"மாமன்னர் பாண்டிய சக்ரவர்த்திகள் மதுரையை மீட்டெடுத்த ஸ்ரீ முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டிய நாடான்"
பிறந்தநாள் விழா
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1244) காலகட்டத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னர்
தனது இளம்வயதில் மூன்றாம் குலோத்துங்கன் படையெடுத்து வந்து மதுரையில் உள்ள அரண்மனை மண்டபங்களைத் தரை மட்டமாக்கியதை கண்டு மனம் வெதும்பிய பாண்டிய மன்னன்சோழ நாட்டை வென்று பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த வேலையில் தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்று சோழ நாட்டைக்கைப்பற்றிக் கொண்டார். சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும் உறையூரையும் தீக்குள் இரையாக்கினான், அங்குள்ள மணி' மண்டபங்களையும் மாட மாளிகைகளையும்இடித்துத் தரை மட்டமாக்கினார். இம்மன்னன் தனது தமிழ் பற்றினை நிரூபிக்கும் விதமாக பட்டினப்பாலை எழுதிய உருத்திரங்கண்ணணாருக்குகொடுத்த பதினாறு கால்மண்டபத்தினை மட்டும் எரிக்காமல் விட்டுவிட்டார்.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களின்இரண்டாம் தலைநகராகிய பழையாறைசென்று அங்குள்ள அரண்மனையில் வீராபிடேகம் செய்து கொண்டார். பின்னர்ப் பாண்டிய நாடுதிரும்பிச் செல்லும் வழியில், பொன்னமராவதியில்உள்ள தனது அரண்மனையில் தங்கினார். நாட்டை இழந்த சோழமன்னரை அழைத்துவரச்செய்து அவருக்குச் சோழ நாட்டைத் திரும்ப அளித்து அவரைத் தனக்குத் திறை செலுத்தி ஆட்சி செய்து வருமாறுபணித்தார்.
அதனால் சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன் என்ற பட்டப்பெயர் கிடைத்தது.
இவர் புகழ் பாடும் கல்வெட்டுகள் மதுரை மீனாட்சியம்மன்கோயில்
கல்வெட்டு செய்திகளாக இருக்கிறது.
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி சன்னதி முன்புறமுள்ள ஒன்பது நிலை கோபுரத்தை இம்மன்னரே கட்டினார். கோபுரத்தின் இரண்டாம் நிலையில் உள்ள தூணில் பாண்டிய மன்னரின் கல்வெட்டும் காணப்படுகிறது.
No comments:
Post a Comment