கொங்கு வெள்ளாளர் வரலாற்றுப்பதிவும் மிகத்தெளிவாக இன்றைய நாடார்களையே ''சான்றோர்'' என்று சுட்டிக்காட்டுகிறது. அரசனுக்காக தம் உயிரினை துறப்பவனை சான்றோர் என்கிறது ஒரு பாடல் (அகப்பாடல் ).
இது மேடையில் மட்டுமே ஒலிக்கும் ''மண்டியிடாத மாணம்'' எனக்கூறும் அரசியல் சொற்றோடர் அன்று நிஜமானது! ''இவ்வூ ர் ஈழச் சான்றான் முன்னுற்றுுவ பெருமானாகிய சோழ வேள் ஏனாதி''யரின் சித்தரிப்பேயாகும்.
இன்றும சா ன்றோர் கோவில் உண்டு. ஐவர் வணக்கம் நிகழ்கிறது. ''சான்றோர் கோவில்''குறித்து சுட்டுவார் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் சூத்திர உரை )இதை மெய்ய்பிக்கும் அருமையான சான்று தர்மபுரியில் உள்ளது.
//ஆநிரை கவர்தல் வெட்சிப்போரில் இறந்தவர் அமைந்த கல் வேடியப்பன் கல் என்றும் கரந்தைப்போரில் இறந்தவன் கல் ''சாணாரப்பன் கல்'' (சாண்றாரப்பன்) என்று கூறும் வழக்கு தகடூரில் (தர்மபுரி) இன்றும் இருப்பது காலத்தை கடந்து நிற்கும் சொல்வெட்டு.
வாளால் வடக்கிருந்து உயிர்விடும் சான்றோர் எனும் வீரர்கள் குறித்து அறிவிக்கும் பாடல் இது.
//கரிகால் வளவனோடு வெண்ணிறப்பறந்தலைப்
பொறுத்து புண் நாணிய சேரலாதன்
அழிகள அரங்கின் வாள் வடக்கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனோடு செலீஇயர்// மாமூலர்
வேந்தனோடு வாளால் வடக்கிருந்து உயிர் விட்ட வீரர்.அரசனின் இன்ப துன்பங்களில் உடனிருந்தோ ஆவர்.போரில் வென்று காட்டுவது அல்லது உயிர் துறத்தல் மனுக்குல மன்னர் (மூவேந்தர்) நெறியாகும். .-ராசின்
No comments:
Post a Comment