புகழ்பெற்ற பாண்டியவரசை அழித்துப் 'பாண்டிய குலாந்தகன் என்ற விருதையும் சூடிக்கொண்ட வாணனை அவர் காலமேக புலவர் இகழ்ந்து சொல்லிய செய்யுள் இது.
சொக்கன் மதுரையில் தொண்டர்க்கு முன்னவிழ்த்த பொய்க்குதிரை சண்டைக்குப் போமதோ-மிக்க கரசரணா வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம் அரசரணா மாவலிவா னா! (211) இதன்பாற் குறிப்பிடப்படும் வாணன் 'திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்' என்பர்.
விளக்கம்:-
மாவலிவாணனே! சொக்கேசப்பெருமான், அந்நாளிலே தம் தொண்டரான வாதவூரடிகளின் பொருட்டாக, மதுரை நகரிற் கொண்டுவிட்ட பொய்க்குதிரைகள், போர்க்களத்திற்குப் போகக் கூடியவையோ? அவை போகாவன்றே! அது போலவே, பருத்த காலுங் கையுங்கொண்டு உருவால், பெரிதாக விளங்குபவனே! விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்று திரியும் இழிதொழிலாளர்க்கு அரசனே நீதான் இந் நாட்டு மக்களைக் காத்துப் பேணுதற்கு ஏற்ற அரசாகிய அரணாவாயோ? 'நீ ஆக மாட்டாய்
No comments:
Post a Comment