அனைத்து வரலாற்று காவியங்களும் நாடான் என பெருமைபடுத்தி சான்றோர்குல நாடார்களை நிலைநிருத்துகிறது
பெருங்கள் நாடன் பேகனும்” -- சிறுபாணாற்றுப்டை,வரி 87.
“நளிமலை நாடன் நள்ளியும்” -- மேலது,வரி 107.
“நளிமலை நாடன் நள்ளியவன்” –- புறநானூறு 150.
“மலைகெழு நாடன் மாவண் பாரி” -- புறநானூறு 236.
“பசுங்கழை குன்ற நாடன்” -- குறுந்தொகை 74.
“கானக நாடன்” -- குறுந் 54. ஐங்குறுநூறு 253.
“குன்ற நாடன்” -- குறுந் 24,36,74,90,230,327,333,342,383.
“குன்று கெழு நாடர்” -– மேலது 87.
குறுந்தொகையில் நாற்ப்பதுக்கும் மேற்ப்பட்ட பாடல்களில் நாடன் காணப்படுகிறது.
“வீழும் அருவி விறன்மலை நன்னாடன்” –- திணைமொழி ஐம்பது.
“நீள்சோலை நாடனை” -- ஐந்திணை எழுபது 14.
“புறவணி நாடன்”-- ஐங்குறுநூறு 424.
“ஓங்கு மலை நாடன்” -- குறுந் 150,88,241.
“வரையக நாடன்” -- மேலது 3
“மழைக்குரல் மாமுரசின் மல்குநீர் நாடன்” -- களவழி நாப்பது 3.
“நாடறிய #நாடார் சபையகத்தே பாஞ்சாலி
நாடறியத் தூச்சுரிந்த நாசத்தால்”- பெருந்தேவனார் ,பாரதவெண்பா,உத்தியோக பருவம்,பாடல் .52
இதைப்போன்று நூற்றுக்கும் மேற்ப்பட்ட புராண நூல்களில் “நாடன்” என்ற சொல் மூவேந்தர்களை புகழ பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டினை ஆள்பவர்,நிலத்தின் உரிமையாளர் மற்றும் நாட்டின் பாதுகாவலலர்களை 'நாடான்' (ஈழகுலம்) என்றும், பழங்குடி மக்களை நாடாழ்வார்,நாடாவார்,நாடார்,நாடாவி என்றும் அழைத்திருக்கிறார்கள்.
இதையே நாடாவா,நாடாவாரு, என ஆந்திராவிலும். பண்ட் அல்லது பில்(லு) (திருவாங்கூர் வில்லவ நாடார்களுக்கு சமமான) மற்றும், கவுடு என கர்நாடகத்திலும்(Karnataka Inscriptions) அழைக்கப்படுகின்றனர்.
நாடனிலிருந்து நாடான் வேறுபட்டதா? நாடாழ்வானிலிருந்து ,நாடாவான், நாடான் வேறுபட்டதா? நாடானிலிருந்து நாடார் வேறுபட்டதா?
ராசன் வேறு அரசன் வேறு ராசா வேறா? அண்ணனை அண்ணா, அண்ணே(ன்), என்று கூபிடுவதால் உறவு மாறிவிடுமா? அப்பன் அப்பாவாகவும், தம்பி தம்பீ எனவும் விழிக்கபடுவதில்லையா? ஆகவே முன்னாளில் நாடன் என வழங்கப்பட்டச் சொல் பிற்காலத்தில் நாடாழ்வான் என்றும், நாடாவான் என்றும் நாடான்,நாடார் என்றும் வழங்கலாயிற்று என்பதே உண்மை.
நாடார்களே நாடான் ,நாடாள்வான், நாடன் என அழைக்கப்பட்டனர் இதற்க்கு எண்ணற்ற ஆதாரங்கள் கடலளவில் உள்ளன.
1.) நாடான் - A Polite epithet in the South, applied to the shaanars.(Rev . J.P.Rottler,Tamila English Dictionary,1834)நாடான் என்பது சாணருக்குரிய பட்டப்பெயர்.
2.) NADAVAN (நாடாவான்) – A head of Chandrars –Dr. Gundart,Malayalam English Dictionary.
3.) “Nadan is a rular of Nadu or district, it is the usual title of the Southern Chandrans – Census of India,1891 Vol XIII P.” நாடான் என்பவன் ஒரு நாட்டை அல்லது ஒருபகுதியை ஆள்பவன், இது தென்னக சான்றாங்களின் வழக்கமான பட்டமாக உள்ளது என கலெக்டர் Sir H.W.Stuawart எழுதியுள்ளார்.
4.) நாடான்- A term applied to the cast if toddy drawers, சாணாருக்குரிய பட்டப்பெயர்.(Rev.Miron winslow ,Tamil English Dictionary)
சென்ற இரு நூற்றாண்டுகளில் ,கால்டுவெல் உட்பட ஐரோப்பியர் சிலரும்,இங்கிருந்த வரலாற்றாசிரியர் சிலரும், நாடார் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளாது இழிவுபடுத்தியே எழுதியுள்ளனர். ஆயினும் சாராதக்கர்,எட்கர் தர்ஸ்டன்,H.R பேற்றி போன்ற பலர் “நாடார் என்பது ஒரே சாதியல்ல’ என்ற உண்மையை உணர்ந்து எழுதியுள்ளனர். நாடார் எனப் பொதுப் பெயரால் இன்று அழைக்கப்படும் இச்சமூகமானது ,பல உட்கிளைகளையும்,அவற்றிடையே ஏற்றத் தாழ்வு களையும்,வெவ்வேறு தொழில்களையும்,பல் வேற்றுபட்ட வழக்கங்களையும் உடையது என உணர்ந்ததால்தான் உண்மையை அறிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment