தூத்துக்குடி மாவட்டம்
எப்போதும்வென்றான்
கல்வெட்டு
தூத்துக்குடி மாவட்டம்
எப்போதும்வென்றான் என்ற
ஊரில் உள்ள சோலைசாமி
கோயிலில் உள்ள தூணில் ஒரு
கல்வெட்டு உள்ளது.
இது கூறும் செய்தி என்ன ?
கல்வெட்டின் பாடம்:
முதல் வரியும் இரண்டாம்
வரியும் சேர்ந்து தமிழ்
எண்களில்
தரப்பட்ட எண் 1512. இந்த எண்
,
கல்வெட்டில் அடுத்து வரும்
தமிழ் ஆண்டுடன்
பொருந்தவில்லை.
3 யீசுபற வர
4 ஆனி மீ 10 தேதி
5 கானிசா புறத்தி
6 லிறுக்கு திருவ
7 டி னாடாற் மக
8 ன் ராமசுவாமி னா
9 டாற் யெப்போது(ம்)
10 வென்றான் சோ
11 லைசாமி கோ(வி)
12 லுக்கு து/தூண் ..
செய்தி: கானிசாபுரத்தைச்
சேர்ந்த திருவடி நாடார்
என்பவரது
மகன் ராமசுவாமி நாடார்
என்பவர் சோலைசாமி
கோவிலுக்குத்
தூண் கொடை அளித்துள்ளார்.
இடையின ரகரம் வரவேண்டிய
இடங்களில் வல்லின றகரம்
வந்துள்ளது. எப்போதும்
வென்றான்
ஊர்ப்பெயர் “யெப்போதும்
வென்றான்” என
அமைந்துள்ளது.
பழங்கல்வெட்டுகளில் இவ்வாறு
இகரத்துக்கு யிகரம் இட்டு
எழுதப்பட்டுள்ளதைக்
காண்கிறோம். . ”த்தி” , “க்கு”
ஆகிய எழுத்துகள் ஒரே
எழுத்தாகக் கூட்டெழுத்து
வடிவில் எழுதப்பட்டுள்ளன.
“போ” , “சோ” ஆகிய நெடில்கள்
.
குறில்களாக எழுதப்பட்டுள்ளன.
ஈசுவர வருடம் (கல்வெட்டில்
யீசுபற) 1817, 1877 ஆகிய
வருடங்களில் வருகிறது.
#Nadar_History
1921ல்தான் சாணான் என்று
இருந்ததை நாடார் என்று
மாற்றினார்கள்,
அதற்கு முன் நாடார்
பெயருக்கும்
சாணார்களுக்கும் எந்த
தொடர்பும் இல்லை என்று
பொய் பிரச்சாரம் செய்யும் சாதி
அரிப்பெடுத்தவர்களுக்காக
சிறப்புப் இந்த பதிவுங்கோ...
No comments:
Post a Comment