அருப்புக்கோட்டை, பாண்டிய மன்னர்களின் வாரிசுகள் கட்டிய சிவன் கோவில் (நாடார் கோவில்) ( நன்றி Rajah Nadar)


2012 ஆம் ஆண்டு, அன்றைய முதல்வர் ஜெயலலிதா "சேர சோழ பாண்டிய மன்னர்களாக தென்னிந்தியாவை ஆண்ட அரசர்களின் வம்ஸாவழிகளே நாடார்கள்" என அறிவித்தார், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் க்கும் கடிதம் எழுதினார்.

நாடார்கள், சேர சோழ பாண்டிய வம்ஸாவழிகளா? ஆதாரம் எங்கே?

"சப்தகன்னியருக்கும், சிவனுக்கும் பிறந்து, பத்திரகாளியம்மனால் வளர்க்கப்பட்டவர்கள் நாடார்கள்" - இது நாடார்களின் வரலாறு.

நாடார்களின் வரலாற்று நூல் வலங்கைமாலை, மற்றும்  அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு அம்மானை இவை சப்தகன்னியர், நாடார் வரலாறு பற்றி சொல்கின்றன.

இயல்பில் எப்படி நாடார் வரலாறு இருக்கிறது?

- கொடுங்கல்லூர் பகவதி (பத்ரகாளி) கோவில் [சேர அரசர்களின் குலதெய்வ கோவில்]. சேர அரசர்கள் கட்டிய கோவில். இங்கே சப்தகன்னியர், சிவன் சிலைகள் ஒருங்கே பிரதானமாக வைக்கப்பட்டுள்ளன. 

- மதுரை மீனாட்சியம்மன் கோவில்
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
- பாபநாசம் சிவன் கோவில்
- சங்கரன் கோவிலில் இருக்கும் சிவன் கோவில்
- ராமேஸ்வரம் சிவன் கோவில்

இவை அனைத்தும் பாண்டிய மன்னர்கள் கட்டிய கோவில்கள். இங்கேயும் சிவன் சன்னதிக்கு வெளியே, வலது புறம் சப்தகன்னியருக்கு 2 முதல் 3 அடி உயரமுடைய சிலைகள் இருக்கின்றன.

தமிழ் நாடு, கேரளா பகுதிகளில் 99%  இந்து கோவில்களில் சப்தகன்னியர் பீடம் உள்ளது (எந்த நாயர் கோவில்களிலும் இல்லை).

அருப்புக்கோட்டை, பாண்டிய மன்னர்களின் வாரிசுகள் கட்டிய சிவன் கோவிலிலும் (நாடார் கோவில்) சப்தகன்னியர் சிலைகள் சிவன் சன்னதிக்கு வெளியே வலது புறம் இருக்கின்றன.

சேரனும், பாண்டியனும் கட்டிய கோவில்களில் நாடார்களின் தாய், தந்தையரான  "சப்தகன்னியரின், சிவனின்" சிலைகளை ஏன் வைக்கவேண்டும்?

நாடார் வீடுகளில் காமராஜர் ஐயா, செல்வின் நாடார் அண்ணன் படங்கள் உண்டு.

சேரனும், பாண்டியனும் கட்டிய கோவில்களில் அவனின் தாய், தந்தை சிலைகள் உண்டு.

சேரனும், பாண்டியனும் நாடார்களே, அதனாலேயே "சப்தகன்னியரின், சிவனின்" சிலைகளை அவர்கள் கட்டிய கோவில்களில் வைத்துள்ளனர்.

சோழ கோவில்களில் ஆய்வு இன்னும் செய்யவில்லை. அதன் பின்னர் இன்னும் விரிவாக எழுதுவேன்.

இணைக்கப்பட்டுள்ள படத்தில் இருக்கும் செய்தி: அதிவீர பாண்டிய வம்சம் சாண்டில்ய மகரிஷி கோத்திரம் பத்தன் உத்தண்ட நாடார் குமாரர் ஆவுடை நாத நாடார் குமாரராகிய  அதிவீர ராம பாண்டிய நாடன் சிதம்பர நாடன் தில்லையம்பல நாடன் சபாபதி நாடன் இவர்களால் அமுர்தலிங்க சுவாமியும் ....

..... இங்கிலீஷ் வருடம் 1906

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...