1637ம் ஆண்டில் நாடார்களுக்கும், செய்யான்வகையறாக்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் செம்புப் பட்டயம் (நன்றி - கரூர் சோழ நாடான்)


1637ம் ஆண்டில் நாடார்களுக்கும், செய்யான்
வகையறாக்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் செம்புப் பட்டயம்

ஸ்ரீ செங்குண்டு அய்யனார் துணை. ஸ்ரீ கழுவம்பாறை சுவாமி துணை. ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை

சுப ஸ்ரீ மன் மகா மண்டெலசுரன அறியிருயிரதல விபபாடன பாசைகிதப்பு வராயகண்டன் மூவராயகண்டன் முத்தமிழாய்கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதன பாண்டி மண்டல தான சாரியன தெண்டமண்டல சன்னடபிற சன்னடன பூர்வதஞ்சன பச்சியும் தீராத சமுத்தீறாதியு மயில்முக கம்பலமும் கொண்டு கிச்ச வேட்டையாடிய ராசாதி ராசனையே காளிராஜ்சிய பரிபாலினம் பன்னிரருளாயி நின்ற சாலிய வாகனம் சகாற்தம்.

1537ம் வருடம்

மேல்செல்லாநின்ற ஈஸ்வர வருடம் பங்குனி மாதம் 17ம் தேதி களிகோட்டை காளைமோதன ரனம் மத்தம் வடக்குதெரு வல்லாளபட்டியில் இருக்கும் கள்ளரில் செய்யான் அம்பலகாரனுக்கு மூத்ததாரத்து மகன் பெரியணன் செய்யான் இளையதாரத்து மகன் சின்ன ஒய்யப்பன் மாலட்டான் ஆக இந்த நான்கு பேர்களுக்கும் மதுரையைச் சேர்ந்த சாத்தங்குடியிலிருக்கும் சாணார்களில் சுப்பிரமணிய நாடார் பழனிக்குமார் நாடான் திருமங்கலத்தில் இருக்கும் நாட்டாண்மைக் கருப்ப நாடார். பொண்ணிலிங்க நாடான் ராக்கி நாடான் சிவகாசி கருப்ப நாடார் முத்துக்கருப்ப நாடார். விருதுக்குபட்டி நாட்டாண்மைஆதிமுத்து நாடார் இடும்ப நாடான் கடைக்கார நாடார். அருப்புக்கோட்டை நாட்டாண்மைககுப்ப நாடார் முத்துவேல் நாடார் பாளையம்பட்டி நாராயண நாடார் திருமால் நாடார் கூடக்கோவில் வீரபத்திர நாடார் வண்ணிய நாடார் மதுரை சந்தைப்பேட்டையிலிருக்கும் மாரிமுத்து: நாடார் சங்கரலிங்க நாடார் சிங்கம்புணிரியிலிருக்கும் மாரிமுத்து நாடார் சமய நாடார் கோம்பை தேவாரத்திலிருக்கும் பெருமாள் நாடார் பெரிய கருப்பு நாடார் சோழவந்தானிலிருக்கும் அய்ய நாடார் சுப்பு நாபார் ஆக நாங்களும் எங்களை சேர்ந்த மாராப்புகட்டி தோட்டக்கார மரமேரிகளும் எங்கள் உறவின்முறை அனைவோர்களும் எழுதிக் கொடுத்த குடிவிலை தாம்பூ சாசனம். என்னவென்றால் இதற்கு முன் எங்கள் உறவின் முறை அனைவோர்களும் கூடி எங்கள் குலதெய்வமாகிய பத்திரகாளியம்மன் கோவில் கட்டுவதற்காக வேண்டிய வரி போட்டு பணத்தை வசூல் செய்து மிகுந்த பணமாக இருப்பதால் இப்பொழுது கள்ளர் காலமாகி வழிப்பரி தெருப்பரியாக இருப்பதால் நாணயத்துடன் அனுப்ப இரண்டு கள்ளர்கள்

வேண்டுமென சிவகாசி கருப்ப நாடார் சொல்ல அப்பொழுது விருதுக்கபட்டி ஆதிமுத்து [ நாடார் இதற்கு முன் 25 வருடத்திற்கு முன் சித்திரைத் திருவிழாவில் தப்பி வந்த | வல்லாளபட்டி கள்ளப்பயன் ஒருவனை கொண்டுவந்து வளர்த்து வாலிபமாக்கி சகல வித்தையும் கத்துக்கொடுத்து வைத்திருக்கிறேன் அவன் ஒருத்தனை அனுப்பினால் போதுமென்று சொல்ல சரியென்று எங்களில் சிவகாசி கருப்ப நாடார் முதல் 12 பேர்களும் கள்ளன் ஒருவனுமாக ஆக 13 பேரிடத்திலும் இரண்டு பொதி மாட்டில் நாணயத்தைப் போட்டு வடக்கே பத்திரகாளியம்மன் கோவில் கட்டப்போகும் போது ஆணைமலை முந்தலில் கருவாட்டுப்பொட்டலில் போகும்போது சில கள்ளர்கள் கண்டு வழிப்பரி செய்த நாணயப் பொதியுடன் மாட்டையும் பத்திக்கொண்டு போய்விட்டார்கள் அப்போது கூட வந்த கள்ளனைப் பார்த்து என்னடா மாலட்டாதேவா மோசம் போய்விட்டோம் என்று நாடார்கள் கேட்க மாலாட்டாதேவன் சொன்னது எங்கள் நாட்டில் போனதை திருப்பலாம். என்று சொல்ல எல்லோரும் ஒருமுகமாய் கூடி வல்லாளபட்டிக்கு போய் மந்தையிலிருந்தார்கள் ஒருவரும் இனம் தெரியாமல் பேசாமல் இருந்தார்கள் அப்பொழுது நாடார்கள் என்னடா மாலட்டாதேவா பேசாமலிருக்கிறாய் என்று கேட்க அப்பொழுது மாலாட்டாதேவனுடைய தகப்பனார் செய்யான் அந்த சொல்லைக் கேட்டு மாலட்டாதேவன் என்கிறவன் யார் என்று கேட்க இவன்தான் மாலட்டாதேவன் என்கிறவன் 25 வருடத்திற்கு முன்பு சித்திரைத்திருவிழாவில் தப்பி எங்களிடம் வந்து சேர்ந்தான் என்று சிவகாசி கருப்பநாடார் சொல்ல செய்யான் மகனை கட்டி அழுதபின் எல்லோரும் கிரக்கமாய் இருக்கிற விபரம் என்னவென்று கேட்க எங்கள் உறவின்முறை அனைவர்களும் கூடி பத்திரகாளியம்மன் கோவில் கட்டுவதற்காக வேண்டிய வரி போட்டு வசூல் பண்ணிய பணத்தை மாட்டில் பொதிஏற்றி அனுப்பிவைத்தார்கள் நாங்கள் வரும்போது ஆணைமலை முந்தலில் கருவாட்டுப்பொட்டலில் சில கள்ளர்கள் எங்களையும் அடித்து நாணயத்துடன் மாட்டையும் பத்திக்கொண்டு போய்விட்டார்கள் என்று நாடார்கள் சொல்ல அடையாளம் தெரியுமா என்று செய்யான் கேட்க ஒருவன் குதிரை மேலேரி கிழக்குமுகமாய் போனான் எங்கள் காதில்போட்டு இருந்த சேவருட்டுகளை கழட்டும் போது ஒருவன் காதை இரண்டாக அறுத்துப்போட்டேன் என்று சிவகாசி கருப்பநாடார் சொல்ல அதை கேட்ட உடனே தெற்குதெருவிற்கு போய் வப்பிநல்லபிச்சன் அம்பலகாரனிடத்தில் சொல்ல அவர் சொன்னது நான் திருமோகூருக்கு போய் வரும்போது ராசக்கூரு கருத்தகருப்பன் அம்பலகாரன் குதிரைமேலேரி கொண்டு

அவன் அண்ணன்மகன் காதருபட்டு ரத்தம்வடித்துகொண்டு இன்னும் சில பேருடன் போனார்கள் என்னடா கலவரப்பட்டு போகிரிகள் என்று கேட்க அவர்கள் வழிப்பரி செய்த | சங்கதி முழுவதும் சொல்லி இந்த சங்கதியை ஒருவரிடத்திலும் சொல்லாதே உனக்கு ஐம்பது பொன்தாறேன் என்று கருத்தக்கருப்பன் அம்பலகாரன் சொல்லிவிட்டு போனானென்று வப்பி நல்லபிச்சன் சொல்ல அதை கேட்டு செய்யான் மேலூர் சொக்கப்பன் அம்பலகாரனும் ராசகுரு கருத்தகருப்பண அம்பலகாரனை கண்டு என்னடா கருத்தகருப்பண அம்பலகாராக என்னுடைய சாணார்களையும் மகனையும் அத்து அவர்கள் கொண்டுவந்த நாணயப் பொதியுடன் மாட்டையும் பத்திக்கொண்டு வந்துவிட்டீர்களே அந்த மாட்டுடனே இரண்டு பொதி திரவியத்தையும் திரும்ப கொடுத்து போடா என்று கேட்க அதற்கு கருத்தகருப்பன் அம்பலகாரன் சொன்னது நாங்கள் வழிப்பரி செய்யவும் இல்லை உன் மகனையும் அடிக்கவும் இல்லை உன் சாணார்களையும் நாங்கள் காணோம் என்று சொல்ல உடனே இந்த விவகாரத்தை மேலூர் மூக்காண்டி மலையில் பஞ்சாயமாக நாட்டில் கேட்டு கொள்வோமென்று இருபேரும் அடியும் பிடியுமாக போய் நாட்டில் விவகாரம் சொல்லி கொண்டதில் மேற்படி கருத்தகருப்பண அம்பலகாரன் பெயரில் சந்தேகம் கண்டு நாட்டார்கள் சொன்ன தீர்ப்பு நீயாக கொண்டுபோன நாணயத்துடன் மாட்டையும் திரவியத்தையும் கொடுத்துவிடு என்றும் செய்யனை பழி கொடுப்போம் என்று தீர்ப்பு சொன்னார்கள் அப்போது இந்த தீர்ப்பு சரி இல்லை என்று நிராகரித்தான் அப்போது நரசிங்கம்பட்டி அர்ச்சனப்பெருமாள் அம்பலகாரன் சொன்னது அட கருத்தகருப்பண அம்பலகாரா செய்யானுடைய வல்லமையை சொல்கிறேன் கேள் இதற்கு முன் தெற்குசீமைமகாராஜாவிடம் இந்தவன் லிங்கமநாயக்கன் தொல்லைக்காக இரண்டு பெண் கல்யாணம் செய்து கூட்டி வரும்போது அரிட்டாபட்டி மலையில் லிங்கமநாயக்கன் ஊண்டிய சென்டாவை அழகர்மலைக்கு புடுங்கி எரிந்தவன். அப்படிப்பட்ட செய்யானுடன் சண்டைக்கு போவது சரி இல்லை என்று சொல்ல அப்போது கருத்தகருப்பண அம்பலகாரன் அப்படிபட்ட செய்யானை சண்டைக்கு வரசொல்லென்று குதிரையில் ஏரினான் அப்போ செய்யான் அவன் குதிரை காலையும்வெட்டி அவன் காத்தையும் அறுத்து கீழே விழுத்தாட்டினான் அவன்படை முறிந்து போய்விட்டது அப்போது கருத்தகருப்பண அம்பலகாரன் சொன்னது என் காத்துப்பழி இரண்டையும் கொடுத்துவிடு மாட்டையும் திரவியத்தையும் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ல காத்துபழி இரண்டையும் கொடுத்து மாட்டையும் திரவியத்தையும் வாங்கிகொண்டு

- நாடார்களையும் கூட்டிக்கொண்டு பத்திரகாளியம்மன் கோவில் கட்டிமுடித்தபடியால் * நாங்கள் கள்ளனை பிள்ளையாக வளர்த்தபடியால் அவன் நம்மளை பாதுகாத்து பலியும் கொடுத்து பணத்தையும் மாட்டையும் திருப்பி பத்திரகாளியம்மன் கோவிலும் கட்டிமுடித்து எங்களுக்கு ரொம்ப பாடுபட்டு இருப்பதால் அவர்களுக்கு நாங்கள் செய்கின்ற மரியாதை வருடம் ஒன்னுக்கு வீடு ஒன்னுக்கு கலிபணம் ஒன்னும் பேட்டை ஒன்னுக்கு பணம் அஞ்சும் கடை ஒன்னுக்கு கலிபணம் அரையும் திருவிழா கடைகளில் ரூபாய் மாகானியும் | கலியாணம் கூடினால் மாப்பிள்ளை வீட்டுக்காரன் அஞ்சு பணமும் பெண் வீட்டுக்காரன். அஞ்சு பணமும் எந்தெந்த இடங்களில் சந்தை கூடினபோதிலும் எடுப்பு எடுத்து கொள்வதென்றும் ஏதாவது மரியாதைகள் செய்தால் மூக்காண்டி மலையில் பலி கொடுத்த மூத்த தாரத்து மகன் பெற்று கொள்கிறதென்றும் அவர்கள் எங்களை ஒருவன் அடித்தாலும் பிடித்தாலும் பழியும் கொடுத்து பழியும் வாங்கி சிறையும் மீட்டு கொடுக்கிறதென்றும் கள்ளர்களுக்கு என்ன கேட்டுவந்தபோதிலும் அதில் நேரிடும் சிலவுகள் முழுக்க நாங்கள் போட்டு கொடுப்போமாகவும் இனிமேல் நமக்கு இவனே கள்ளன் இவனை தவிரவேருகள்ளன் இருக்கிறான் என்று சொல்பவனை சாதிக்கு| நீங்கள் செய்வதென்றும் இதற்கு துரோகம் செய்தவனை பத்திரகாளி கெடுத்துப்புடுவாள் | வம்சம் விருத்தியாகமாட்டார்கள் என்று இந்த பத்திரம் மூத்தவனிடத்தில் | இருக்கிறதென்றும் நாங்களும் எங்கள் உறவின்முறை அனைவோர்களும் எழுதிக்கொடுத்த குடிவிலை தாம்பூசாசன பத்திரம் மேலே கண்ட நாடார்கள் மன சம்மதத்தின் பெயரில் இந்த படி திருமாலுநாயக்கர் சாட்சி அரிவென பத்திரகாளி சாட்சி அரிவென மகாலிங்கம் சாட்சி அரிவென அழகர் சாட்சி அரிவென மீனாட்சி சொக்கலிங்கம் சாட்சி அரிவென சிங்கம்பிடாரி சேவுகப்பெருமாள் சாட்சி அரிவென காசி ராமேஸ்வரம் சாட்சி அரிவென மஞ்சமலையான் சாட்சி அரிவென தில்லையம்பல நடராசர் சாட்சி அரிவென பழனியாண்டவர் சாட்சி அரிவென இந்த பத்திரம் மதுரை மைய மண்டபம் | | முத்துவேல் ஆசாரி எழுதியது.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...