
என் மாமா டாக்டர்.அமிர்தலிங்கம்-ராதா அமிர்தலிங்கம் தம்பதிகளுக்கு நளினி,ராஜா விக்ரமன்,மாலா,ரதி என நான்கு பிள்ளைகள்.
இதில் கடைசி மகள் ரதியை நான் திருமணம் செய்து கொண்டேன்.
தற்போது 87 வயதில் உள்ளார்.
தேசத்தை காக்கும் வீரர்களின் தியாகம் அறிவோம்
நன்றி- S.T.பாலசுப்பிரமணீய ஆதித்த நாடார்.,காயாமொழி

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...