ஏனாதி நாதர் ( நன்றி Rachinn Rachinn Rachinn. )


சேக்கிழார், ஏனாதி நாதர் குறித்து பாடும் வரிகளில் இப்படித்தான் பாடுகிறார்.
//மன்னர்க்கு வென்றி வடிவாட்  படை பயிற்றும்
நன்மைத் தொழில் விஞ்சை யில் தலைமை சார்ந்துள்ளார்// -( 610)
மன்னர்குலத்திற்கு படை பயிற்றும் முற்குலத்தோரில் ஏனாதி வருவார். ஏனாதி என்பது வேளிர் என்றும் சொல்லலாம். தற்போதைய நிலையில் குமரியில் ஆசான் என்றும் திருநெல்வேலி, பிற பகுதிகளில் "கருக்குபடையர்" என்றும் இவர்கள் அடையாளம் காணலாம். எனினும் இன்று பேதம் மறைந்து விட்டது. ஆயின், நாடார் எனும் பகுப்பு இது மட்டுமேயல்ல!!! 

"நள்ளார்களும் போற்றும் நன்மைத் துறையின் கண்
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள்
தள்ளாத தங்கள் தொழிலுரிமைத் தாயத்தின்
உள்ளான் அதிசூரன் என்பான் உளனானான் (612).
    மன்னர்களே நினைத்தாலும் தள்ள முடியாத உரிமை என்பதாகும். அதிசூரனும் ஏனாதி நாதரின் மரபினன்தான் என்பது இன்னொன்றாகும். 
     
பிற்காலத்தில் பலரும் ஏனாதி ஆனார்கள்.... சாதிப் பெயர் முன்னொட்டுடன் இருப்பர்...!அசலான ஏனாதி களுக்கு அச்சிக்கல் கிடையாது.! 
      தான் விரும்புவதை எல்லாம் சேக்கிழார் தலையில் சுமத்தினால் அவர்தான் என்ன செய்வார்?

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...