புதுக்கோட்டையில் 700 ஆண்டுகளுக்கு முன்பு தென்க வீர நாடன் என்பவரால் அமைக்கப்பட்ட குளத்திற்கான கல்வெட்டு கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் செல்லும் வழியில் அமைந்துள்ள எல்லைப்பட்டி பள்ளி வளாகத்தில் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினரால் வழங்கப்பட்ட கல்வெட்டு மற்றும் தொன்மை பாதுகாப்பு பயிற்சியின் போது 700 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்ட தகவலடங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரங்கன் பள்ளி வளாகத்திலேயே கிடந்த ஒரு துண்டு கல்வெட்டை அடையாளம் காட்டியதைத்தொடர்ந்து தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் தலைவர் மேலப்பனையூர் ராஜேந்திரன், அமைப்பின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ,ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோரால் படியெடுக்கப்பட்டது.
இக்கல்வெட்டு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும், புதுக்கோட்டை தொன்மை பாதுகாப்பு மைய பொறுப்பாளருமான ஆசிரியர் மணிகண்டன் கூறியதாவது,
எல்லைப்பட்டி பள்ளி சுற்றுசுவரின் அருகிலேயே பழமையான நீர்வரத்து மற்றும் வடிகால் அமைப்புடன் பழமையான குடிநீர்க்குளம் உள்ளது .
இது #700 ஆண்டுகளுக்கு முன்பு தென்க #வீர_நாடன் என்பவரால் அமைக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் வகையில் "ஷஸ்....ஸ்ரீ இக்குள(ம்).....(தெ)ன்க..வீர நாடன்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு எழுத்தமைதியின்
அடிப்படையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது.
நீர் மேலாண்மையில் தமிழர்கள்
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் தமது செல்வத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட்டு மக்களின் குடிநீர் மற்றும் வேளாண் தேவைக்கென குளங்களையும், நீர்ப்பாசனக் கட்டமைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதை இத்தகைய கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
No comments:
Post a Comment