நாடாழ்வான்


கரிகால சோழ செங்கேணி
---------------------------------------------- 
நாடாழ்வான் அவர்களிடம்  
---------------------------------------------- 
மும்முடிச்சோழ நல்லூர் ஊரார் 
-----------------------------------------------
சித்திரமேழி விடங்கருக்காக
------------------------------------------------
தங்களது நிலங்களை விற்று 
------------------------------------------------
கொடுத்த பணம்  
------------------------------

கோப்பரகேசரிவர்மரான அதிராஜேந்திர சோழன் (கி.பி.1070) ஆட்சிக்காலத்தில், கிடங்கில் நாட்டு (திண்டிவனம்) கிடங்கிலான மும்முடிச்சோழ நல்லூர் ஊரார்கள் தங்களிடம் இருந்த "நீர் நிலம்" மற்றும் "கொல்லை நிலம்" ஆகியவற்றை விற்று "ஓய்மா நாட்டு பண்டிதசோழ சதுர்வேதிமங்கலத்து குடிப்பள்ளி செங்கேணி சாத்த நாலாயிரவனான கரிகாலச் சோழ செங்கேணி நாடாழ்வான்" அவர்களிடம் பணமாக கொடுத்தார்கள் என்று தெரியவருகிறது.

எதற்காக தங்களது நிலங்களை விற்று செங்கேணி நாடாழ்வான் அவர்களிடம் பணமாக கொடுத்தார்கள் என்றால், அந்த ஊரில் இருந்த திருகௌரீஸ்வரமுடைய மஹாதேவர் கோயிலில் மும்முடிச்சோழ நல்லூர் ஊரார்கள் எழுந்தருளிவித்த ஆடியருளுவார் சித்திரமேழி விடங்கருக்கு சனிக்கிழமைகளில் "திரு அமுது", "கறி அமுது", "நெய் அமுது", "தயிர் அமுது" ஆகியவற்றை செய்து படைப்பதற்காக கொடுத்தார்கள் என்பதாகும்.

மும்முடிச்சோழ நல்லூர் ஊரார்கள் தாங்கள் ஏற்படுத்திய சித்திரமேழி விடங்கருக்கு இறைத்தொண்டு செய்வதற்காக நிலங்களை விற்று பணமாக கரிகால சோழ செங்கேணி நாடாழ்வான் அவர்களிடம் கொடுத்தார்கள் என்று தெரியவருகிறது.
நன்றி - சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...