நாடார்களின் நம்பிக்கை நட்சத்திரம் பி .எஸ் .ஆர்.

இவர் தென்காசி ஆட்சி செய்த ஸ்ரீவல்லபமாற பாண்டிய நாடான்குடும்பத்தைச் சேர்ந்தவர் . இவர்களுக்கென்று ஸ்ரீவல்லபமாறன் மற்றும் உடையார் கதைப்பாடல் சுவடிகள் உள்ளன .
பி .சிவசுப்பிரமணிய நாடார் சீனிநாடாச்சியின் மூத்தப் புதல்வராக பி.எஸ். இராஜபலவேசமுத்து நாடார் 30.05.1909 இல் பிறந்தார். சமுதாயப்பணியில் தலைசிறந்தவராக உலகமெங்கும் உள்ள நாடார்களால் போற்றப்படுகிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்த நாடார் பேட்டைகளை ஒருங்கிணைத்து வெற்றி கண்டார். 1942 இல் காங்கிரஸ் பணியிலிருந்து தன்னுடைய திறனை சமுதாய வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தி வெற்றி கண்டார்
தட்சிணமாற நாடார் சங்கத்தின் தலைவராக இவர் பொறுப்பேற்று நாடார் குலத்தலைவராகத் திகழ்ந்தார். இவர் தீர்த்து வைத்துள்ள சமுதாயச் சச்சரவுகள் ஏராளம். பிற சமுதாயத்தினரை அன்புடன் பண்புடன் நடத்துவார். தம்முடைய ஆங்கிலப் புலமையால் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார்.
தலைவர்
தட்சிணமாற நாடார் சங்கம்.
உதவித்தலைவர்
நாடார் மகாஜன சங்கம்
தலைவர்
ஆறுமுகநேரி பஞசாயத்து போர்டு
உறுப்பினர்
திருநெல்வேலி ஜில்லா போர்டு
உறுப்பினர்
திருச்செந்தூர் தாலுகா போர்டு
தலைவர்
ஆறுமுகநேரி நல்லூர் கீழ்க்குளம் ஒப்படி சங்கத் தலைவர்
உதவித்தலைவர்
காமராஜ் கல்லூரி தூத்துக்குடி
ஸ்தாபகர்
தட்சிணமாற நாடார் சங்கக் கல்லூரி - கள்ளிக்குளம்
ஸ்தாபகர்
பம்பாய் தட்சிணமாற நாடார் சங்க கல்லூரி-கள்ளிக்குளம் (இப்பள்ளிதான் பம்பாயின் முதல் தமிழ்ப் பள்ளியாகும் )
நாடார் சமுதாயத்திற்குத் தனியார் மற்றும் அரசால் இன்னல்கள் வரும் சமயம் அதனை நுட்பமாக அணுகி தீர்த்து வைத்துள்ளார். . நாடார் சமுதாயத்தின் காவலராக விளங்கினார். . அனைவராலும் பி .எஸ் . ஆர் என்றும் ராஜா நாடார் என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார் .
No comments:
Post a Comment