நமது பாரதநாட்டின் மேற்கு வங்காளமும், அதைச் சுற்றியுள்ள மத்தியபிரதேசம், ஒரிசா போன்ற போன்ற மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடைக்கிய நிலப்பரப்புகள் பஞ்ச கவுடம் என முன்பு அழைக்கப்பட்டது.
கவுட தேசத்தவர்களை கெளடுகள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு,பின்னர் அதுவே ஒரு சாதியாகவும் உருவாகியுள்ளதாக கருதமுடிகிறது.
சோழர் தொடர்பு;
சிதம்பரம் கோவில் ஸ்தல புராணம் கி.பி 13 ஆம் நூற்றாண்டளவில் உமாபதி சிவாச்சாரியரால் எழுதப் பெற்றுள்ளது; அப்புராணத்தில், சோழருக்குரிய ஆத்தி மாலையணிந்த "கவுடேஸ்வர மனு" சிதம்பரம் கோவிலை ஸ்தாபனம் செய்த செய்தி பதிவாகியுள்ளது.
மேலும், ஆந்திரபிரதேசத்தின் கடப்பா மாவட்ட ஆவணங்களில், கெளடுகள் சோழ வம்ஸத்தைச் சேர்ந்தவர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ள செய்திளையும் அறியமுடிகிறது.
இவர்களுக்கென தனியாக கவுடபுராணம் என்றொரு புராணம் உள்ளதாகவும் அறிந்துள்ளோம்.
நாடார்களுடன் தொடர்பு;
கொங்குநாட்டு கருமாபுரம் மற்றும் அவல்பூந்துறை சான்றோர்குல செப்புப் பட்டயங்களில்,சான்றோர் சமூகத்தவர்க்கும் கவுடு பட்டம் உரிமையாகவுள்ள செய்திகள் பொறிக்கப் பெற்றுள்ளது.
கொங்குநாட்டு முசிறி மற்றும் கரூர் பகுதிகளில் சான்றோர் சமூகத்தவர்கள் கவுண்டர் என அழைக்கப்படுகின்றனர்.
நாடன், நாடான் என்பவை
நாட்டை சேர்ந்த, ஊரை சேர்ந்த, நாட்டை ஆண்ட, நாட்டை ஆளும், ஊரை ஆளும், ஊர் தலைவன், நாட்டின் தலைவன், அரசன்
என பொருள் கொள்ளலாம்.
கௌடு என்பதும் தெலுங்கில் அதே அர்த்தம் கொண்டது.
இவ்வாறே
மத்திய பிரதேச அரச வம்ச கல்சூரி மாளவியா தேச மால்வி வம்சம்
இதே பொருள் கொண்டது.
ராஜஸ்தான்
மேவார் பகுதி மேவாடா (கல்சூரி அரசர்கள்)
பொருளும் ஒன்றே
நாடார் = கௌடு = மால்வி = மேவாடா
அ.கணேசன் நாடார்,
தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்,
சென்னை.
No comments:
Post a Comment