நாடார்கள் பூணூல் அணிந்த வரலாறு தெரியுமா ? படிங்க.....
நாடார்கள் பூணூல் அணிந்த வரலாறு தெரியுமா ? படிங்க.....
பல நூற்றாண்டுக்கு முன்பே பூணூல் அணிந்திருந்தனர் நாடார்குல சான்றோர்கள்.இதற்க்கு நேரடி எடுத்துக்காட்டு தான் சான்றோர்(நாடார்) குல ஏனாதி நாத நாயனார்.
இவர் சோழ நாட்டு இளவரசர்களுக்கும் சோழ நாட்டு இராணுவத்திற்கும் (போர்ப்படை) பயிற்சி கொடுத்தவர் ஆவார்.சேர சோழ பாண்டிய மன்னர் காலத்திலே பூணூல் அணிந்திருந்தனர்
சூரிய குல சந்திர குல நாடார்கள்...அறப்போர் முறைக்குப் பெரியபுராணம் குறிப்பிடும் ஏனாதி நாதரின் போர் முறையை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஏனாதி நாதர் சான்றார் குலத்தவர் ஆவார். சான்றோர் சமூகத்தவரின் குலத் தொழில் என்பது அறப்போர் மரபு, போர்ப் பயிற்சி, நாட்டை ஆள்தல், வருவாய்க் கணக்கு பராமரித்தல், நீதி நிர்வாகம் போன்றவை ஆகும்.
இதற்கும் ஏனாதி நாதர் புராணத்தில் ஆதாரம் உள்ளது. கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை பெருமாள் ராஜாக்கள் காலத்தில் (கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை) வழக்கிலிருந்த மூழிக்களக்கச்சம் என்ற நிர்வாக நடைமுறைச் சட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியவர்கள் சான்றார் குலத்தவரே ஆவர். கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் பலவற்றில் இதற்கான ஆதாரம் உள்ளது.
கி.பி. 17ஆம் நூற்றாண்டைய சூரிய சந்திரகுல சத்ரிய குல நாடார் மன்னர்கள் சான்றோர் சமூகப் செப்பு பட்டயங்களில் "குலமும் முப்புரி நூலும்(பூணூல்) உடையோர்" என எழுதியுள்ளனர். ஆகவே நாடார்கள் அந்த காலத்திலே பூணூல் அணிந்திருப்பது தெளிவாகிறது.செப்பு பட்டயமும் இன்றும் திருச்செங்கோடு வட்டம், கருமாபுரம் ஆதினத்தில் உள்ளது. நாடார்களுக்கு மட்டும் இன்றும் இந்த ஆதினத்தில் பூணூல் அணிவிக்க படுகிறது.
செப்பு பட்டையம் பற்றிய தகவல் அடுத்த பதிவில் வரும்
No comments:
Post a Comment