வலங்கை வாழ்த்து''ம் சோழர்களும் ( நன்றி - Vignesh waran)


கடந்த 50 ஆண்டுகளில்  தமிழ்மரபில் சோழருக்கு சில பல குழுக்கள் உரிமை பாராட்டுகின்றன்றன. ஆனால் தமிகத்து சமூக வரலாற்று ஆணவங்களை பரிசீலித்துப் பார்த்தால் சோழர்களின் வீழ்ச்சியில் எழுச்சி பெற்ற குழுக்களாகவே அவை தென்படுகின்றன. முதன் முதலாக கோவில் மரியாதைகளை வன்னியர்கள் (ஆடுதுறை) பெறத் தொடங்கியதிலிருந்து இதை பார்க்கலாம். ஆனால் தமது சமூக வரலாறுகளில் ''சோழகுலம் நாங்கள்'' என்று உரிமை பாராட்டுவது ஒரு பிரகடணமாக   அறிவித்துக் கொள்வதும் சான்றார் (நாடார்) மரபினரே மட்டுமே  ஆவர்.
         ''வலங்கை வாழ்த்து'' எனும் தமது   சமூக ஆவணத்தில்  // செம்பியரான சோழருக்கு வாய்த்த தம்பி நாடாக்கள் // என்றும் தயக்கமே இல்லாமல் ''சோழ குலம் நாங்கள்''என்றும் உரிமை பாராட்டுகிறார்கள்.  // 1600 களிலேயே  சோழ வள நாடர்//என்று ஒப்பம் இட்டவர்களும் அவர்களே ஆவர் - எவ்வளவு தெளிவாக  ''பூவேந்தியசோழன்'' பட்டம் பெற்றவர்களாக பிரகடனப்படுத்துகிறார்கள். ''வலங்கை வாழ்த்து'' ஒரு பிரகடனம் போல் தெளிவுப் படுத்துகிறது.
                            // தாதை முன் வந்த போதலர் தெரியல் 
                             விக்கிரம நாரணன் சக்கரம் அடிப்படுத்து 
                                அருளிற்கவன் அவதரித்த ஒன்பதாம்  நாளால் 
                               வாழியர் பூவேந்திர சோழன் மணி மௌலி புனைந்து //-வலங்கை வாழ்த்து  
              தமிழகத்தில் 350க்கும் மேற்பட்ட சமூகக்குழுக்கள் உள்ளன. அவை தம் வரலாற்று ஆவணங்களில் இதுபோல் உரைத்தாள் சோழர்கள் உரிமை குறித்து மாற்றி சிந்திக்கலாம்.
                           விசயநகர வேந்தர்களின் ஆதரவு பெற்று ஆந்திரப்பகுதியிலும்   தமிழ்ப் பகுதிகளிலும் ஆடசி செய்த உறையுயிர் சோழர்கள் தம்மை பூவேந்திர சோழன் மரபினர் என் உரிமை பாராட்டுகின்றனர்.
            தூத்துக்குடி- சாத்தான்குளம்-பெய்யங்குளம் வட்டம் பேய்க்குளத்தை சேர்ந்த காட்டேரி மங்கலம் கல்வெட்டு  ''பூவேந்திர சோழன் நல்லூர்'' என்க்கிறது. பூவேந்திர சோழன் என்ற பெயர் உறையூர் சோழனுடையது என திருக்காளத்தி புராணம் குறிப்பிடுவதை அறிஞர்கள் சிலர் சுட்டியுள்ளது கவனத்திற்குரியது..
                              //தாடாழன்  சோழன் தனிச்சோழன் தேசமதில்
                 நாடாண்மை பெற்று நன்மை கிட்டிக்கொண்டவர்கள்// 
           எவனாவது ஒரு ஐரோப்பியர் வந்து சொன்னால்தான் ஏற்பார்களோ?

-Rachin

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...