இராவணன் சீதையைக் கடத்தியதைக் கொண்டாடிய நாடார்கள் (நன்றி- SivaMurugan)


இராவணன் சீதையைக் கடத்தியதைக் கொண்டாடிய நாடார்கள்   

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தின் முதல் நாளை  நாடார்கள் தமது தேசியத் திருநாளாகக் கொண்டாடுதல் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது. 

ஆடி முதல் நாளே இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற நாள். 

இராவணன் சீதையைக் கடத்திச்  சென்ற நாளை வெற்றி விழாவாக நாடார்கள் கொண்டாடியதாக 1885ஆம் ஆண்டின் திருநெல்வேலி அரசிதழ்  (Gazetteer) சொல்வதாக  ஹெரிட்டேஜ் ஜுலை 2018 இதழில் உள்ளது.

மாறைத்திரு கால்டுவெல் 'திருநெல்வேலி சாணார்கள் ' என்ற நூலில் (திரு கோவேத சுவாமிநாதன் தமிழாக்கத்தில் கால்டுவெல் ஆய்வு மையம் வெளியீடு - பக்கம் 58) பின்வருமாறு சொல்கிறார்:

          "ஆடி முதல் நாள் சிலோனை ஆண்ட அசுர அரசனான ராவணனுடைய நினைவு நாள். அது திருவிழாவாகக்  கொண்டாடப்படுகிறது.    பிராமணர்களின் வீரக் கடவுளான ராமனின் மனைவி சீதையை அந்த நாளில்தான் இராவணன் சிறை எடுத்தான். ராவணனுடைய பிரதம அமைச்சரான மகோதரன் ஒரு சாணான் என்று நம்பப்படுகிறான்.சாணார் சாதியில் தோன்றிய உறுப்பினன் ஒருவனால் வரலாற்றுப் பெருமை சாணார்களுக்குக் கிடைத்தது. அவர்கள் ராமனின் துக்கத்திலும் ராவணனின் மகிழ்ச்சியிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்." 

திராவிடப் பழங்குடிகளான கோண்டுகள் மற்றும் பில்லர்கள் (Gonds and Bhils) போலவே நாடார்களும் பார்ப்பன எதிர்ப்பில் முனைப்பாக இருந்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.! நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர் புலவர் செ.ராசு கவுண்...