#சிந்துவெளி_நாகரிகத்தின்_சமகாலப்_பண்பாடு_தமிழர்_நாகரிகம்!
¶தமிழர் நிலப்பரப்பில்,4200 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு கருவிகளின் பயன்பாடு நிலவிய மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. ❤️
"இந்திய துணை கண்டத்தின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்படும்" என்ற பெருமிதத்துடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பேராசிரியர் கா.ராஜன் தலைமையிலான தொல்லியியல் ஆய்வு குழுவினர் தயாரித்து அளித்துள்ள, ¶மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகளை¶ இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
இதை நாம் எப்படி விளங்கிக் கொள்வது? 4200 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது கிமு 2200 என்பது, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்துவெளி நாகரிகம் செழித்தோங்கிய காலமாகும். அந்த காலகட்டத்திற்கு சமமாக தமிழ்நாட்டிலும் இரும்பை வெட்டி எடுத்து, உருக்கி, இரும்பு கருவிகள் தயாரித்து தனது பயன்பாட்டுக்கும் பயன்படுத்திய நாகரிகம் தெரிந்த மக்கள் இருந்தனர் என்பதும் உறுதியாகிறது.
பிந்திய காலத்தில், இங்கிருந்து தான் ஹிட்டைட் அரசுக்கு இரும்பு தொழில்நுட்பம் சென்று இருக்க வேண்டும் ; அதற்கும் பிந்திய காலத்தில், இங்கிருந்து சென்ற உருக்கு எரும்பு மூலமாக கிமு 600 ல் சிரியாவின் டமாஸ்கஸ் வாள் தயாரிக்கப்பட்டது என்பது பல ஆய்வாளர்களாலும் ஏற்கப்பட்டுள்ளது.
தமிழர் நாகரிகத்தின் தொன்மை / உண்மை இப்போது தான் நமக்குத் தெரிகிறதா? ஏன் இந்த தாமதம்?
¶வட இந்திய ஆரியசார்பு- ஆர்எஸ்எஸ் சார்பு பார்ப்பன ஆய்வாளர்களின் சதிகள்:
**********************************
மயிலாடும்பாறை அகழாய்வு அறிக்கையின் முன்னுரையில், முதலமைச்சர் பின்வருமாறு தெரிவிக்கிறார் :-
"தமிழகத்தில் இரும்புத் தொழில்நுட்பம் அறிமுகமான காலம் குறித்து தொல்லியல்
ஆய்வாளர்களுக்கும், அறிவியல் ஆய்வாளர்க்களுக்கும் இடையே இணக்கமான நிலைப்பாடு இல்லை. தற்பொழுது, மயிலாடும்பாறையில் கிடைத்துள்ளச் சான்று இதற்கான உறுதியான விடையை அளித்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்திலுள்ள மாங்காடு மற்றும் தெலுங்கானூர் ஊர்களில் கிடைத்துள்ளச் சான்றுகளின் தொகுப்பும், மயிலாடும்பாறை மாதிரிகள் வாயிலாகப் பெறப்பட்ட இன்றைய அறிவியல் காலக் கணக்கீடும் 4200 ஆண்டுகளுக்கு முன்பே
தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகமானது தெளிவாக்கப்பட்டுள்ளது. 4200 ஆண்டுகளுக்கு முன்னர், நமது முன்னோர்கள் பெற்றிருந்த தொழில்நுட்ப அறிவு தமிழர்களின் சாதனைகளில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது."
தொகுப்புரையில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறையில் 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வில் பெறப்பட்ட முக்கியத்துவமான இரண்டு AMS காலக்கணிப்புகள் மூலம் இரும்புக் காலத்தின் துவக்கம் மற்றும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியிலிருந்து இரும்புக் காலத்திற்கு மாறியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சான்றோரப்பன்மலை (சாணாரப்பன்மலை) என்று அழைக்கப்படும் மலையின் அடுக்குகளில் புதியகற்கால மற்றும் இரும்புக்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. இம்மலையின் உச்சியில் உள்ள பாறை உறைவிடங்களில் வாழ்விடத்திற்கான தொல்லியல் சான்றுகளுடன் பாறைகீறல் ஒன்றும் காணப்படுகிறது. நிழல்சுனை (நெகுல்-ஜூனை) என்றழைக்கப்படும் பாறைகுகையில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் தீட்டப்பட்ட பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. மேலும், அதனருகில் புதிய கற்காலக் கற்கருவிகளைத் தேய்த்து மெருகூட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட
சிறுபள்ளங்களும் காணப்படுகின்றன. இவ்வாழ்விடம் மற்றும் ஈமத்தளத்தில்
முதன்முதலில் 2003-ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
போராசிரியர் கா.ராஜன் அவர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட நம்பிக்கை அளிக்கக்கூடிய தரவுகளின்
அடிப்படையில், முறையான அகழாய்வுப் பணிகள் 2021-ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டது. அகழாய்வுத் தளத்தில் நான்காம் பகுதியில் இடப்பட்ட அகழாய்வுக்
குழிகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின்வழி முக்கியமான இரண்டு AMS காலக்கணிப்புகள் பெறப்பட்டுள்ளன. இவ்விரண்டு மாதிரிகளும் முறையே 104 செ.மீ மற்றும் 130 செ.மீ ஆழத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றின் சராசரி மைய அளவீட்டுக்காலம் (Mid-range calibrated dates) முறையே கி.மு 1615 மற்றும் கி.மு 2172 ஆகும். இவ்விரண்டுக் காலக் கணக்கீடுகளும் பண்பாட்டு அடுக்குகளின் இயற்கைத் தன்மையைப் பற்றிய புதிய புரிதலை
அளித்துள்ளன.…
மயிலாடும்பாறையில் இருந்து பெறப்பட்ட தற்போதைய இரண்டு AMS காலக்கணிப்புகள் தமிழகத்தில் இரும்பின் காலம் 4200 ஆண்டுகள் என்பதையும், புதிய கற்காலம் இதற்கும் முந்தையது என்பதையும் வலுவாக உறுதிப்படுத்தியுள்ளன.
¶ஏன் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை இதுகாறும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை என்பதற்கு அகழாய்வு அறிக்கை பின்வரும் சிக்கலை முன்வைக்கிறது:-
"தமிழகத்தில் இரும்புத் தொழில்நுட்பம் அறிமுகமான காலம் குறித்து தொல்லியல்
ஆய்வாளர்களுக்கும், அறிவியல் ஆய்வாளர்க்களுக்கும் இடையே இணக்கமான நிலைப்பாடு இல்லை."
தொல்லியல் ஆய்வாளர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் இடையே வேறுபாடா? வட இந்திய ஆரியசார்பு பார்ப்பன தொல்லியியல் ஆய்வாளர்களின் சதியா?
இந்தியாவில் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்களின் கரிம காலக் கணக்கீடு வழியாக இரும்பு பயன்பாட்டின் காலத்தை விளக்கும் இருபதுக்கும் மேற்பட்ட அகழாய்வு முடிவுகள் பற்றிய விவரப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழர் வாழ்விட நிலப்பரப்பான பத்து இடங்கள் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்ற பத்து இடங்கள் வட இந்திய மாநிலங்களில் கண்டறியப்பட்டவை உள்ளது. இவையனைத்திலும் மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகள் காலவரிசையில் மிகத் தொன்மையானதாக கிமு 2200 ஆக இருக்கிறது. இதை ASI மற்றும் ஒன்றிய அரசு ஏற்குமா என்பதை தமிழ் சமூகம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஏனென்றால், இதற்கு முன்பாகவே இதேபோல் கண்டறியப்பட்ட வேறு தமிழ்நாடு அகழாய்வு முடிவுகளை ASI இந்திய அகழாய்வு கழகமும், ஒன்றிய அரசும் ஏற்கவில்லை. இந்திய அகழாய்வு முடிவுகளில் ஆரியசார்பு, ஆர்எஸ்எஸ் சார்பு பார்ப்பன ஆய்வாளர்கள் தொடர்ந்து தலையீடு செய்து வருகின்றனர். ASI அவர்கள் பிடியில் உள்ளது. அவர்களது முடிவுப்படி, இந்தியாவில் இரும்பு பயன்பாடு காலம் கிமு 1300- 1400 தான். அவற்றிலும் தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டு காலம் கிமு 600 மட்டுமே!
ஒவ்வொரு முறையும், தமிழர் நிலப்பரப்பில் தொன்மையான இரும்பு தொல்லியியல் பொருட்கள் கண்டறியப்பட்ட போதும்… ¶ஒரிடத்தில்_மட்டும்_கிடைத்தால்_போதாது , பல்வேறு இடங்களில் இதேமாதிரி காலகட்ட முடிவுகள் கிடைக்க வேண்டும் எனக் கூறி, வட இந்தியாவில் தான் இரும்பு முதலில் தோன்றியதாகவும், தமிழ்நாடு மிகமிகத் தாமதமாக தான் இரும்பு நாகரிகத்துக்கு வந்ததாகவும், அதுவரை வேட்டையாடும் சமூகமாகவே தமிழர் நாகரிகம் இருந்ததாகவும் விளக்கி வந்தனர்.
சிலவற்றை பார்ப்போம் :-
இரும்பு கனிமவளம் செறிந்த சேலம் மாவட்ட தெலுங்கானூரில் கண்டறியப்பட்ட உருக்கு/ ஊட்ஸ் எஃகிலான வாள் ஒன்றின் முனையில் எடுத்த துகளின் கரிம காலக் கணக்கீடு Carbon dating ல் ஒருமுனை கிமு 2100 ம், மற்றொரு முனை துகள் அதற்கும் பிந்தைய காலம் எனவும் முடிவுகள் வந்தது. அப்போது, இரண்டு காலத்தையும் ஏற்க முடியாது, தவறான ஆய்வு முடிவுகள் என ASI அவற்றை நிராகரித்தது.
அதேபோல், ஹைதராபாத் பகுதியில் அகழாய்வு ஒன்றில், இரும்பு துகளின் காலம் கிமு 2000 என முடிவுகள் வந்தபோது 'ஓரிடத்தில் கிடைத்த முடிவை மட்டுமே ஏற்று காலத்தை அறிவிக்க முடியாது' என நிராகரித்தது.
இப்படியாக, பத்து இடங்களில் கிடைத்த தொல்லியல் இரும்பு பொருட்களின் அகழாய்வு முடிவுகளையும், ASI மற்றும் ஒன்றிய அரசு நிராகரித்தது.
எச்சரிக்கை:-
¶தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உறுதியாக நிறுவிட, வட இந்திய ஆரிய- ஆர்எஸ்எஸ் சார்பு தொல்லியல் ஆய்வாளர்களுடன் கருத்துப் போருக்கும் தயாராகவேண்டும்.
No comments:
Post a Comment