தாமிரபரணியை பாதுகாப்போம்


தூத்துக்குடி, தாமிரபரணியை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி வரும் ஜூலை 1ம் தேதி பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் பேரணியை அன்புமணி துவக்கிவைக்கிறார். தூத்துக்குடியில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றார். அவர் கூறுகையில், தமிழகத்தில் நீர்ஆதாரங்களை பெருக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மக்களை ஏமாற்றும் இலவச திட்டங்கள்தான் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி நதிநீரை பாதுகாக்க வலியுறுத்தியும், வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை பாதுகாப்பாக தேக்க அணைக்கட்டுகளை அமைக்க வேண்டும். பாசனம், குடிநீர்ப் பயன்பாட்டை தவிர தாமிரபரணி தண்ணீரை வழங்கக் கூடாது என வலியுறுத்தி "தாமிரபரணியை காப்போம், பலன் பெறுவோம்" என்ற முழக்கத்தோடு ஜூலை 1, 2 தேதிகளில் பா.ம.க., சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படவுள்ளது.பேரணியை அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார். 1ம் தேதி பாபநாசத்தில் தொடங்கி முதல் புன்னக்காயல் வரை இந்த பேரணி நடக்கிறது. 2ம் தேதி தூத்துக்குடி சிதம்பர நகரில் பா.ம.க., பொதுக்கூட்டம் நடக்கிறது

No comments:

Post a Comment

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.! நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர் புலவர் செ.ராசு கவுண்...