வெள்ளையனை தீரன் சின்னமலையோடு சேர்ந்து எதிர்த்த,
கட்டுத்தடிக்காரன் குணாளன் நாடாரின் 217 வது நினைவு தினத்தை அரசுவிழாவாக நடத்த தற்போதைய முதல்வர் அவர்களிடம் இப்போதிருந்தே கோரிக்கை வைப்போம்.
இன்றில்லாவிட்டாலும் நாளை. இந்தாண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு , அரசு விழாவாக கொண்டாட தற்போதைய முதல்வர் அவர்கள் ஆவன செய்வார் என நம்புவோம்.
குணாளன் சின்னமலை கருப்பசேர்வை மூவருமே ஒத்த வயதினர். மூவருமே திருமணம் வேண்டாம் என்று நாட்டுக்காக வெள்ளையனை எதிர்த்த இளம் வீரர்கள்.
மூவருமே இதே ஆடி 18ல் 217 வருடங்களுக்கு முன் சங்ககிரி கோட்டையிலே வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டு வீரமரணம் அடைந்த இளங்சிங்கங்கள்.
சின்னமலை , கவுண்டர் இனத்தை சேர்ந்தாலும் நாட்டுக்காக அவனோடு தோள்கொடுத்து நின்ற வீரமறவர்களான குணாளனும், கருப்பசேர்வையும் நாடார் இனத்திலே பிறந்த மாவீரர்கள்.
கொங்கிலே பாடப்படும் கும்மிப்பாட்டு நாமறிந்ததே.
" கட்டுத்தடிக்காரன் முன்னே வர, இளம் கருப்ப சேர்வையும் பின்னே வர, வட்டப்பொட்டுக்காரன் சின்னமலை நடுவில் வர "
எனற பாடலில் சின்னமலையை கொண்டாடும் கவுண்டரினத்து மக்களைப்போல ,
நம்மவர்கள் மறந்துவிட்ட குணாளனையும் கருப்ப சேர்வையையும் மக்கள் மனதில் கொண்டு சேர்ப்போம்.
மறந்து விட்ட இவர்களின் வரலாறை மீட்டெடுப்போம்.
No comments:
Post a Comment